'என்றும், 16 ஆக துரைமுருகன்' பன்னீர் கிண்டலால் சிரிப்பலை| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

'என்றும், 16 ஆக துரைமுருகன்' பன்னீர் கிண்டலால் சிரிப்பலை

Added : ஜூன் 08, 2018 | கருத்துகள் (8)
Advertisement
 'என்றும், 16 ஆக துரைமுருகன்'  பன்னீர் கிண்டலால் சிரிப்பலை

சென்னை:எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகனை, துணை முதல்வர் பன்னீர்செல்வம் கிண்டலடிக்க, சபையில் சிரிப்பலை எழுந்தது.
சட்டசபையில், நேற்று கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:
அ.தி.மு.க., ஆறுக்குட்டி: கோவை வடக்கு தாலுகாவை இரண்டாக பிரித்து, துடியலுாரை புதிய தாலுகாவாக்க, அரசு நடவடிக்கை எடுக்குமா?
அமைச்சர் உதயகுமார்: நிபந்தனைகள் பூர்த்தியாகாததால், புதிய தாலுகா அமைப்பதற்கான சாத்தியக்கூறு இல்லை.
ஆறுக்குட்டி: கோவை வடக்கு தாலுகா, அதிக மக்கள் தொகை உடைய பகுதி. எனவே, தாலுகாவை பிரிக்க வேண்டும்.
அமைச்சர் உதயகுமார்: கோவை புறநகர் பகுதி, வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. கோவை வடக்கு தாலுகா அலுவலகம், நகருக்குள் உள்ளது; மக்கள் வந்து செல்ல சிரமப்படுகின்றனர்.எனினும், நிபந்தனைகள் பூர்த்தியாகாததால், தாலுகாவை பிரிப்பது சிரமமாக உள்ளது. இதை, முதல்வர் கவனத்திற்கு எடுத்துச் சென்று பரிசீலிக்கப்படும்.
அ.தி.மு.க., - லோகநாதன்: கே.வி.குப்பத்தை தலைமையிடமாக கொண்டு, புதிய தாலுகா உருவாக்க வேண்டும்.
அமைச்சர் உதயகுமார்: நிபந்தனைகள் பூர்த்தியாகவில்லை; அம்மாவின் அரசு, இதுவரை, 72 வட்டங்களை உருவாக்கி சாதனை படைத்துள்ளது.
எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன்: அம்மாவின் அரசு சார்பில், கே.வி.குப்பம் தாலுகாவை, 73வது தாலுகாவாக அறிவியுங்கள்.
துணை முதல்வர் பன்னீர்செல்வம்: நடந்து கொண்டிருப்பது ஜெ., அரசு என, எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஒப்புக் கொண்டதற்கு நன்றி.
துரைமுருகன்: அமைச்சர் கூறியதையே கூறினேன்; புதிய வட்டத்தை உருவாக்கினால், பாராட்ட தயாராக உள்ளேன்.
துணை முதல்வர் பன்னீர்செல்வம்: உங்கள் பெருந்தன்மைக்கு நன்றி. இன்று புதுப்பொலிவுடன் வந்துள்ளீர்கள்; என்றும் 16 ஆக உள்ளீர்கள்; அதன் ரகசியம் என்ன?இவ்வாறு துணை முதல்வர் கூறியதும், சட்டசபையில் சிரிப்பலை எழுந்தது. துரைமுருகன், 'பிங்க்' நிற சட்டை அணிந்து சபைக்கு வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
09-ஜூன்-201801:17:21 IST Report Abuse
Mani . V இப்படி மாமன் - மச்சான்கள் மாதிரி கிண்டல் பண்ணியும், தமாஷ் செய்தும் இவர்கள் பொழுது போக்கத்தான் மக்களின் வரிப்பணத்தில் இவர்களுக்கு லட்சக்கணக்கில் சம்பளம். இந்த வாரம் 'தர்மயுத்தர்' பன்னீர் செல்வம், துரைமுருகனை "என்றும் 16 ஆக துரைமுருகன்" என்று சொல்லிவிட்டார். அடுத்த வாரம் துரைமுருகன் தன் முறைக்கு பன்னீர் செல்வத்தை "ஜல்லிக்கட்டு நாயகன்" என்று பாராட்டுவார். மக்கள் பிரச்சினைகளை பேச இவர்களுக்கு நேரமில்லை. பொழுது போக்க நேரம் இருக்கிறது. இந்த மாமன் - மச்சான் கேலியில் இருந்து ஊழலில் இரண்டு கட்சிக்கும் தொடர்பு/கூட்டணி உண்டு என்று தெரிந்து கொள்ள முடிகிறது.
Rate this:
Share this comment
Cancel
Ray - Chennai,இந்தியா
08-ஜூன்-201816:04:01 IST Report Abuse
Ray அந்த பிங்க் கலர் சட்டையில் துரைமுருகனின் போட்டோவை போட்டிருந்தால் நாங்களும் ரசித்திருப்போம்
Rate this:
Share this comment
Cancel
Ganeshbabu - Chennai,இந்தியா
08-ஜூன்-201811:38:22 IST Report Abuse
Ganeshbabu இந்த மாதிரி வெட்டியா பேசறதுக்கா மக்கள் இவர்களை தேர்ந்தெடுத்து சட்டசபைக்கு அனுப்பினார்கள்?
Rate this:
Share this comment
Cancel
ganapati sb - coimbatore,இந்தியா
08-ஜூன்-201811:30:45 IST Report Abuse
ganapati sb புதிய தாலுகா உருவாக்க நிபந்தனைகள் பூர்த்தியாகவில்லை என்றால் அந்த நிபந்தனைகள் என்ன அதை MLA நினைத்தால் பூர்த்தி செய்ய முடியாதா
Rate this:
Share this comment
Cancel
POPCORN - Chennai ,இந்தியா
08-ஜூன்-201810:32:32 IST Report Abuse
POPCORN இவர்களை போல் நன்கு வளைந்து கும்பிடு போட்டால் ஆரோக்கியம் பெருகும்
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
08-ஜூன்-201809:08:49 IST Report Abuse
Srinivasan Kannaiya துரைமுருகன் ரொம்ப கண்ணு பட்டு விட போகிறது யாரையாவது விட்டு திருஷ்டி சுத்தி போட சொல்லுங்கள்...
Rate this:
Share this comment
Ramesh Sundram - Muscat,ஓமன்
08-ஜூன்-201811:38:52 IST Report Abuse
Ramesh Sundramசுத்தி போட நான் தயார் தட்டில் காசு விழுமா அல்லது என் சட்டை பையில் நோட்டை எடுத்து விடுவார்களா தெரியவில்லையே...
Rate this:
Share this comment
Cancel
S.Pandiarajan - tirupur,இந்தியா
08-ஜூன்-201806:31:29 IST Report Abuse
S.Pandiarajan இதில் என்ன ஜோக்கு இருக்கு இது ஒரு செய்தி அதுக்கு ஒரு சிரிப்பு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை