இயற்கை ஆர்வலருக்கு ரஜினி ரசிகர்கள் மரியாதை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இயற்கை ஆர்வலருக்கு ரஜினி ரசிகர்கள் மரியாதை

Added : ஜூன் 08, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

அரியலூர்: நடிகர் ரஜினி நடித்த காலா திரைப்படம், அரியலூர் மாவட்டத்தில், அரியலூர், ஜெயங்கொண்டம் நகரில், இரண்டு தியேட்டர்களில் வெளியானது. பொதுவாக ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த நடிகர்களின் திரைப்படம் வெளியாகும்போது, படப்பெட்டிகளுடன் மேளதாளங்கள் முழங்க, பட்டாசு வெடித்து ஊர்வலமாக சென்று, ரசிகர் காட்சி பார்ப்பது வழக்கம். ஆனால், அரியலூரில் ரஜினி ரசிகர்கள் வித்தியாசமான முறையில், கொண்டாட முடிவு செய்தனர். அதன்படி, தமிழகம் முழுவதும் பொது இடங்களில், இதுவரை, மூன்று லட்சம் மரக்கன்றுகளை நட்டு வளர்த்து வரும், அரியலூர், கல்லூரை சேர்ந்த இயற்கை ஆர்வலரான, முதியவர் கருப்பையாவை கவுரவிக்க திட்டமிட்டனர். அரியலூர் மகாசக்தி தியேட்டருக்கு இயற்கை ஆர்வலர் கருப்பையாவை வரவழைத்து, அவருக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின், தங்களுடன் காலா திரைப்படம் பார்ப்பதற்கு அவரை அழைத்து சென்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
13-ஜூன்-201809:07:28 IST Report Abuse
Srinivasan Kannaiya ரஜினி ரசிகர்கள் மரக்கன்று எதுவும் நடவில்லையா...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை