63 வயது பாட்டிக்கு, 'குவா குவா'| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

63 வயது பாட்டிக்கு, 'குவா குவா'

Added : ஜூன் 09, 2018 | கருத்துகள் (17)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
குவா குவா, செயற்கை முறை கருவூட்டல், பெண் குழந்தை, கிருஷ்ணன்- செந்தமிழ் செல்வி  தம்பதியர்,  டாக்டர் செந்தாமரை செல்வி,  பாட்டிக்கு குவா குவா, kuva kuva, Artificial Insemination, Woman Child, Krishnan- Senthamil Selvi Couple, Dr. Senthamarai Selvi, Grandma

சென்னை: செயற்கை முறை கருவூட்டல் வாயிலாக, 63 வயதான பாட்டிக்கு, ஆரோக்கியமான பெண் குழந்தை பிறந்துள்ளது.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டி பாளையத்தை சேர்ந்த தம்பதியர், கிருஷ்ணன், 71 - செந்தமிழ் செல்வி, 63. இவர்களுக்கு, 42 ஆண்டுகளுக்கு முன், திருமணம் நடந்தது; குழந்தை இல்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன், பழனியில் உள்ள குழந்தையின்மை சிகிச்சை மையத்திற்கு சென்றனர். அங்கு, டாக்டர் செந்தாமரை செல்வி தலைமையிலான டாக்டர்கள், செந்தமிழ் செல்வியை பரிசோதித்தனர். அப்போது அவருக்கு, மாதவிடாய் நின்று, 10 ஆண்டுகள் ஆகியிருந்ததும், நீரிழிவு உள்ளிட்ட நோய்கள் இருந்ததும் தெரிய வந்தது; தொடர் சிகிச்சை அளித்தனர். பின், செயற்கை முறை கருவூட்டல் செய்து, கருமாற்று சிகிச்சையை மேற்கொண்டனர். தற்போது, செந்தமிழ் செல்விக்கு, 3.2 கிலோ எடையுள்ள, ஆரோக்கியமான பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனால், வயதான தம்பதியர் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

இது குறித்து, டாக்டர் செந்தாமரை செல்வி கூறியதாவது: செந்தமிழ் செல்விக்கு, வயது முதிர்ந்தாலும், குழந்தை பெற்றுக் கொள்ளும் ஆர்வம் குறையவில்லை. எனவே, அவரின் உடல்நலம் சார்ந்த சிகிச்சைகளை அளித்து, தொடர் கண்காணிப்பில் வைத்திருந்து, உரிய ஆலோசனைகள் வழங்கினோம். அவர், மருத்துவ சிகிச்சைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கினார். தற்போது, அழகான குழந்தை பெற்று நலமுடனும், மகிழ்ச்சியுடனும் இருக்கிறார்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா
15-ஜூன்-201814:43:37 IST Report Abuse
N.Kaliraj ஒரு பொம்மலாட்டம் நடக்குது....ரொம்ப புதுமையாக இருக்குது...
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
10-ஜூன்-201814:41:46 IST Report Abuse
Endrum Indian ஓ மை காட் இதை அதிசயம் என்று சொல்வதா??? நாம் மிக மிக முன்னேறி விட்டோம் மருத்துவ துறையில் என்று சொல்வதா???(அப்போ ஏன் நம்ம பெரிய தலைகள் அயல் நாடுகளுக்கு செல்கின்றனர் மருத்துவத்திற்காக என்ற பெரிய கேள்வி இருக்கின்றது, இப்படித்தானே நாம் வேறு மருத்துவத்துறைகளிலும் முன்னேறியிருப்போம்). குழந்தையை (பேரனை சுமக்க வேண்டிய வயதில்) நன்கு பார்த்து வளர்க்கவும். அவருக்கும் 71 வயது ஆகி விட்டது. குழந்தைக்கு இப்போதே ஒரு பாதுகாவலர் நியமிக்கவும். இந்த சாதனை செய்த அந்த குழந்தை சிகிச்சை மையத்துக்கு பாராட்டுக்கள் பல. அந்த தாயான பாட்டிக்கும் வாழ்த்துக்கள் பல.
Rate this:
Share this comment
Cancel
09-ஜூன்-201815:46:52 IST Report Abuse
a.thirumalai மகிழ்ச்சி பொங்கட்டும்.
Rate this:
Share this comment
Cancel
chails ahamad - doha,கத்தார்
09-ஜூன்-201811:24:20 IST Report Abuse
chails ahamad இங்கே கருத்து பதிவு செய்துள்ளவர்களில் சிலர் , அந்த குழந்தையின் வயதான பெற்றோர்களின் ஆயுள் காலங்களை ஒப்பிட்டு , அந்த குழந்தையை வளர்த்து ஆளாக்கும் வரைக்கும் என்பதாக வினா தொடுத்துள்ளார்கள் , அவர்களுடைய நியாயமான கவலைகளை நாம் உணர்ந்தாலும் , ஒன்றினை இந்த வாசகர்கள் கவனத்தில் கொள்ள மறந்ததினால் தேவையற்ற வினாக்களை தொடுத்துள்ளார்கள் என்பதையும் நம்மால் உணர முடிகின்றது , எந்த ஒரு குழந்தையும் கருவில் உருவாகும் போதே அதற்கு உரிய வாழ்நாள் முழுவதுக்குமான பலன்கள் அனைத்தும் தீர்மானிக்கப்படுவதாக இறை நம்பிக்கையாளர்களின் நம்பிக்கையாகும் , அதுவே நூற்றுக்கு நூறு உண்மையுமாகும், அந்த குழந்தை வளர்ந்து ஆளாகும் வரைக்கும் நம்மையறியாமலேயே ஒரு சக்தி பாதுகாத்திடும் என்பதை நம்புவோம் , அந்த பெற்றோர்களையும் குழந்தையையும் மனதார வாழ்த்திடும் .
Rate this:
Share this comment
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
09-ஜூன்-201820:29:31 IST Report Abuse
Nallavan Nallavanமிகவும் நல்ல கருத்து ........
Rate this:
Share this comment
N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா
15-ஜூன்-201814:59:31 IST Report Abuse
N.Kaliraj அதாவது மரத்த வச்சவவன் தண்ணி ஊத்துவான்...ஓ மனமே கலங்காதே...படைத்தவர் எவரோ அவரே காப்பார்...ஓம் சாந்தி ஓம்...ஓம் சாந்தி ஓம்......
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
09-ஜூன்-201807:49:31 IST Report Abuse
Bhaskaran உறவினர்கள் மத்தியில் இப்போது இவர்கள் வேண்டாதவர்கள் ஆகியிருப்பார்கள் (எத்தனை கதை படிக்கிறோம் பணத்துக்காகவே சொந்தங்கள் எல்லாம் )
Rate this:
Share this comment
shiva.G - chennai,இந்தியா
10-ஜூன்-201811:08:24 IST Report Abuse
shiva.Gஉண்மைதான் பாஸ்கரன்...
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
09-ஜூன்-201807:30:06 IST Report Abuse
ஆரூர் ரங் குழந்தையை வளர்க்க ஆயுளும் ஆரோக்கியமும் அவசியம். போதாததற்கு நாற்பதுகளில் உள்ள பெற்றோருடனே இக்காலப் பிள்ளைகளுக்கு தலைமுறை இடைவெளி அதிகமாக உள்ளது தினசரி முட்டாள் மோதல்கள்தான்.பரஸ்பர புரிதல் எட்டாக்கனி. . அப்படியிருக்கும்போது இவர்களுக்கு மூன்று தலைமுறை இடைவெளி என்பது இன்னும் ரிஸ்க். இதற்கு பதில் அனாதைகளைத் தத்தெடுத்திருக்கலாம்.ஆகமொத்தம் இதனால் டாக்டர்களுக்கு பல லட்சம் வரும்படி
Rate this:
Share this comment
Cancel
Amirthalingam Sinniah - toronto,கனடா
09-ஜூன்-201806:20:55 IST Report Abuse
Amirthalingam Sinniah வாழ்த்துக்கள் ஒருபுறம் இருக்க, பத்து வயது வரும்போது கிருஷ்னருக்கு 81 வயது. தாய்க்கு 73. பிள்ளைக்கு சுமைகளை ஏற்றிவைத்துள்ளனர். கடவுள்தான் காப்பாற்றவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Giridharan S - Kancheepuram,இந்தியா
09-ஜூன்-201806:01:44 IST Report Abuse
Giridharan S வயதான தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள். அந்த குழந்தையை நன்றாக வளர்க்கும் வரை தங்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். மற்றவர்களை நம்பி இந்த குழந்தையை விட்டு விடாதீர்கள்.
Rate this:
Share this comment
Cancel
சுரேஷ் குமார். - சொக்கநாதபுரம். ,சிங்கப்பூர்
09-ஜூன்-201805:23:46 IST Report Abuse
சுரேஷ் குமார். 63 வயது பாட்டி என்று தலைப்பு கொடுத்ததை விட, 63 வயது பெண்மணி என்று தலைப்பு கொடுத்து இருக்கலாம்... பாட்டி என்பது கேலியாக சித்தரிப்பது போல உள்ளது.. இந்த செய்தியை அந்த அக்கா செந்தமிழ் செல்வி படித்தால் என்ன நினைப்பார்?
Rate this:
Share this comment
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
09-ஜூன்-201813:31:04 IST Report Abuse
Nallavan Nallavan"குவா குவா" என்பதையும் குழந்தைப்பேறு என்று குறிப்பிட்டிருக்கலாம் .......
Rate this:
Share this comment
N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா
15-ஜூன்-201814:54:32 IST Report Abuse
N.Kaliraj பாட்டின்னு சொல்லாம வேறெப்படிங்க சொல்ல முடியும்.....63 வயது குமரி என்று சொன்னால்தாங்க கேலி...காது கொடுத்து கேட்டேன் ஆஹா...குவா...குவா சத்தம்....இப்படி நினைத்து சொல்லி இருக்காங்க ரசிப்போம்.....
Rate this:
Share this comment
Cancel
chails ahamad - doha,கத்தார்
09-ஜூன்-201804:20:10 IST Report Abuse
chails ahamad மனதிற்கு மகிழ்வுகள் தாய்மையை போற்றுகின்றேன் , வாழ்த்துகின்றேன் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை