இடைத்தேர்தல் தோல்வியால் பா.ஜ., முதல்வர்களுக்கு சிக்கல்! மஹா., உ.பி., மாநிலங்களில் அதிருப்தியாளர்கள் அதிகரிப்பு Dinamalar
பதிவு செய்த நாள் :
சிக்கல்!
இடைத்தேர்தல் தோல்வியால் பா.ஜ., முதல்வர்களுக்கு..
மஹா., உ.பி., மாநிலங்களில் அதிருப்தியாளர்கள் அதிகரிப்பு

புதுடில்லி : சமீபத்தில் நடந்த இடைத் தேர்தல்களில், பா.ஜ., மோசமான தோல்வியை தழுவிய நிலையில், 'உ.பி., மஹாராஷ்டிரா மாநிலங்களில், முதல்வர் பதவியில் உள்ள, பா.ஜ., தலைவர்கள் கடும் சவாலை சந்திக்க நேரிடும்' என, அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

B.J.P,BJP,Bharatiya Janata Party,Uttar Pradesh,உத்தரபிரதேசம்,பா.ஜ,இடைத்தேர்தல்,தோல்வி,பா.ஜ.,முதல்வர்களுக்கு,சிக்கல்,மஹா., உ.பி., மாநிலங்களில்,அதிருப்தியாளர்கள்,அதிகரிப்பு


உ.பி., மஹாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில், சமீபத்தில் நடந்த இடைத் தேர்தல்களில், பா.ஜ.,வுக்கு மோசமான தோல்வி கிடைத்தது; இது, பா.ஜ., மூத்த தலைவர்களை அதிர்ச்சி அடையச் செய்தது.

எதிர்க்கட்சிகள் :


மஹாராஷ்டிராவில், பால்கர் லோக்சபா தொகுதியில் வெற்றி பெற்ற, பா.ஜ., பண்டாரா - கோண்ட்யா லோக்சபா தொகுதியில் தோல்வியை தழுவியது. உ.பி.,யில், கைரனா லோக்சபா தொகுதிக்கான இடைத் தேர்தலில், பா.ஜ., தோற்றது. நுார்புர் சட்டசபைத் தொகுதியிலும், அக்கட்சிக்கு தோல்வியே கிடைத்தது.

இதனால், முக்கியத்துவம் வாய்ந்த, உ.பி., மஹாராஷ்டிரா, பீஹார் ஆகிய மாநிலங்களில், பா.ஜ.,வுக்கு எதிராக அணி திரண்டு வரும் எதிர்க்கட்சிகள் உற்சாகமடைந்து உள்ளன. மஹாராஷ்டிராவில், பால்கர் தொகுதியில், பா.ஜ., வெற்றி பெற்றது, அம்மாநில ஆட்சியில், அதனுடன் கூட்டணி சேர்ந்துள்ள, சிவசேனாவை எரிச்சலடையச் செய்துள்ளது. பல ஓட்டு சாவடிகளில், மின்னணு ஓட்டு இயந்திரத்தில் தில்லுமுல்லு நடந்துள்ளதாக, சிவசேனா தலைவர், உத்தவ் தாக்கரே குற்றஞ் சாட்டியுள்ளார்.

சமீப காலமாக, பா.ஜ.,வை கடுமையாக விமர்சித்து வரும், சிவசேனா, பா.ஜ.,வுடனான, 30 ஆண்டு கூட்டணியில் இருந்து விலகும் என்ற யூகங்கள் வலுவடைந்து உள்ளன. லோக்சபா தேர்தலில், தனித்து போட்டியிட போவதாக, 'சிக்னல்' அளித்து வரும் உத்தவ், 'தேர்தல் கமிஷனும், பா.ஜ.,வும் கூட்டு சேர்ந்து சதி செய்கின்றன' என, குற்றஞ்சாட்டி வருகிறார்.

மஹாராஷ்டிராவில், பா.ஜ.,வைச் சேர்ந்த முதல்வர், தேவேந்திர பட்னவிசை கவிழ்ப்பதற்கான வாய்ப்புக்காக, சிவசேனா காத்திருப்பதாக, அரசியல் விமர்சனர்கள் கூறுகின்றனர். வரும் லோக்சபா தேர்தலில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, பா.ஜ.,வை, காங்., உடன் கூட்டணி சேர்ந்தாவது தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில், சிவசேனா தலைவர் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

மஹாராஷ்டிராவில், இடைத் தேர்தல் நடந்த, பால்கர், பண்டாரா - கோண்ட்யா தொகுதிகள், பா.ஜ., வசம் இருந்தவை. இவற்றில், பண்டாரா - கோண்ட்யா தொகுதியை, தேசியவாத காங்., கடும் போராட்டத்துக்கு பின், வெற்றிகரமாக கைப்பற்றி உள்ளது, முதல்வர், தேவேந்திர பட்னவிஸ், மத்திய அமைச்சர், நிதின் கட்கரிக்கு பெருத்த பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இத்தொகுதி, பா.ஜ.,வின் கோட்டையாக கருதப்படும், விதர்பா பகுதியைச் சேர்ந்தது.

மஹாராஷ்டிராவில், 48 லோக்சபா தொகுதிகளும், உ.பி.,யில், 80 லோக்சபா தொகுதிகளும் உள்ளன. இம்மாநிலங்களில் கிடைத்த இடைத் தேர்தல் முடிவுகள், மோடிக்கு எதிராக, மெகா கூட்டணி அமைக்க முயற்சித்து வரும் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு ஊக்க சக்தியாக அமைந்துள்ளது.

மஹாராஷ்டிராவில், மற்றொரு முக்கிய கட்சியாக கருதப்படும், மஹாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர், ராஜ் தாக்கரே, 'மோடி அல்லாத பாரதம் அமைப்போம்' என, குரல் எழுப்பியுள்ளார்.

பண்டாரா - கோண்ட்யா தொகுதியில் வெற்றி பெற்றுள்ள தேசியவாத காங்., கட்சித் தலைவர், சரத் பவார், 1998 லோக்சபா தேர்தலின்போது, காங்.,கில் இருந்தார். அத்தேர்தலில், மொத்தமுள்ள, 48 தொகுதிகளில், காங்., 42ல் வென்று சாதனை படைத்தது. அதேபோன்ற மாயாஜாலத்தை மீண்டும் நிகழ்த்திக் காட்டுவதில், சரத் பவார் உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறது.

நாட்டிலேயே அதிக லோக்சபா தொகுதிகள் உடைய, உ.பி.,யில், பா.ஜ.,வுக்கு மூன்றாவது முறையாக, கைரனா லோக்சபா தொகுதியில் பெரிய தோல்வி கிடைத்துள்ளது. இம்மாநிலத்தில், 2014ல் நடந்த லோக்சபா தேர்தலில், 80ல், 73 தொகுதிகளை கைப்பற்றி சாதனை படைத்த, பா.ஜ., கடந்தாண்டு நடந்த சட்டசபைத் தேர்தலிலும், அமோக வெற்றி பெற்றது.

சமீப காலமாக, முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான ஆட்சி, பல்வேறு சறுக்கல்களை சந்தித்து வருகிறது. ஒரு மடத்தின் அதிபதியாக உள்ள அவர், யாரையும் கலந்தாலோசிக்காமல் முடிவு எடுப்பதாக குற்றச்சாட்டு உள்ளது.

பதவி நீக்கம் :


இடைத்தேர்தல் முடிவுகளால், உ.பி., முதல்வர் ஆதித்யநாத், மஹாராஷ்டிரா முதல்வர் பட்னவிஸ், ம.பி., முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ஆகியோரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என, கட்சிக்குள் உள்ள அதிருப்தியாளர்கள் குரல் எழுப்பிஉள்ளனர். இதனால், அவர்களது பதவிக்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளது.

வரும், 2019 லோக்சபா தேர்தலில், உ.பி., மஹாராஷ்டிரா, பீஹார் ஆகிய மூன்று மாநிலங்களே, ஆட்சி யாருக்கு என்பதை நிர்ணயிக்கக் கூடியவை.

Advertisement

இடைத் தேர்தல் வெற்றிகளால் ஊக்கம் பெற்றுள்ள எதிர்க்கட்சிகளை, லோக்சபா தேர்தலில், பா.ஜ., சமாளிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

பா.ஜ.,வுக்கு எதிராக மெகா கூட்டணிக்கு முயற்சி :

ம.பி.,யில், பா.ஜ.,வைச் சேர்ந்த சிவ்ராஜ் சிங் சவுகான் முதல்வராக உள்ளார். 2003 முதல், 15 ஆண்டு களாக, இம்மாநிலத்தில், ஆட்சியை பறிகொடுத்து, அதை மீட்க முடியாமல், காங்., திணறி வருகிறது. இந்நிலையில், பீஹாரில், பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்து ஆளுங் கட்சியாக உள்ள, ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் அதிருப்தி தலைவரான சரத் யாதவ், ம.பி.,யில், பா.ஜ.,வுக்கு எதிரான கட்சிகளை ஒருங்கிணைத்து வருகிறார். இந்தாண்டு இறுதியில், ம.பி.,யில் நடக்கும் சட்டசபைத் தேர்தலில், பா.ஜ.,வுக்கு எதிராக, சரத் யாதவ் அமைக்கும் மெகா கூட்டணியில் இணைய, காங்., விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.சரத் யாதவின் கூட்டாளிகள், ஏப்ரலில், எல்.ஜே.டி., எனப்படும், லோக்தந்திரிக் ஜனதா தளம் என்ற கட்சியை துவக்கினர். இருப்பினும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் உரிமை தொடர்பாக, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதால், எல்.ஜே.டி.,யில், சரத் யாதவ் இன்னும் இணையவில்லை.சரத் யாதவ் கூட்டாளிகளின் முயற்சியால், ம.பி.,யில் மலைப்பகுதிகளில் செல்வாக்கு மிக்க, பி.ஜி.பி., எனப்படும், பாரதிய கோண்ட்வானா கட்சி, ஜி.ஜி.பி., எனப்படும், கோண்ட்வானா கந்தந்ரா கட்சி ஆகியவை கருத்து வேறுபாடுகளை மறந்து, சட்டசபை தேர்தலில் சேர்ந்து செயல்பட முடிவு செய்துள்ளன.


'70 லட்சம் போலி வாக்காளர்கள்' :

காங்கிரஸ் மூத்த தலைவர் கமல் நாத், ம.பி., மாநில கட்சி பிரமுகர்களுடன் நேற்று, டில்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்துக்கு சென்றார். அங்கு அதிகாரிகளை சந்தித்த பின், அவர் கூறியதாவது: ம.பி.,யில், அடுத்த சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெறுவதற்காக, 70 லட்சம் போலி வாக்காளர்களின் பெயர்கள், பா.ஜ., சார்பில், வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இது தொடர்பான ஆதாரத்தை, தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் கொடுத்துள்ளோம். இவர்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கும்படி, அறிவுறுத்தியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
04-ஜூன்-201822:43:46 IST Report Abuse

Pugazh V@Shriram - Chennai, சோ மோடி யா?? அதான் சோ இறந்து விட்டாரே, தெரியாதா??

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
04-ஜூன்-201820:49:13 IST Report Abuse

Pugazh Vஅதெல்லாம் ஒரு சிக்கலும் நீடிக்காது. அ_ _ ஷா அங்கெல்லாம் போய் சிக்கல் பண்றவங்க மண்ட மேலயே நாலு போட்டார்னா எல்லாம் ஓ.கே. ஆயிடும்.

Rate this:
r.sundaram - tirunelveli,இந்தியா
04-ஜூன்-201820:35:44 IST Report Abuse

r.sundaramசிவசேனா காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து பி ஜெ பி யை தோற்கடிக்குமானால். அது யானை தன்தலையில் தானே மண் அள்ளி போட்டுக்கொள்வதற்கு சமம்.

Rate this:
மேலும் 40 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X