No Salary Change For Mukesh Ambani This Year Too. Here's How Much He Gets | 10 ஆண்டுகளாக சம்பளத்தை உயர்த்த விரும்பாத முகேஷ் அம்பானி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

10 ஆண்டுகளாக சம்பளத்தை உயர்த்த விரும்பாத முகேஷ் அம்பானி

Updated : ஜூன் 08, 2018 | Added : ஜூன் 08, 2018 | கருத்துகள் (53)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
Mukesh Ambani,Nikhil R Meswani,Mukesh Ambani Salary, முகேஷ் அம்பானி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்,  நிகில் ஆர் மெஸ்வானி , ஹீதல் ஆர் மெஸ்வானி, முகேஷ் அம்பானி சம்பளம், முகேஷ் அம்பானி சம்பளம் உயர்வு , அம்பானி சம்பளம், 
 Reliance Industries,  Hital R Meswani, Mukesh Ambani Salary hike, Ambani salary,


மும்பை: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி கடந்த 10 ஆண்டுகளாக தனது சம்பளத்தை உயர்த்தி எடுத்துக்கொள்ளவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி , கடந்த 2009-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தன்னுடைய சம்பளத்தை ரூ.15 கோடிக்கு மேல் உயர்த்த வேண்டாம் என முடிவெடுத்தார். அதன்படி தனது ஆண்டு சம்பளமாக கடந்த 2008-09-ம் நிதி ஆண்டு முதல் ஆண்டுக்கு ரூ.15 கோடி மட்டுமே சம்பளமாக எடுத்துக்கொள்கிறார். நிறுவனத்தின் இயக்குநர் குழு இவரின் சம்பளத்தை ரூ.38.75 கோடியாக உயர்த்த அனுமதி வழங்கியது. ஆனாலும் தன்னுடைய சம்பளத்தை உயர்த்த விரும்பவில்லை.
அதே சமயத்தில் இயக்குநர் குழு உறுப்பினர்களின் சம்பளம் அதிகரித்து கொண்டே போனது. . முகேஷ் அம்பானியின் உறவினர் நிகில் ஆர் மெஸ்வானி மற்றும் ஹீதல் ஆர் மெஸ்வானியின் ஆகியோர் கடந்த நிதி ஆண்டு சம்பளமாக தலா ரூ.16.58 கோடி வாங்கினர்.. இந்நிலையில் இந்த நிதியாண்டில் அவரது சம்பளத்தை உயர்த்திட நிறுவனத்தின் குழு அறிவித்தது. இதனை ஏற்காத முகேஷ் அம்பானி , ஏற்கனவே எடுத்த முடிவின்படி இந்தாண்டும் அதே ரூ. 15 கோடியை சம்பளமாக பெற்றுக்கொண்டார்.

Advertisement




வாசகர் கருத்து (53)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ananthakrishnan - Thanjavur,இந்தியா
14-ஜூன்-201816:25:05 IST Report Abuse
Ananthakrishnan ரிலையன்ஸ் அதிபரே அவருதான். சம்பளம் என்பதெல்லாம் புக் கீப்பிங் -காக மட்டுமே.
Rate this:
Share this comment
Cancel
Ganapathy - Bangalore,இந்தியா
09-ஜூன்-201809:06:13 IST Report Abuse
Ganapathy ஒன்னு மட்டும் தெரியுது, காசு பணம் இருந்தால் போடும் எவர் வேண்டுமானாலும் உத்தமர் ஆகிவிடலாம்,
Rate this:
Share this comment
Cancel
skv - Bangalore,இந்தியா
09-ஜூன்-201802:08:12 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> அழைப்புகளை இலவசமா தந்துட்டு பல இளைஞர்கள் தம் (கம்பெனிகள் திவால் என்று )மறுவேலையிலே சேருகிறார்கள் குழந்தைகளுக்கும் பள்ளிகள் சூழ்நிலைகள் மாற்றவேண்டிய நிலை வருது அம்பானி கிம்பாணி எல்லாம் சம்பளம் இல்லாது முதலாளியா இருக்காப்பில் இல்லே சொல்லுது இந்த செய்தி இவ்ளோ கோடி வருது இன்னம் பல வகையில் வருமானம் இருக்கும் என்னவோ தியாகம் செய்றாப்பல் சொல்லுது செய்தி போங்கய்யா போங்க
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X