'வைரல்' வைசாலி| Dinamalar

'வைரல்' வைசாலி

Added : ஜூன் 10, 2018 | கருத்துகள் (1)
Advertisement
'வைரல்' வைசாலி

ஜில்லென்று ஜொலிப்பதெல்லாம் தங்கமா; இல்லை அங்கமா... துள்ளி நீந்துவதெல்லாம் கண்களா; இல்லை மீன்களா... சிந்தி சிதறுவதெல்லாம் சிரிப்பா; இல்லை தேனிதழின் இனிப்பா... கூந்தலில் கூட்டணி சேர்ந்ததெல்லாம் வெண்ணிற பூக்களா; இல்லை வெண்பாக்களா... என, தன் அழகால் மயக்கும் மங்கை, தமிழ் சினிமாவின் 'வைரல் தங்கை' வைஷாலி தணிகா பேசுகிறார்...

* முகம் அறிமுகம் ?நடிகர் விஷாலின் 'கதகளி' படத்தில் அவருக்கு தங்கையாக நடித்து அறிமுகமானேன்.

*'கதகளி'க்கு பின் ?'ரெமோ', 'பைரவா', 'கழுகு', 'சங்கிலி புங்கிலி கதவை திற', 'எங்க அம்மா ராணி' என பல படங்களில் ஹீரோ, ஹீரோயினுக்கு தங்கை, தோழி கேரக்டரில் நடித்துவிட்டேன்.

* தொடர்ந்து சிஸ்டர் கேரக்டர்ஸ் ?சிஸ்டர் கேரக்டர் என்றால் சாதாரணமான விஷயமா... அதிலும் நடிப்பு திறமையை வெளிப்படுத்த நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. ஆரம்பத்தில் கொஞ்சம் பயம் இருந்தது. சக நடிகர்கள் எனக்கு உற்சாகம் கொடுத்து கற்றுக் கொடுப்பதால் 'சிஸ்டர் கேரக்டர்' தொடர்கிறது...

* ஒரே கேரக்டர் ?எனக்கு 'போர்' அடிக்கவில்லை; ஒவ்வொரு படத்தில் நடிக்கும் போதும் புது விஷயத்தை தெரிந்து கொள்கிறேன். என்னைப் போல் தோழி, தங்கை கேரக்டரில் நடித்த பல நடிகைகள் இன்று ஹீரோயினாக இருக்கிறார்களே... இன்று ஹீரோயினாக சாதிக்கும் திரிஷா கூட 'ஜோடி' படத்தில் 'சப்போர்ட்டிங்' கேரக்டரில் நடித்தவர் தானே...

* நீங்களும் ஹீரோயினாக... ?அதெல்லாம் நிறைய வாய்ப்புகள் வந்து கொண்டே தான் இருக்கின்றன. ஹீரோயின் என்றால் சும்மா 'டூயட்' பாட்டிற்கு ஆடிவிட்டு போவது போல இருக்கக் கூடாது. அந்த கேரக்டருக்கு முக்கியத்துவம் இருக்க வேண்டும்.

* அதென்ன முக்கியத்துவம் ?நான் ஹீரோயினாக நடித்து விருது பெற்ற 'அவள்' குறும்படத்தில் என் கேரக்டரை சுற்றி தான் கதையே நகரும். அதே போல் ஹீரோயினை மையமாக கொண்ட 'அருவி', நயன்தாரா சிங்கம் மாதிரி சிங்கிளாக நடிப்பது போன்ற படங்களில் நடிக்க வேண்டும் என்பதே என் லட்சியம்.

* உங்கள் நடிப்பில் 'கம்மிங் சூன்'...சிவகார்த்திகேயன், சூரி நடிக்கும், பொன்ராம் இயக்கும் 'சீமை ராஜா', 'விஜய் 62' அப்புறம் விஜய் ஆன்டனி நடிக்கும் படம் ஒன்றில் நடிக்கிறேன்.

* பொன்ராம் - சிவகார்த்திகேயன் - சூரி?'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்' படங்களுக்கு பின் இவர்கள் கூட்டணியில் வரும் மூன்றாவது படம் 'சீமை ராஜா'வில் நான் சமந்தாவுக்கு தோழியாக நடிக்கிறேன். படம் மட்டுமல்ல 'சூட்டிங் ஸ்பாட்' கூட காமெடி கலாட்டாவாக இருக்கும். சூரி இருக்கும் போது இதுகூட இல்லை என்றால் எப்படி...

* நடிகர்களின் டப்மாஷ் ?ஆமா... இப்போ 'டப்மாஷ் சீசன்' களை கட்டிகிட்டு தான் இருக்கு, நான் கூட பண்ணுவேன். நாம் நினைக்கும் விஷயத்தை ரசிகர்களுக்கு உடனே சொல்றதுக்கு பேஸ்புக், டுவிட்டர் ரொம்ப உதவியா இருக்கு. எனக்கும் இதெல்லாம் பிடிக்கும். ஆனால் அதுக்கெல்லாம் நான் அடிமை இல்லை...
vaishalithaniga@gmail.com

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X