ரூ.1,000 கோடி பாக்கி : ரேஷன் கடைகள் மூடல்? Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ரூ.1,000 கோடி பாக்கி
ரேஷன் கடைகள் மூடல்?

பொது வினியோக திட்ட மானிய நிலுவை, 1,000 கோடி ரூபாயை எட்டியதால், கூட்டுறவு ரேஷன் கடைகள் மூடும் நிலையில் உள்ளன.
@Image1@இத்துறை சார்பில், 32 ஆயிரத்து, 546 ரேஷன் கடைகள் செயல்படுகின்றன. பெரும்பாலும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களே நடத்துகின்றன. ரேஷன் பொருட்களுக்கான,

'கமிஷன்' குறைவால், கடை வாடகை, ஊழியர்கள் ஊதியம், மின் கட்டணம் போன்றவற்றுக்கு, அரசு பொது வினியோக திட்டம் மானியம் வழங்குகிறது. ஆண்டுதோறும், மானியமாக, 400 கோடிரூபாய்க்கு மேல் தர வேண்டும். 2011 முதல், 30 - 40 சதவீதம் மட்டுமே ஒதுக்கப்படுகிறது. ஆறு ஆண்டுகளில், 882.93 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டது; 540 கோடி ரூபாய் வரை பாக்கி உள்ளது. மேலும், 2017 - 18க்கு இதுவரை ஒதுக்கவில்லை. மானிய நிலுவை, 1,000 கோடி ரூபாயை எட்டியதால், ரேஷன் கடைகளை தொடர்ந்து நடத்த முடியாமல், கூட்டுறவு சங்கங்கள் தடுமாறி வருகின்றன.


தமிழ்நாடு மாநில, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அனைத்து பணியாளர் சங்கத்தினர் கூறுகையில், 'ஐந்து ஆண்டுகளாக, மானியம் முறையாக வழங்குவதில்லை.

Advertisement

கடன் தள்ளுபடிகளால், பல சங்கங்கள் நலிவடைந்தன. சங்க ஊழியர்களுக்கே, சம்பளம் வழங்க முடியாத நிலை உள்ளது. மானியத்தை வழங்கா விட்டால், ரேஷன் கடைகளை மூட வேண்டிய நிலை ஏற்படும்' என்றனர்.- நமது நிருபர் -

Advertisement

வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
04-ஜூன்-201815:37:24 IST Report Abuse

SIVA. THIYAGARAJANமிக நல்லது மூடி விடுங்கள் .ஊழல் குறையும் .

Rate this:
Jaya Ram - madurai,இந்தியா
04-ஜூன்-201813:12:47 IST Report Abuse

Jaya Ramதமிழ் நாடு அப்படித்தான் இருக்கும் பின் ஏண் இங்கே வேலைக்கு வடபகுதி இந்தியர்களை அனுப்புகிறீர்கள் பிச்சைக்காரர்களிடமே பிட்சை எடுக்கும் முட்டாள் பிச்சக்காரர்கள்தானே நீங்கள்

Rate this:
BoochiMarunthu - Paradise papers,பனாமா
03-ஜூன்-201816:42:18 IST Report Abuse

BoochiMarunthuபோலி கார்பொரேட் முதலாளிகளுக்கு பல லட்சம் கோடிகள் வாரி வழங்கப்படுவதை கேள்வி கேட்காமல், ஏழைகள் வாங்கும் ரேஷன் நிறுத்த சொல்லும் மனிதாபினம் இல்லாத கூட்டம் , வெட்க படவேண்டும் .

Rate this:
மேலும் 13 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X