தி.மு.க., - காங்., உறவில் ரஜினி ரூபத்தில் உரசல் Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தி.மு.க., - காங்., உறவில்
ரஜினி ரூபத்தில் உரசல்

தமிழக காங்கிரஸ் சார்பில் நடத்தப்பட்ட, 'இப்தார்' நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில், தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் பங்கேற்க மறுத்ததால், இரு தரப்புக்கும் இடையே, உரசல் உருவாகியுள்ளது.

தி.மு.க.,காங்., உறவில்,ரஜினி,ரூபத்தில்,உரசல்,Congress,D.M.K,DMK,Rajini,Rajinikanth,காங்கிரஸ்,தி.மு.க,திராவிட முன்னேற்றக் கழகம்,ரஜினி,ரஜினிகாந்த்


துாத்துக்குடி, 'ஸ்டெர்லைட்' ஆலை விவகாரம் தொடர்பாக, சட்டசபை புறக்கணிப்பு முடிவை, தி.மு.க., எடுத்தது. அதில், காங்கிரசுக்கு உடன்பாடில்லை. அதனால் தான், சென்னை, அறிவாலயத்தில் நடந்த, போட்டி சட்டசபை கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரசார், மறுநாளே, சட்டசபைக்கு சென்றனர்.

மேலும், வரும் லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணியில், காங்கிரசுக்கு குறைவான

இடங்கள் ஒதுக்கப்பட்டால், ரஜினியுடன் கூட்டணி அமைக்கலாம் என்றும், ரஜினியை மையப்படுத்தி, தி.மு.க.,விடம் பேரம் பேசலாம் என்றும், டில்லி தலைமை கருதுகிறது.

இந்நிலையில், ரஜினியை, தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர், கராத்தே தியாகராஜன், சமீபத்தில் சந்தித்து பேசினார். பின், பேட்டி அளித்த அவர், 'சிதம்பரம் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீதான, மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கைக்கு, ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்கவில்லை' என்றார்.

ரஜினிக்கு ஆதரவாக, கராத்தே தியாகராஜன், 'டிவி' விவாதங்களில் பேசி வருவதும், ஸ்டாலினுக்கு பிடிக்கவில்லை. இதனால், தி.மு.க., தலைவர் கருணாநிதி பிறந்த நாள் விழாவை ஒட்டி, ரஜினி தெரிவித்த வாழ்த்து செய்தியை, 'முரசொலி' நாளிதழில் வெளியிடாமல், இருட்டடிப்பு செய்யப்பட்டது.

தமிழக காங்கிரஸ் சார்பில், சென்னையில் நடத்தப்பட்ட, 'இப்தார்' நோன்பு திறப்பு

Advertisement

நிகழ்ச்சிக்கு வரும்படி, ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், அவர் வர மறுத்து விட்டார். தனக்கு பதிலாக, ராஜ்யசபா எம்.பி., - டி.கே.எஸ்.இளங்கோவனை அனுப்பி வைத்தார்.

ஸ்டாலின் புறக்கணித்த தகவல், காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு தெரிய வந்ததும், அவர் அதிருப்தி அடைந்துள்ளார். இது குறித்து, தி.மு.க.,வினர் கூறுகையில், 'ரஜினி ரூபத்தில், தி.மு.க., - காங்கிரஸ் உறவில், விரிசல் உருவாகியுள்ளது' என்றனர்.

-நமது நிருபர்-


Advertisement

வாசகர் கருத்து (61)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kumarkv - chennai,இந்தியா
05-ஜூன்-201820:18:29 IST Report Abuse

kumarkvதி மு கா காங்கிரஸ் இரண்டும் அழிக்க பட வேண்டும்

Rate this:
Narasimhan - Manama,பஹ்ரைன்
05-ஜூன்-201819:52:49 IST Report Abuse

Narasimhanசுடலையை பார்த்தால் பாவமாக இருக்கிறது. ஒரு சான்ஸ் கொடுத்து பாருங்களேன். பதவியில் இருந்தால் போராட்டம் என்ற பேச்சை எடுக்க மாட்டார். மக்கள் நிம்மதியாக போய் வரலாம்

Rate this:
raja - Kanchipuram,இந்தியா
05-ஜூன்-201816:41:52 IST Report Abuse

rajaதிமுக ஒழிந்தால் நல்லது.

Rate this:
மேலும் 58 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X