பிரதமர் மோடியை கொல்ல திட்டம்? நக்சல்கள் கடிதத்தில் திடுக் தகவல்| Dinamalar

பிரதமர் மோடியை கொல்ல திட்டம்? நக்சல்கள் கடிதத்தில் திடுக் தகவல்

Updated : ஜூன் 08, 2018 | Added : ஜூன் 08, 2018 | கருத்துகள் (154)
Advertisement

புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடியை கொல்ல மாவோ நக்சல்கள் திட்டம் தீட்டியிருப்பாக ஒரு கடிதம் மூலம் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக உளவுத்துறை போலீசார் தீவிரமாக விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.


கைது


மகாராஷ்டிராவில் சமீபத்திய கலவரம் தொடர்பாக போலீசார், பலரை கைது செய்து வருகின்றனர். சமீபத்தில் கைது செய்யப்பட்டமும்பையை சேர்ந்த சுதிர் தவாலே, டில்லியை சேர்ந்த ரோனா ஜேக்கப் வில்சன், நாக்பூரை சேர்ந்த சுரேந்திரா கேட்லிங், சோமா சென் மற்றும் மகேஷ் ரவுட் ஆகியோர் நக்சல் இயக்கத்தை சேர்ந்தவர்கள். இதில் ரோனா ஜேக்கப் என்பவரிடம் இருந்து ஒரு கடிதம் கைப்பற்றபட்டுள்ளது. இந்த கடிதத்தில் பிரதமர் மோடியை கொல்வது தொடர்பான விஷயங்கள் அடங்கியுள்ளன.
ராஜிவ் கொலை போல்


முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை செய்யப்பட்டது போல், இந்த நிகழ்வை நடத்தவும், மக்களை சந்திக்கும் பேரணி மற்றும் சாலை வழியில் நடக்கும் கான்வாயில் குண்டு வைத்து கொல்லவும், திட்டம் தீட்டியிருப்பதாக எழுதப்பபட்டுள்ளது. இந்துக்கள் ஆதரவு போக்கை கடைபிடிப்போரை முடிவுக்கு கொண்டு வருவதே முக்கிய நோக்கம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மோடியை கொல்வதற்கு எம்-4 ரக துப்பாக்கி வாங்க வேண்டும். அதற்கு 8 கோடி ரூபாய் தேவைப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

புனே போலீசார் இந்த கடிதத்தை கோர்ட்டில் தாக்கல் செய்து பின்னர் முறைப்படி, மத்திய உளவுத்துறையிடம் ஒப்படைக்கவுள்ளனர். மேலும் தீவிரமாக விசாரிக்கவும், பிரதமர் மோடிக்கான பாதுகாப்பை பலப்படுத்தவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என தெரிகிறது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (154)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohamed Siddiq - Khor,கத்தார்
14-ஜூன்-201815:37:26 IST Report Abuse
Mohamed Siddiq டிஜிட்டல் இந்தியா லா இன்னுமா கடுதாசி எழுதுறீங்க. இந்த செய்தி நம்புற மாதிரியா இருக்கு. லஷ்கர் தொய்பா முஜிபுல் முஜாஹிடின்க்கு எல்லாம் ரமலான் லீவு விட்டுட்டீங்களா. திடிர்னு நக்சல்க்கு மாறிட்டீங்க..
Rate this:
Share this comment
Cancel
Ramasami Venkatesan - Chennai - now in Brisbane - Aus,இந்தியா
13-ஜூன்-201807:12:10 IST Report Abuse
Ramasami Venkatesan இந்த நெக்ஸாலிட்கள் யார். யு பி , மத்திய பிரதேச முற்கால கொள்ளைக்காரர்கள் தான். திருந்தியவர்கள் சிலர் பூலான் தேவி போல. திருந்தாத மீதி மிச்சம் இவர்கள். இதில் மார்க்சிஸ்ட் வேறு மேற்கு வங்கத்தில். இவர்களால் நாட்டுக்கு நன்மை ஏதும் இல்லையெனில் இவர்களை இல்லாமல் ஆக்கிவிடலாம் அரசு ஒரே க்ஷணத்தில் - ஜனத்தொகையாவது குறையும். இவர்களும் அதையே செய்கிறார்கள் பாமர ஜனங்கள் மீது. அரசும் செய்யலாமே இவர்களை ஒழித்து. இவர்களுக்கு பணம் எங்கிருந்து வருகிறது.
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - chennai,இந்தியா
10-ஜூன்-201817:00:11 IST Report Abuse
Natarajan Ramanathan திரு மோடிக்கு ஏதாவது அசம்பாவிதம் நேர்ந்தால் அது பச்சை மற்றும் பாவாடைகளின் தற்கொலைக்கு சமம்....புரிந்ததா?
Rate this:
Share this comment
Cancel
Ramamoorthy P - Chennai,இந்தியா
09-ஜூன்-201811:51:28 IST Report Abuse
Ramamoorthy P ஆரம்ப கட்டத்தில் காங்கிரஸ் தான் கர்நாடகாவில் ஜெயிக்கும் என்கின்ற விதத்தில் செய்திகள் வந்தன ஆனால் மோடியின் வருகைக்கு பிறகு நிலைமை எல்லா இடங்களிலும் தலைகீழாக மாறுவதால் 2019 ல் மோடியே திரும்ப அசைக்கமுடியாத சக்தியாக வந்து விட்டதால் என்ன செய்வது என்கின்ற அச்சம் காரணமாக தேர்தல் காலங்களில் மோடியை மக்களிடமிருந்து விலக்கி வைக்கும் தந்திர நடவடிக்கையாகவும் இருக்கலாம். உயிருக்கு பயப்படுகிறவரில்லை மோடி. இன்னும் சுதந்திர தின உரையை குண்டு துளைக்காத கண்ணாடிக்கு முன்னால் நின்று தான் பேசிக்கொண்டிருக்கிறார்.
Rate this:
Share this comment
A M Sunil - Doha,கத்தார்
12-ஜூன்-201811:24:44 IST Report Abuse
   A M Sunilஉயிருக்கு ஆபத்து என்று சிம்பதி தேடுகிறார். தேர்தல் பயம் வந்துவிட்டது...
Rate this:
Share this comment
Cancel
Siva - Aruvankadu,இந்தியா
09-ஜூன்-201805:08:27 IST Report Abuse
Siva கட்டி போட்ட இடத்தில் ஓசி சோறு சாப்பிட்டு வளரந்த நாய்களை உழைத்து சாப்பிட சொன்னால் இப்படி தான் குரைக்கும்... ஆனால் கடிக்காது.
Rate this:
Share this comment
Cancel
Dr Kannan - Yaadum Voorae,யூ.எஸ்.ஏ
09-ஜூன்-201803:12:43 IST Report Abuse
Dr Kannan If true, strongly condemn terrorism on any citizens including Modiji. So also the brutal terrorist MURDER OF 13 INNOCENT CITIZENS of Tuticorin. But murdering of innocent citizens IS NOTHING SERIOUS FOR MODIJI WHO DOES NOT HAVE THE MINIMUM CULTURE TO SAY CONDOLENCE TO VICTIMS. NOW BJP EXPECTS SYMPATHY WAVE AS THEIR 2019 ELECTION STRATEGY? May you send your story to Rajini and he might commercialize this story (KAALA) so that it will reach most voters? That is Aanmiga arasiyal
Rate this:
Share this comment
Cancel
09-ஜூன்-201801:52:44 IST Report Abuse
Veeraiyah (இந்திய பிரதமராக ஆசை) அது நடக்காத காரியம்.. இருப்பினும் பிரதமரின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்... மக்கள் (வீடு, வேலை, சுகாதாம் என்று ) சந்தோசமாக உள்ள நாடுகளில் தலைவர்களும் சந்தோசமாக உள்ளனர். மக்கள் சந்தோசத்தை உறுதி செய்தால், தலைவனின் பாதுகாப்பு பற்றி கவலை கொள்ள தேவை இருக்காது.
Rate this:
Share this comment
Cancel
Rajan - Coimbatore,இந்தியா
08-ஜூன்-201823:29:51 IST Report Abuse
Rajan மோடி ஜி அவர்கள் சிறு தவறு ஒன்றை செய்துவிட்டார் என்று சொல்லவேண்டும் . கருப்பு பணத்தை ஒழிப்பதற்கு முன் கருப்பு மனிதர்களை ஒழிக்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் . கருப்பு மனிதர்களிடம் மனிதாபிமானம் பார்ப்பது தவறு. முதலில் நாட்டில் உள்ள சிறை சாலைகளை சிட்டியின் மத்தியில் இருந்து யாரும் சென்றடைய முடியாத ஆள் நடமாட்டம் இல்லா ...பாலைவனத்துக்கோ அல்லது காட்டுக்குள்ளோ அமைக்க வேண்டும் , இதை செய்தாலே பாதி குற்றம் குறைத்துவிடும். கைதிகளுக்கு துணை போகும் போலீஸ் மற்றும் சிறை அதிகாரிகள் பிடி பட்டால் அவர்களை விசாரணை இன்றி மனிதாபிமானம் இல்லாமல் தண்டிக்க வேண்டும். சட்டம் ஒழுங்கு அனைவர்க்கும் ஒன்றே என்று உணரவேண்டும். இதை படிப்பார்வர்கள் எத்தனை பேர் போலீஸ், சிறை அதிகாரிகள் அல்லது அவர்கள் பிள்ளைகள் என்று தெரியவில்லை , மன்னிக்கவும். இது அனைவருக்கும் நான் சொல்லவில்லை . இதை கண்டறிந்து நம்மிடம் சொல்வதும் ஒரு நேர்மையான அதிகாரிகள் தான். அவர்களுக்கு சல்யூட்
Rate this:
Share this comment
Cancel
elakkumanan - Naifaru,மாலத்தீவு
08-ஜூன்-201823:00:04 IST Report Abuse
elakkumanan விஷம் தீவிரமா பரவி இருக்கு தமிழகத்தில். அறுவை சிகிச்சை தேவை. சாதா வைத்தியம் பத்தாது.
Rate this:
Share this comment
Cancel
Siva - Aruvankadu,இந்தியா
08-ஜூன்-201822:26:48 IST Report Abuse
Siva விளைவை சந்திக்க நான் தயார்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை