பன்னீர், பழனிசாமி பதவி; தேர்தல் கமிஷன் அதிரடி Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
பன்னீர்,பழனிசாமி,பதவி,தேர்தல் கமிஷன்,அதிரடி

அ.தி.மு.க.,வில், பொதுச்செயலர் பதவி இல்லை என்பது உட்பட, பொதுக்குழுவில் மேற்கொள்ளப்பட்ட விதிகள் மாற்றத்திற்கு, தேர்தல் கமிஷன் ஒப்புதல் அளித்துள்ளது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளில், பன்னீர்செல்வம், பழனிசாமி தொடரவும், அனுமதி வழங்கியுள்ளது. தேர்தல் கமிஷனின் இந்த அதிரடியால், தினகரன் அணியினர் திகைப்படைந்துள்ளனர்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின், அ.தி.மு.க.,வின் தற்காலிக பொதுச்செயலராக, சசிகலா தேர்வு செய்யப்பட்டார். கட்சி சட்ட விதிகளின்படி, தேர்வு செய்யப்படாததால், அவரது நியமனத்திற்கு, கடும் எதிர்ப்பு எழுந்தது. அத்துடன், முதல்வர் பதவியை பிடிக்கவும் முற்பட்டார். ஆனால், சொத்து குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட, நான்கு ஆண்டு சிறை தண்டனையை, உச்ச நீதிமன்றம் உறுதி செய்ததால், அவரின் முதல்வர் பதவி கனவு தகர்ந்தது.
ஆனாலும், சிறைக்கு செல்வதற்கு முன், பழனிசாமியை முதல்வராக்கினார். கட்சியின் துணை பொதுச்செயலராக, தன் அக்கா மகன் தினகரனை நியமித்தார். அதேநேரத்தில், முதல்வர் பதவியிலிருந்து தன்னை விலக வைத்ததால், ஆத்திரமடைந்த பன்னீர் செல்வம், தனி அணியாக செயல்பட்டார்.
சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், தினகரன் போட்டியிட்ட போது, அவரை எதிர்த்து, பன்னீர் அணி சார்பில், அ.தி.மு.க., அவைத்தலைவர் மதுசூதனன் போட்டியிட்டார். இரட்டை இலை சின்னம்

யாருக்கு என்ற சிக்கல் வந்ததால், சின்னத்தை தேர்தல் கமிஷன் முடக்கியது.
அத்துடன், முறைகேடு புகார்கள் காரணமாக, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதற்கிடையில், இரட்டை இலையை மீட்பதற்காக, தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு, லஞ்சம் கொடுத்த வழக்கில், தினகரன் கைது செய்யப்பட்டார்.
பின், காட்சிகள் மாறின. பன்னீர் விதித்த நிபந்தனைப்படி, சசிகலா குடும்பத்தினரை புறக்கணிப்பதில், முதல்வர் பழனிசாமி அக்கறை காட்டினார். அதனால், பன்னீர் - பழனி அணிகள், 2017 செப்டம்பரில் இணைந்தன. இரு அணிகளும் இணைந்த பின், அ.தி.மு.க., என்ற கட்சி பெயரும், இரட்டை இலை சின்னமும் கிடைத்தது.

மாற்றங்கள் :


இந்நிலையில், 2017 செப்டம்பர், 12ல், அ.தி.மு.க., பொதுக்குழு கூடியது. அதில், கட்சி விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டன. கட்சியிலிருந்து பொதுச்செயலர், சசிகலாவை நீக்கி தீர்மானம் நிறைவேற்றி, அதற்கு ஒப்புதல் பெறப்பட்டது.


பொதுச்செயலர் பதவியே, இனி கிடையாது என்றும், கட்சியை வழிநடத்த, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்படும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, துணை முதல்வர் பன்னீர் செல்வம், கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும், முதல்வர் பழனிசாமி, இணை ஒருங்கிணைப்பாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
அ.தி.மு.க., பொதுக்குழுவின் முடிவுகளும், புதிய விதிகளும், தேர்தல் கமிஷனின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டன. அவற்றை, தேர்தல் கமிஷன் அதிகாரிகள் பரிசீலனை செய்தனர். இதையடுத்து, அ.தி.மு.க.,வில், பொதுச்செயலர் பதவி இல்லை என்ற தீர்மானத்திற்கும், பன்னீர்செல்வம், பழனிசாமி இருவரும், கட்சி பதவிகளில் தொடரவும், கட்சியில் நிர்வாக ரீதியாக, அவர்கள் மாற்றங்கள் ஏற்படுத்தவும், நிர்வாகிகளை நியமிக்கவும், தேர்தல் கமிஷன் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த விபரம், தேர்தல் கமிஷனின் இணைய தளத்திலும், அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு உள்ளது.

இதனால், அ.தி.மு.க.,வினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

பின்னடைவு :


அதேநேரத்தில், தேர்தல் கமிஷன் அதிரடியால், 'இரட்டை இலையை மீட்போம்; அ.தி.மு.க.,வையும் மீட்போம்' என, முழங்கி வந்த, தினகரன் தரப்பினர் திகைப்பு அடைந்துள்ளனர்.
'தேர்தல் கமிஷன் முடிவை எதிர்த்து, வழக்கு தொடருவோம்' என, தினகரன் கூறியுள்ளார். 'தேர்தல் கமிஷன் அறிவிப்பு, சசிகலா, தினகரன் ஆகியோரின் அரசியல் வாழ்க்கைக்கு, பெரும் பின்னடைவு' என, அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

'டிவி' விவாதங்களில் பங்கேற்பது யார்?

அ.தி.மு.க., செய்தி தொடர்பாளர்கள் பலர், 'டிவி' விவாதங்களில் பங்கேற்று வந்தனர். அவர்கள், கட்சிக்கு வலு சேர்க்கும் வகையில் பேசாமல், சொதப்பினர். சமீபத்தில், விவாதம் ஒன்றில் பங்கேற்ற, சேலத்தைச் சேர்ந்த, முன்னாள் அமைச்சர் பேச்சும், சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால், செய்தி தொடர்பாளர்கள், 'டிவி' விவாதங்களில் பங்கேற்க, அ.தி.மு.க., தடை விதித்துள்ளது. இந்நிலையில், செய்தி தொடர்பாளர்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கு நேர்காணல் நடத்தவும், அதில், சிறப்பாக செயல்படுவோரை, 'டிவி' விவாதங்களில் பங்கேற்க அனுமதிக்கவும், கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளது. இதற்கான, நேர்காணல் விரைவில் நடக்கும் என, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


- நமது நிருபர் -


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (50)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
POPCORN - Chennai ,இந்தியா
11-ஜூன்-201821:34:32 IST Report Abuse

POPCORNமக்களின் சரவெடி இதற்கு மேல் இருக்கு..பாடிக்கு அஆவ்

Rate this:
S.Premachandran - Mississauga,கனடா
11-ஜூன்-201819:25:49 IST Report Abuse

S.Premachandranஇந்த முடிவை தற்போது தேர்தல் கமிஷன் வெளியிட்டிருப்பதின் காரணம் இரட்டை இலை சின்னம் உரிமை பன்னீர்செல்வம் கூட்டத்துக்கு கிடைப்பதற்கு எதுவாக நீதிமன்ற தீர்ப்புக்கு ஒரு நல்ல காரணம் இருக்கவேண்டும் என்ற டெல்லி அதிகார ஏற்பாடுதான் என்பது படித்த மனிதர்களுக்கு நன்கு புரியும்

Rate this:
Kansami Ponsami - Thoothukudi,இந்தியா
11-ஜூன்-201815:50:25 IST Report Abuse

Kansami Ponsamiதேர்தல் கமிஷன் ஆளும் மத்திய அரசின் கைப்பிடியில் இருக்கும்போது எம்மாத்திரம்???முதல்வரே இல்லாமல் கவர்னர் ஆளலாம்,முடிவுகள் எடுக்கலாம் என்று சொன்னால் கூட தேர்தல் கமிஷன் அதை அங்கிகரிக்கும் நிலையில் உள்ளது மக்களுக்கு நன்கு தெரியும்...

Rate this:
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
11-ஜூன்-201814:23:37 IST Report Abuse

தமிழர்நீதி தூத்துக்குடியில் சுட்டுபயமுறுத்திய காவல்துறை கொள்ளையடிக்கும் பழனி பன்னீர் கும்பல் இவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் மோடி இவர்களை வைத்துக்கொண்டு உயிரில்லாத இருக்கல்லறை ஒரு இரத்தடை இலை சேர்ந்து பழனி பன்னீரை காக்காது . பழனி அண்ட்ப ன்னீர் தமிகத்தின் எந்தத்தெருவிலும் நடமாட முடியாது அவ்வளவு மதிப்பு இருவருக்கும் .

Rate this:
C.Elumalai - Chennai,இந்தியா
11-ஜூன்-201811:38:37 IST Report Abuse

C.Elumalaiஇங்க சட்டமேதைகள் கருத்து என்ற போர்வையில் தங்களது .. காட்டுகிறார்கள். மோடி இதில் எங்கு வருகிறார்? மோடியை எப்போதும் நினைவில் உள்ளவர்களுக்கு, மோடி தான் கண்ணுக்கு தெரியும். அதிமுக அடிமை என்போர்கள் திமுகாவின் குடும்ப கொத்தடிமைகள். அரண்டவன் கண்ணுக்கு இருண்டதால்லாம் போயாகதெரிகிறது.

Rate this:
மாரிமுத்து.க - சென்னை,இந்தியா
11-ஜூன்-201811:09:23 IST Report Abuse

மாரிமுத்து.க  இது என்ன பிரமாதம்? இன்னும் எவ்வளோவோ இருக்கு...

Rate this:
murugan - chennai,இந்தியா
11-ஜூன்-201811:04:04 IST Report Abuse

muruganஎன்னதான் பழத்தை உரித்து மோடி அவர்கள் ops , eps இருவர் வாயில் ஊட்டினாலும் ஒன்றும் ஆகப்போவது இல்லை இது மோடிக்கே தெரியும்.

Rate this:
இந்தியன் kumar - chennai,இந்தியா
11-ஜூன்-201811:02:01 IST Report Abuse

இந்தியன் kumarஇந்த அரசுக்கு பெரும்பான்மை கிடையாது .வரும் லோக்சபா தேர்தலோடு சட்ட மன்ற தேர்தலும் நடத்தப்பட வேண்டும். மக்கள் தங்கள் முதலமைச்சரை தேர்ந்து எடுத்து கொள்ளட்டும்.

Rate this:
Nallappan Kannan Nallappan - Perambalur,இந்தியா
11-ஜூன்-201810:23:53 IST Report Abuse

Nallappan Kannan Nallappanராம.ராசு - கரூர்,இந்தியா - யாரு போராடுனா முதலில் போராட்டம் என்றால் என்ன அடுத்தவன் வைத்தில் அடிப்பது அப்படித்தானே

Rate this:
Nallappan Kannan Nallappan - Perambalur,இந்தியா
11-ஜூன்-201810:18:34 IST Report Abuse

Nallappan Kannan NallappanBalakrishnan - Coimbatore,இந்தியா- அந்த சூதனத்தை நீங்கள் கற்றுக்கொடுங்கள் ஏன் இன்னா நீங்கள் சூதனம் நிரஞ்ச கருத்துக்களை பதியரிங்க தானே

Rate this:
Sathish - Coimbatore ,இந்தியா
11-ஜூன்-201820:03:54 IST Report Abuse

Sathish வேடிக்கை மனிதர் சார் அவரு. விடுங்க. என்னமோ போட்டுட்டு போறாரு....

Rate this:
மேலும் 39 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement