குழுமாயி அம்மன் கோவிலில் குட்டிக்குடி விழா கோலாகலம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குழுமாயி அம்மன் கோவிலில் குட்டிக்குடி விழா கோலாகலம்

Added : மார் 11, 2011
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருச்சி: திருச்சி புத்தூர், சோழங்க நல்லூர், கல்நாயக்கன் தெரு, மேட்டுத்தெரு, கல்லாங்காடு ஆகிய பகுதிகளின் காவல் எல்லை தெய்வமாக புத்தூர் குழுமாயி அம்மன் கோவில் விளங்குகிறது. கோவிலின் மாசித்திருவிழா ஃபிப்., 23ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியோடு துவங்கியது. மார்ச் 9ம் தேதி, புத்தூர் மந்தையில் இருந்து ஓலையம்மன், கலிங்கில் உள்ள குழுமாயி அம்மன் கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. கடந்த 15 நாள் கடும் விரதம் இருந்த பக்தர்களை கொண்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. தென்னை ஓலையில் வரையப்பட்ட அம்மன், வெட்டி வேர்களை கொண்டு அலங்கரிக்கப்பட்ட தேரில் ஊர்வலமாகக் கிளம்பினார்.


கல்லாங்காடு, வண்ணாரப்பேட்டை வழியாக புத்தூர் மந்தையை வந்தடைந்தார். புத்தூரில் உள்ள அக்ரஹாரம், முத்துராஜா தெரு, சாலை பிள்ளையார் தெரு, புதுத்தெரு, யாதவத் தெரு உள்ளிட்ட 18 தெருக்களில் ஓலையம்மன் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு சுத்தபூஜை நடந்தது. நேற்று காலை புத்தூர் மந்தையில் குட்டிக்குடி விழா நடந்தது. 9.30 மணிக்கு மருளாளிக்கு, முதல் குட்டியை மாவட்ட கலெக்டர் சார்பாக இந்து சமய அறநிலையத்துறையினர் வழங்கினார். பின்னர் 100க்கும் மேற்பட்ட குட்டிகளின் ரத்தத்தை மருளாளி உறிஞ்சி குடித்த காட்சி பக்தர்களை பரவசமடைய செய்தது. இன்று மாலை மஞ்சநீராட்டு விழாவும், நாளை காலை அம்மன் குடிபுகுதல் விழாவோடு திருவிழா முடிவடைகிறது.


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை