Yogi Adityanath's principal secretary accused of demanding bribe, Governor directs CM to conduct inquiry | ரூ. 25 லட்சம் லஞ்சம் கேட்டதாக முதன்மை செயலாளர் மீது கவர்னர் புகார் | Dinamalar

ரூ. 25 லட்சம் லஞ்சம் கேட்டதாக முதன்மை செயலாளர் மீது கவர்னர் புகார்

Updated : ஜூன் 08, 2018 | Added : ஜூன் 08, 2018 | கருத்துகள் (39)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
கவர்னர் ராம்நாயக் , பெட்ரோல் பங்க், முதல்வர் யோகி ஆதி்த்யாநாத், கவர்னர் கடிதம் ,   அபிஷேக் குப்தா , சாக்ஷி பிரகாஷ் கோயல், கவர்னர் ஊழல் புகார் ,  உத்தர பிரதேசம் , உத்தர பிரதேச கவர்னர் ராம்நாயக், உத்தர பிரதேச முதன்மை செயலாளர் சாக்ஷி பிரகாஷ் கோயல் , 
Governor Ramanayak, Petrol Punk, Chief Minister Yogi Adityanath, Governor Letter, Abhishek Gupta, Sakshi Prakash Goel, Governor Scam Complaint, Uttar Pradesh, Uttar Pradesh Governor Ramnik, Uttar Pradesh Chief Secretary Sakshi Prakash Goel,

லக்னோ: பெட்ரோல் பங்க் அமைக்க அனுமதி தர ரூ. 25 லட்சம் லஞ்சம் கேட்டதாக உ.பி. மாநில முதன்மை செயலாளர் மீது புகார் எழுந்தது. இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என முதல்வர் யோகி ஆதி்த்யாநாத்திற்கு கவர்னர் கடிதம் எழுதியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உ.பி. பா.ஜ. முதல்வர் யோகி ஆதித்யாநாத்திற்கு கவர்னர் ராம்நாயக் கடிதம் ஒன்றை கடந்த ஏப்ரல் 18-ம் தேதி அனுப்பியிருந்தார். அதில் லக்னோவைச் சேர்ந்த அபிஷேக் குப்தா என்ற தொழிலதிபர், தனக்கு இ மெயில் மூலம் கடிதம் அனுப்பினார். அதில் ஹர்டோய் மாவட்டத்தில் முக்கிய சாலை சந்திப்பில் பெட்ரோல் பங்க் வைக்க விண்ணப்பித்ததாகவும், அதற்கு அனுமதி தர வேண்டுமெனில் ரூ.25 லட்சம் லஞ்சம் தர வேண்டும் என முதன்மை செயலாளர் சாக்ஷி பிரகாஷ் கோயல் கேட்டுள்ளார். இது குறி்த்து உரிய விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கவர்னர் ராம்நாயக் குறி்ப்பிட்டுள்ளார்.. முதன்மை செயலாளர் மீதே கவர்னர் ஊழல் புகார் கூறியுள்ளது முதல்வர் ஆதித்யநாத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
MATHI,L.K. - Lalgudy,இந்தியா
14-ஜூன்-201818:25:56 IST Report Abuse
 MATHI,L.K. ரூ.25 லட்சம் லஞ்சம் தர வேண்டும் என முதன்மை செயலாளர் சாக்ஷி பிரகாஷ் கோயல் கேட்டுள்ளார். இவர் ஏற்கெனவே தமிழகத்தில் பணி புரிந்து "லஞ்ச டெக்னிக்ஸ்" கற்று தேர்ந்தவராக இருக்கிறாரே? எங்கிருந்தாலும் வாழ்க
Rate this:
Share this comment
Cancel
BoochiMarunthu - Paradise papers,பனாமா
08-ஜூன்-201821:24:48 IST Report Abuse
BoochiMarunthu இப்போ ஊழல் புகார் கொடுத்தவரையே போலீஸ் கைது செய்து உள்ளது அப்போ கமிஷன் யோகிக்கு போகிறது என்று அர்த்தமா ?
Rate this:
Share this comment
Cancel
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
08-ஜூன்-201821:05:58 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN முதன்மை செயலாளரா விசாரனை எதற்கு அவரை வீட்டிற்கு வழி கூட்டி விடுங்கள் அதுவே தீர்வாக இருக்கும்.>>>>.என்ன மனிதரோ>>>>>
Rate this:
Share this comment
Cancel
Darmavan - Chennai,இந்தியா
08-ஜூன்-201817:37:39 IST Report Abuse
Darmavan இந்த செய்தியை ஊடகங்களுக்கு வெளியிட்டது யார்?..அதில் ஒரு உள்நோக்கம் இருக்கிறது. கவர்னர் இதை செய்திருப்பார் அல்லது அவர் அலுவலகத்திலிருந்து யாரவது செய்தாராகலா.இதில் ஒரு விஷமத்தனம் சூழ்ச்சி கண்டிப்பாக இருக்கிறது .இதில் அகிலேஷ்/காங்கிரஸ் கைக்கூலி அதிகாரிகள் இருந்திருக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
08-ஜூன்-201816:18:47 IST Report Abuse
Endrum Indian "ரூ. 25 லட்சம் லஞ்சம் கேட்டதாக முதன்மை செயலாளர் மீது கவர்னர் புகார்". நான் முதலில் கவர்னர் கிட்டயேவா கேட்டார் என்று அவசர அவசரமாக படித்தேன், செய்தி பூராவும் படித்தவுடன் தான் அதன் விளக்கம் புரிந்தது.
Rate this:
Share this comment
Cancel
Sippi - Paris,பிரான்ஸ்
08-ஜூன்-201813:34:41 IST Report Abuse
Sippi டுமிலனுக்கும் பச்சைகளுக்கும் பொது அறிவும் இல்லை, பொதுவாவே அறிவும் இல்லைன்னு இந்த கமெண்ட்ஸ் பகுதில தெளிவா தெரியுது. லஞ்சம் கேட்டவன் IAS அதிகாரி. அதுக்கு மேல நடவடிக்கை எடுக்க சொல்றது ஆளுநர். ஆளுநர் முன்னாள் பாஜக மத்திய மந்திரி. இந்தக் கடிதம் அனுப்பப்பட்டது பாஜக முதல்வருக்கு. ஆக மொத்தத்துல விஷயம் என்னன்னா பாஜக கட்சி ஆளுங்க, லஞ்சம் கேட்ட ஒரு அரசு அதிகாரியை என்ன செய்யணும்னு விவாதிக்குறாங்க. ஆனா இதுக்கும் பாஜகதான் குத்தமாம்.... உங்க வீட்டுல இன்னைக்கு பிரியாணில உப்பு பத்தலைனாலும் மோடி சதின்னு சொல்லீருங்க. நாடு வெளங்கிரும்.
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
08-ஜூன்-201823:19:05 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்இது எப்படி முடியுதுன்னுட்டு காவி கானம் பாடலாம். ஏற்கனவே இது போன்ற சமாசாரமெல்லாம் தமிழ்நாட்டில் எப்படி காவிகளால் கையாளப்பட்டது என்ற அனுபவத்தில் அவர்கள் உண்மையை எழுதியுள்ளார்கள்....
Rate this:
Share this comment
I love Bharatham - chennai,இந்தியா
14-ஜூன்-201815:57:33 IST Report Abuse
I love Bharathamஉங்கள முதுகில் உள்ள குறைகளை நீக்கி காவிய பற்றி பேசவும்...
Rate this:
Share this comment
Cancel
Ramakrishnan Natesan - BANGALORE ,இந்தியா
08-ஜூன்-201813:27:03 IST Report Abuse
Ramakrishnan Natesan """இங்கு பேசும் அற்பர்களுக்கு ஊழலை பார்க்காதீர்கள் வளர்ச்சியை பாருங்கள் """அப்படி என்று சொம்புகள் கூவும்
Rate this:
Share this comment
Cancel
chails ahamad - doha,கத்தார்
08-ஜூன்-201812:55:01 IST Report Abuse
chails ahamad இந்த செய்திகளின் வாயிலாக சில மறைமுக விடயத்தை நாம் உணர வேண்டியுள்ளது, இன்றைய நிலையில் பா ஜ வில் சில வகையறாக்கள் உ பி முதல்வர் யோகி அவர்களை முன்னிலைப்படுத்தி நாளைய காலங்களில் அல்லது தற்போதைய இடைப்பட்ட காலங்களிலோ திரு . யோகி அவர்களை பிரதமராக அமர வைக்க முயற்சிப்பதுதான் என்பதை நம்மால் உணர முடிகின்றது . அந்த ஒரு சாராரின் முயற்சிகளை தவிடு பொடியாக்குவதின் செயல்பாடுகளில் ஒரு அங்கமே திரு. யோகியின் பெயரை சீரழித்திட அவரது ஆட்சியின் முதன்மை செயலரை பற்றிய லஞ்ச விவகாரமாகும் .
Rate this:
Share this comment
Cancel
Raghuraman Narayanan - Machester,யுனைடெட் கிங்டம்
08-ஜூன்-201812:29:17 IST Report Abuse
Raghuraman Narayanan முதன்மை செயலர் இப்படி மாட்டி கொள்கிற மாதிரி பகிரங்கமாக இ மெயில் அனுப்புவாரா? நம்பகம் அளிக்க வில்லையே? உள்குத்து இருக்கிறது.
Rate this:
Share this comment
murugu - paris,பிரான்ஸ்
08-ஜூன்-201813:09:24 IST Report Abuse
muruguநாராயணன் என்று பேரிருந்தாலே உளறுவாயாகவும் ,இல்லாததை பேசுபவராகவும் இருக்கவேண்டுமா ??? அபிஷேக் குப்தா என்ற தொழிலதிபர் தான் ஈ மெயில் அனுப்பி இருக்கிறார் ,லஞ்சப்பணம் கேட்ட பி ஜே பி முதன்மை செயலாளர் சாக்ஷி பிரகாஷ் கோயல் அல்ல இது குறி்த்து உரிய விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கவர்னர் ராம்நாயக் குறி்ப்பிட்டுள்ளார்.....
Rate this:
Share this comment
Ramakrishnan Natesan - BANGALORE ,இந்தியா
08-ஜூன்-201813:24:56 IST Report Abuse
Ramakrishnan Natesanஆமா பண்டாரங்கள் விஷயம் என்றால் உள்குத்து ஏன் எனில் அப்படியே யோக்கிய சிகாமணிகள் மக்களுக்கு சேவை செய்யவே அவதரித்தவர்கள் அதனால் தான் எல்லா கட்சியைவிட்டு இவர்களுக்கு டொனேஷன் அதிகம் பாவம்...
Rate this:
Share this comment
Ray - Chennai,இந்தியா
08-ஜூன்-201815:51:01 IST Report Abuse
Rayநாராயண நாராயண அவனவன் பங்குக்கு அலைவது வெட்ட வெளிச்சமாகிறது இதைத்தானே மோடி ""ஆட்சியில் வெளிப்படை தன்மை"" என கூப்பாடு போடுகிறார் நாராயண நாராயண ரகுராமன் நாராயண...
Rate this:
Share this comment
Cancel
Ramakrishnan Natesan - BANGALORE ,இந்தியா
08-ஜூன்-201812:25:44 IST Report Abuse
Ramakrishnan Natesan காவிகளின் ராமராஜ்யத்தில் ஊழல் ராஜ்யம் உய லாலா பண்டார பக்கோடாக்கள் ஒரு நான்கு வருடம் கை அரிப்பு எடுக்க தொடங்கிவிட்டது காங்கிரஸ் போல 50 வருடம் இருந்தால் இந்தியா அமெரிக்காவிற்கு விற்க பட்டு விடும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை