Why Kaala oppose Hindu gods? | இந்து கடவுள்களை காரணம் இன்றி எதிர்க்கும் 'காலா': ஏமாற்றப்பட்டாரா ரஜினி?| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இந்து கடவுள்களை காரணம் இன்றி எதிர்க்கும் 'காலா': ஏமாற்றப்பட்டாரா ரஜினி?

Updated : ஜூன் 09, 2018 | Added : ஜூன் 08, 2018 | கருத்துகள் (298)
Advertisement
kaala, rajinikanth, rajini, காலா, ரஜினி, ரஜினிகாந்த், இந்துகடவுள்கள்,

சென்னை: 'கபாலி' படத்திற்குப் பிறகு மீண்டும் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 'காலா', புதிதாக பல சர்ச்சைகளை உருவாக்கி உள்ளது. படத்தைப் பார்த்த பலரும், இயக்குனர் ரஞ்சித் தேவையற்ற பல காட்சிகளை வேண்டுமென்றே திணித்திருக்கிறார் என்று குற்றம் சாட்டுகிறார்கள்.


கடவுள் எதிர்ப்பு:


படத்தைப் பார்த்த பொதுவான ரசிகர்கள், படத்தில் தேவையே இல்லாமல் இந்து மதக் கடவுள்களை எதிர்க்கும் விதத்தில் குறியீடுகளாக பல காட்சிகளை ரஞ்சித் வைத்திருக்கிறார் என்று கோபத்தில் இருக்கிறார்கள்.
படத்தின் ஆரம்பத்திலேயே தாராவி பகுதியில் உள்ள 'டோபிகானா'வை சில ஆட்கள் வந்து இடிக்க முயல்கிறார்கள். அவர்கள் அனைவரும் நெற்றியில் சிவப்பு பொட்டையும், கழுத்தில் காவி உடையையும் அணிந்திருக்கிறார்கள். அதற்குத் தலைமை தாங்கும் துணை வில்லன் சம்பத், கொல்லப்படும் போது, கடலில் விநாயகர் சிலைகளை அழுத்திக் கரைக்கிறார்கள்.


ராமர், கிருஷ்ணர்:


அடுத்து, நானா படேகர் வீட்டைக் காட்டும் போதெல்லாம், அவர் இந்து மதத்தில் தீவிரப் பற்று கொண்டவர் என்பதைக் குறிக்கும் வகையில், பின்னணியில் கிருஷ்ணர் சிலை, அடுத்து ராமர் சிலை ஆகியவற்றை காட்டுகிறார்.
கிளைமாக்ஸ் காட்சியில், வில்லன் நானா படேகர் வீட்டில், ராமர் பூஜையுடன் ராமர் கதாகலாட்சேபம் நடந்து கொண்டிருக்கிறது. அப்போது ராமர், ராவணனை வதம் செய்வது பற்றி பாடப்படுகிறது. அந்த சமயத்தில் ராமன் புகழையும், பெருமையையும் பற்றி சொல்வதை விட ராவணன் பெருமைகளை உரக்கச் சொல்கிறார்கள்.
படத்தின் ஆரம்பத்திலிருந்தே, தாராவி சம்பந்தப்பட்ட காட்சிகளின் பின்னணியில் அம்பேத்கர் படத்திற்கும், புத்தர் படத்திற்கும்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. மற்ற தமிழக தலைவர்கள் யாருக்கும் முக்கியத்துவம் இல்லை.
ரஜினியின் முன்னாள் காதலியான ஹூமா குரேஷி கதாபாத்திரம் முஸ்லிம் கதாபாத்திரமாக படைக்கப்பட்டுள்ளது. அவர்களது குடும்பம் 70களில் நடந்த கலவரத்தில் பாதிக்கப்பட்டு வெளியேறியதாக காட்டப்படுகிறது.



கடவுளுக்கு எதிராக வசனம்:


ஒரு காட்சியில், “என் நிலத்தைப் பறிப்பதுதான் உனது தர்மம், உன் கடவுளின் தர்மம் என்றால் அந்தக் கடவுளைக் கூட எதிர்ப்பேன்,” என ரஜினி வசனம் பேசுகிறார். இங்கு எதற்கு கடவுளை எதிர்ப்பேன் என்ற வசனத்தைத் திணிக்க வேண்டும் என்றும் தெரியவில்லை.
'தூய்மை இந்தியா' என்ற திட்டத்தை, 'தூய்மை மும்பை' என்றும், எச்.ஜாரா (எச்.ராஜா?) என்றும், படத்தில் வேண்டுமென்றே திணித்திருக்கிறார்கள்.
தமிழ்நாட்டுக் களத்தை மையமாக வைத்தால், இங்கு தேவையில்லாமல் பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டும் என்ற பயத்தில் 'கபாலி'யில் மலேசியாவையும், 'காலா'வில் மும்பையையும் கதைக்களமாக ரஞ்சித் வைத்திருக்கிறார் என்கிறார்கள்.
'நாயகன்' படத்திலிருந்து, பல காட்சிகளை உருவி எடுத்துவிட்டு, 'கபாலி, சுறா, வியட்னாம் காலனி' என இதற்கு முன் வந்த பல தமிழ்ப் படங்களிலிருந்தும் காட்சிகளை சுட்டு, 'காலா' என்ற காப்பி படத்தை ரஞ்சித் கொடுத்திருக்கிறார் என சமூக வலைத்தளங்களில் பலரும் குற்றம்சாட்டி வருகிறார்கள்.



ரஜினிக்கு கேள்வி:


'ஆன்மீக அரசியல்' என்று பேசிய ரஜினி, ஆன்மிகத்தை எதிர்க்கும் ஒரு படத்தில் நடிக்க எப்படி சம்மதித்தார் என்றும் அவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.


தலித்துகளும் கோபம்:

இது குறித்து பேசிய மதுரையை சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத ரஜினி ரசிகர்கள் சிலர், ‛‛இப்படத்தில் தலித்துகளுக்கு ஆதரவான கருத்துகளை பதிவு செய்வதாக நினைத்துக்கொண்டு, இந்து நம்பிக்கைகளை புண்படுத்தி உள்ளார் ரஞ்சித். தலித்துகளில் பெரும்பாலானோர் இந்து மதத்தில் ஆழ்ந்த நம்பிக்கை வைத்துள்ளவர்கள் என்பதை அவர் மறந்து விட்டார். இந்து கடவுள்களை எதிர்த்து காட்சி வைத்தால், அரசியலுக்கு வரும்போது, தலித் ஓட்டுகளை நீங்கள் பெறலாம் என ரஜினியையும் ரஞ்சித் ஏமாற்றி உள்ளார்'' என்றனர்.



அடுத்த சர்ச்சை:


இப்படத்தில் இந்து நம்பிக்கைகளுக்கு எதிராக ஏகப்பட்ட குறியீடுகளை வைத்ததன் மூலம், அடுத்த சர்ச்சைக்கு வழி வகுத்துள்ளார் ரஞ்சித்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (298)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Somiah M - chennai,இந்தியா
14-ஜூன்-201819:45:56 IST Report Abuse
Somiah M ரஜினி ஆழ்ந்து சிந்திப்பவர் அல்ல அவசரக்காரர்தான் என்பது நிரூபணம் ஆகியுள்ளது .மாபெரும் மனிதர் ,நடிகர் ,மற்றும் அரசியல்வாதி என பன்முக தோற்றம் கொண்ட மக்கள் திலகம் எம் ஜி ஆர் அவர்கள் தனது ஒவ்வொரு செயலிலும் தனது இமேஜ்மற்றும் கொள்கை எந்த வகையிலும் பாதிக்கப் படாத நிலையை கடைப் பிடித்து வாழ்ந்து காட்டியவர் .அவரைப் போல ஆகவேண்டும் என்று நினைப்பவர்கள் அவர் எடுத்துக் கொண்ட அக்கரையில் ஓரளவாவது கடைப் பிடிக்க வேண்டும் .அப்படி இல்லை என்றால் நினைப்பு பிழைப்பை கெடுத்த கதையாகிவிடும் என்பதை புரிந்து கொள்ளவாவது வேண்டும் . .
Rate this:
Share this comment
Cancel
Guna - Chennai,இந்தியா
14-ஜூன்-201814:59:36 IST Report Abuse
Guna காலா மற்றும் கிருஷ்ணா என்றால் கருப்பு என்றும் ஒரு அர்த்தம் உண்டு. இதில் உலக அரசியலே இருக்கிறது உள்ளூர் அரசியலும் இருக்கிறது.
Rate this:
Share this comment
Cancel
ramesh - kanchipuram,இந்தியா
14-ஜூன்-201811:01:10 IST Report Abuse
ramesh ஹிந்துகளை மற்றும் ஹிந்துத்துவாவை ஆதரிப்பவர்களை ஆதரிப்போம், அது யாராக இருத்தலும் ஹிந்து & ஹிந்துத்துவாவால் எதிர்ப்பவர்கள் மற்றும் திட்டமிட்டு எதிர்ப்போர்களை, இந்திய சட்டத்தை மதிக்காதவர்கள் சமூக விரோதிகள், மதசார்பின்மை போர்வையில் இருக்கும் கயவர்களை & மதம் மாற்றுபவர்கள் எதிர்ப்போம் (ஆதரவு அளிக்க கூடாது ).........
Rate this:
Share this comment
Cancel
sathish - CHENNAI,இந்தியா
14-ஜூன்-201810:57:35 IST Report Abuse
sathish காவிகளின் கதறல்
Rate this:
Share this comment
Cancel
Saravana Doreswamy - chennai,இந்தியா
13-ஜூன்-201813:34:46 IST Report Abuse
Saravana Doreswamy தயவுச்செயது யாரும் காலா படத்தை பார்க்கத்தீர்.ஹிந்துக்களை எப்படி இந்தமாதிரி இழுவுபடுத்தி எடுத்திருக்கிறார்கள். ரஜினி அவரகள் நல்ல உள்ளத்தை தவராக உபயோகப்படுத்தி இருக்கிறாரகள்.ப்ளீஸ் டோன்ட் வாட்ச் திஸ் movie
Rate this:
Share this comment
Cancel
ANAND - Chengalpattu,இந்தியா
13-ஜூன்-201809:13:10 IST Report Abuse
ANAND சாதிய வெறி சாதிய வன்முறை கும்பலின் உளவாளி இந்த ரஞ்சித் .,காலா என்று பெயர் வைக்காமல் அட்டகத்தி -2 என்று வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் ...என் வாழ்க்கையில் 200 ரூபாயும் 2.30 மணி நேரமும் விரயமானதை சரி செய்ய இரண்டு மாதம் தேவைப்படும் ...
Rate this:
Share this comment
Cancel
Adhvikaa Adhvikaa - chennai,இந்தியா
13-ஜூன்-201807:25:49 IST Report Abuse
Adhvikaa Adhvikaa ரஜினியே முட்டாள் தனமாக இப்படி ஒரு கேவலமான படத்தில் நடித்து நன்றாக தனக்குத்தானே போட்டுக்கொண்டார். அவருக்கு நமது ஆழ்ந்த அனுதாபங்கள். ரஞ்சித் ஒரு சைக்கோ. அவன் படத்தில் நடித்து காலா மூலமாக ரஜினி மிகப்பெரிய கெட்ட பெயரை மட்டுமே சம்பாதித்துள்ளார். இவருக்கு வேண்டாத வேலை .
Rate this:
Share this comment
Cancel
Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
12-ஜூன்-201815:09:37 IST Report Abuse
Yaro Oruvan ரஞ்சித் படத்தை இனிமேல் பார்ப்பதில்லை. இனிமேல் அவனது படம் வருமா என்பதே சந்தேகம்.. அப்படி ஏதேனும் படம் எடுத்தால் பார்க்க மாட்டேன்.. இந்த முடிவை என் போன்ற பலர் எடுத்திருப்பார்கள் என நம்புகிறேன்.. இதே கதையில் நானா படேகர் பாத்திரத்தில் மற்ற மதம் சார்ந்தவராக ரஞ்சித்தால் காட்டியிருக்க முடியுமா? காட்டியிருந்தால் உயிரோடுதான் விட்டிருப்பங்களா? டாவின்சி கோட் படம் வந்தபோது என்ன செய்தார்கள்? உலகின் எங்கயோ ஒரு மூலையில் உள்ள குட்டி நாட்டில் ஒருவன் போட்ட கார்ட்டூனுக்கு நம்ம சென்னையில் போட்ட அலப்பறை கொஞ்சமா நஞ்சமா? ஜஸ்ட் லீவ் இட்.. அவன் தானாகவே அடங்குவான் படம் இல்லாமல்... ஜைஹிந்.
Rate this:
Share this comment
srinivasan - bangalore,இந்தியா
14-ஜூன்-201815:11:53 IST Report Abuse
srinivasanஉண்மை...
Rate this:
Share this comment
Cancel
ganapati sb - coimbatore,இந்தியா
12-ஜூன்-201813:05:06 IST Report Abuse
ganapati sb இயக்குனர் நடிகர் நடிகை இசை அமைப்பாளர் உச்சத்தில் இருந்தபோது ராவணன் என்று ஒரு படம் வந்தது அதுவும் ஓடவில்லை ராமேஸ்வரம் ராமர்பாலம் கொண்ட தமிழகத்தில் பன்னிரு ஆழ்வார்கள் அவதரித்து புகழ்ந்து பாடிய தமிழ் கடவுள் மாயோன் அவதாரமான ராமனை மறைமுகமாக கூட தவறாக யார் சித்தரித்து படம் எடுத்தாலும் ஓடாது ஆனால் பலர் எதிர்க்கையில் ராம ரதம் தமிழகத்தில் நன்றாக ஓடியது
Rate this:
Share this comment
Cancel
rishi - varanasi,இந்தியா
11-ஜூன்-201818:53:11 IST Report Abuse
rishi ரஜினி ஒரு அரைவேக்காடு , ரஞ்சித் ஒரு அரைவேக்காடு , காலா ஒரு அரைவேக்காடு , பன்றியொடு கன்றும் சேர்ந்தால் என ஆகுமோ அதுதான் ரஜினிக்கு இப்பொது நடந்திருக்கிறது . ஹிந்துக்கள் முகம் சுழிக்கிக வைதப்படம் காலா. யாரும் தியேட்டர் செல்ல வேண்டாம் வசூல் குறைந்தால் தானாக புத்தி வரும்.
Rate this:
Share this comment
Anandan - chennai,இந்தியா
13-ஜூன்-201804:33:40 IST Report Abuse
Anandanரஜினிக்கு காவடி தூக்குனவங்களே ரஜினியை தூத்தும்போது அடடா, சங்கிகள் மூளை அவ்வளவுதானா?...
Rate this:
Share this comment
ganapati sb - coimbatore,இந்தியா
14-ஜூன்-201816:56:03 IST Report Abuse
ganapati sbபாரத கலாச்சாரம் பற்றிய கொள்கைதான் முக்கியம் தனிநபர்கள் முக்கியம் இல்லை. அந்த கொள்கையை யார் எப்போது ஆதரித்தாலும் அவர்களை ஆதரிப்போம் யார் எப்போது எதிர்த்தாலும் கருத்து ரீதியாக எதிர்ப்போம் . பகவத்கீதையை திருக்குறளை போற்றிய ராமேஸ்வரம் கலாமை இஸ்லாமியராக இருந்தாலும் ஆதரிப்போம் ராமரை திருவள்ளுவரை தூற்றிய ஈரோடு ராமசாமியை இந்துவாக இருந்தாலும் எதிர்ப்போம்.ராமசாமி அண்ணாதுரை கருணாநிதியால் மாய வலையால் முன்னர் வழிதவறிய முத்தையா பின் சுயத்தை உணர்ந்து கண்ணதாசன் என ஆன்மிக மாற்றம் பெற்றது போல பாருக்கெல்லாம் திலகம் போன்ற பாரத பூமியில் பிறந்த அனைவருக்கும் நிகழவேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பு வேறேதும் இல்லை...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை