அனைத்துகட்சி கூட்டத்தில் ஏ.சி.,க்களை கண்டித்த மாநகர போலீஸ் கமிஷனர்
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

திருச்சி: திருச்சியில் நடந்த அனைத்து கட்சிக்கூட்டத்தில் ஏ.சி.,க்களை போலீஸ் கமிஷனர் கண்டித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருச்சி மாநகரில் தேர்தல் நன்னடத்தை தொடர்பாக அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் மாநகர போலீஸாரின் ஏற்பாட்டில் நேற்று காலை கலையரங்க வளாகத்தில் நடந்தது. இதில், மாநகர போலீஸ் கமிஷனர் மாசானமுத்து, டி.சி.,க்கள் ராமையா, ஜெயபாண்டியன் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளும், தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் பங்கேற்றனர்.


கூட்டத்தில் பேசிய அனைத்து கட்சி பிரமுகர்களும் மாநகரில் பணியாற்றும் போலீஸ் ஏ.சி.,க்கள் முறையாக ஆலோசனைக் கூட்டங்களுக்கு தகவல் தெரிவிக்கவில்லை, விதிமுறைக்கு மாறாக பல விஷயங்களுக்கு தடை விதிக்கின்றனர், கூட்டங்களை சரியான நேரங்களுக்கு நடத்தவில்லை என்று அடுக்கடுக்காக புகார்கள் கூறினர். இதனால் ஆத்திரமடைந்த மாநகர போலீஸ் கமிஷனர் மாசானமுத்து கூட்டத்தில் வரிசையாக உட்கார்ந்திருந்த ஏ.சி.,க்களை கண்டித்தார்.


ஏ.சி.,க்களை கண்டித்து அவர் பேசும்போது, ""தேர்தல் விதிமுறைகளை முதலில் நீங்கள் நன்றாக தெரிந்து கொண்டு, உங்களுக்கு கீழ் உள்ளவர்களுக்கு சொல்லித்தாருங்கள். இதுபோன்ற புகார்களுக்கு இடம்கொடுக்காத வண்ணம் பணியாற்றவேண்டும். எல்லாவற்றுக்கும் கமிஷனர் என்று சொல்லக்கூடாது. உங்களுக்கு கொடுக்கப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி பிரச்னைக்கு தீர்வு காண முயலுங்கள்,'' என்று கண்டிப்புடன் கூறினார். அனைத்து கட்சியினர் மத்தியில், போலீஸ் ஏ.சி.,க்களை மாநகர போலீஸ் கமிஷனர் மாசானமுத்து கண்டித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.


Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்