ரூ.3,500 கோடி முறைகேடு; சிதம்பரத்திடம் கிடுக்கிப்பிடி Dinamalar
பதிவு செய்த நாள் :
ரூ.3,500 கோடி முறைகேடு;
சிதம்பரத்திடம் கிடுக்கிப்பிடி

புதுடில்லி : 'ஏர்செல் - மேக்சிஸ்' நிறுவனங்கள் இடையிலான, சட்டவிரோத பணப்பரிமாற்ற மோசடி வழக்கில், காங்., மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான, சிதம்பரம், அமலாக்க துறை முன், நேற்று ஆஜர் ஆனார்.

முந்தைய, ஐ.மு., கூட்டணி ஆட்சியில், மத்திய நிதியமைச்சராக சிதம்பரம் இருந்தபோது, ஏர்செல் - மேக்சிஸ் நிறுவனங்கள் இடையே, 3,500 கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தம் நடந்தது. இதில் சட்ட விரோத பணப்பரிமாற்ற மோசடி நடந்ததாக புகார் எழுந்தது.

இந்த மோசடியில், சிதம்பரத்திற்கும், அவரது மகன், கார்த்திக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. இந்த வழக்கில், கார்த்தியிடம், அமலாக்க துறை அதிகாரிகள், ஏற்கனவே விசாரணை நடத்தி உள்ள நிலையில், விசாரணைக்கு ஆஜராகும்படி, சிதம்பரத்திற்கு, அமலாக்க துறை அதிகாரிகள், சமீபத்தில் புதிய, 'சம்மன்' அனுப்பினர்.

இதையடுத்து, டில்லியில் உள்ள அமலாக்க துறை அலுவலகத்துக்கு, நேற்று காலை, தன் வழக்கறிஞருடன் சிதம்பரம் வந்தார். சிதம்பரம் அளித்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

Advertisement

இந்த வழக்கு தொடர்பாக, கடந்த வாரம், சிறப்பு நீதிமன்ற நீதிபதி முன் ஆஜரான சிதம்பரம், தன்னை கைது செய்யக்கூடாது எனக்கோரி, மனு தாக்கல் செய்தார்.

ரூ.3500 கோடி,முறைகேடு,சிதம்பரம்,கிடுக்கிப்பிடி

இதுதொடர்பாக, நேற்று உத்தரவு பிறப்பித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி, 'ஜூலை, 10 வரை, சிதம்பரத்தை கைது செய்யக்கூடாது' என, அமலாக்க துறைக்கு உத்தரவிட்டார்.


Advertisement

வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
11-ஜூன்-201817:24:32 IST Report Abuse

J.V. Iyerஇவர் நிதி அமைச்சராக இருந்தது தன் குடும்ப நிதியை பெருக்கிக்கொள்ள. இதனால்தான் இந்தியாவின் பொருளாதாரம் கீழே இருந்தது. இவர் சேர்த்த கள்ளப்பணத்தை, திரும்ப வாங்கினால், இந்தியா பணக்காரநாடாகிவிடும். பணபசி ப.சி. ரூபாய் நோட்டுகளாகத்தான் சாப்பிடுவார் போல. எதற்கு இவ்வளவு பணம் பணபசி ப.சி.? இவ்வுலகம் விட்டு சென்றால் எதையும் கொண்டுபோக முடியாது.நினைவில் கொள்க.

Rate this:
bal - chennai,இந்தியா
06-ஜூன்-201820:23:19 IST Report Abuse

balஇவரும் கொஞ்ச நாளில் நிரபராதி என்று வெளியில் விடுபடுவார் ...மாறன், கனி, ராஜா எல்லோரும் நிரபராதி...அதுபோல் இதுவும்...இதற்கெல்லாம் ஒரு போராட்டம் இல்லை....இவர் வீடு சொத்து 10 வருடங்கள் முன்னால் எப்படி இருந்தது..இப்போ எப்படி இருக்கிறது...அதிலிருந்து கிடைக்காத உண்மை.... வழக்கில் கிடைக்கபோகிறதா....

Rate this:
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
06-ஜூன்-201816:14:54 IST Report Abuse

Kuppuswamykesavan////வெகுளி - Maatuthaavani,இந்தியா 06-ஜூன்-2018 01:52 ஐ..... இது நல்லா இருக்கே.... தன்னை கைது செய்யக்கூடாது எனக்கோரி, இவர் வாரா வாரம் மனு தாக்கல் செய்தால் போதும் போல இருக்கே.....//// - பின்னே, பெரிய இடத்து பிள்ளை, பெரிய இடத்து பிரமுகர்ன்னா சும்மாவா?, கூடுதலாக, முன்னாள் மத்திய மந்திரி, பொருளாதார மேதை, அரசியல் சாணக்கியர், மிக சிறந்த வழக்கறிஞ்சர் மற்றும் வெள்ளை வெள்ளை பிரியர், அதான் எளிதாக, சலுகை, கோர்ட்டில் கிடைக்கிறது

Rate this:
மேலும் 13 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X