இ.பி.எஸ், - ஓ.பி.எஸ்., வீட்டிற்கு சென்றால் தான் காவிரி நீர் தமிழகத்திற்கு வரும்: மாஜி அமைச்சர் பேச்சு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இ.பி.எஸ், - ஓ.பி.எஸ்., வீட்டிற்கு சென்றால் தான் காவிரி நீர் தமிழகத்திற்கு வரும்: மாஜி அமைச்சர் பேச்சு

Added : ஜூன் 11, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

பெண்ணாடம்: இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்., வீட்டிற்கு சென்றால் தான் காவிரி நீர் தமிழகத்திற்கு வரும் என்று, தி.மு.க., மாஜி மத்திய அமைச்சர் ராசா பேசினார்.தி.மு.க., தலைவர் கருணாநிதி பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் பெண்ணாடத்தில் நடந்தது. மாவட்ட செயலர் கணேசன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் பாவாடை கோவிந்தசாமி, நல்லுார் தெற்கு ஒன்றியச் செயலர் கோதண்டபாணி, மாஜி பேரூராட்சி தலைவர் சிவதியாகராஜன் முன்னிலை வகித்தார். நகரச் செயலர் குமரவேல் வரவேற்றார். நல்லுார் தெற்கு ஒன்றிய துணைச் செயலர் அமிர்தா வேல்முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில் மாஜி மத்திய அமைச்சர் ராசா பேசியதாவது;தமிழகத்தை பல முதல்வர்கள் ஆட்சி செய்தார்கள், ஆனால் கருணாநிதியைப் போல் யாரும் நிர்வாகம் செய்தவர்கள் இல்லை. இவருக்கு பல அடையாளங்கள் உள்ளன. 1989ல் பெண்களுக்கு சம உரிமையை கொண்டு வந்தவர் மட்டும் இல்லாமல் சமுதாயத்தில் பல சீர்த்திருத்தங்களை கொண்டு வந்தவர். உடல் ஊனமுற்றோர்களுக்கு மாற்றத்திறனாளி என பெயர் சூட்டி அவர்களை கவுரவித்தவர்.சட்டசபையில் 110 விதியை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தெரியாத இ.பி.எஸ்., கூறுகிறார், 110 விதியின் கீழ் தணணீர் வராது என்று. ஆனால் இதற்கு இந்த 110 விதி தேவையா.தி.மு.க., ஆட்சிக்கு பிறகு இதுவரை தமிழகத்திற்கு காவிரி நீர் வரவே இல்லை. இப்பிரச்னைக்கு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி சட்ட மசோதா அமைத்தவர் கருணாநிதி. ஆனால் அதற்குள் ஆட்சி முடிந்ததால் யாரும் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. தொடந்து ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க., விடம் காவிரி நீர் திறப்பு வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. ஏன் சட்ட மசோதாவை தாக்கல் செய்யவில்லை என தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியது. அதைத் தொடர்ந்து, அ.தி.மு.க., அரசு அரசிதழில் காவிரி நீர் திறப்பு குறித்து வெளியிட்டது. அதற்கு, தஞ்சாவூரில் ஜெ., வுக்கு பாராட்டு விழா நடத்தி விவசாயிகள் என்ற போர்வையில் அ.தி.மு.க., வினர் 'பொன்னியின் செல்வி' என்ற பட்டம் கொடுத்தனர். ஆனால் காவிரியில் தண்ணீர் வந்தபாடில்லை. இ.பி.எஸ், ஓ.பி.எஸ்., வீட்டிற்கு சென்றால் தான் காவிரி நீர் தமிழகத்திற்கு வரும்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
madhavan rajan - trichy,இந்தியா
14-ஜூன்-201817:09:34 IST Report Abuse
madhavan rajan ஈபீஸ் ஓபிஎஸ் வீட்டுக்குப் போனபிறகும் காவிரி நீர் வராவிட்டால் நீங்களும், சுடாலினும் அரசியலை விட்டு ஒதுங்கி வீட்டுக்கு போகத் தயாரா? உங்கள் பன்முகத் தலைவர் காவிரி நீர் சரியாக வராமலிருக்கத் தன்னால் இயன்றதைச் செய்தார். அதைக்கொண்டுவரும் முயற்சியில் சிறப்பாக ஜெ தன்னால் இயன்றதைச் செய்தார். அதற்கான ஆணையத்தை அமைக்க மத்திய அரசை வலியுறுத்துவதில் இப்போதைய அரசு தன்னால் இயன்றதைச் செய்தது. நீங்கள் காவிரிக்காக உழைத்தது பத்து சதவீதம் கூட இல்லை. எதிர்க்கட்சியாக இருக்கும்போதெல்லாம் போராட்டம் நடத்தியே காலத்தை ஓட்டி மக்களுக்கு தொந்தரவு அளித்ததோடு சரி. உங்கள் கட்சி மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியிலிருந்தபோது உருப்படியாக இந்த விஷயத்தில் ஒன்றும் செய்யவில்லை என்பதே உண்மை.
Rate this:
Share this comment
Cancel
Jaya Ram - madurai,இந்தியா
14-ஜூன்-201815:08:14 IST Report Abuse
Jaya Ram ஆமாம் பன்முகம் கொண்டவர்தான் உங்கள் தலைவர், தொண்டனிடம் ஒரு முகம்,மனைவிடம் ஒரு முகம் , மக்களிடம் ஒருமுகம் இதுபோக டாக்டர் பட்டம் வாங்க போகும்போது ஒருமுகம், மத்திய அரசிடம் பதவி இலாகா கேட்டு பெறும்போது ஒருமுகம் , அடுத்தவர்களை நாக்கலடிக்கும்போது ஒருமுகம் என கொண்டவர்தான் அது போகட்டும் அது அவருடைய தனிப்பட்ட உரிமை, இந்த தமிழ் நாடு என்ன பாவம் செய்தது இப்படி தமிழக மக்களையெல்லாம் எல்லாவற்றிற்கும் சென்னைக்கு வரவழைத்து மற்ற இடங்களில் வேலை வாய்ப்பினை உருவாக்காமல், இப்போ ஒரு பொங்கல், தீபாவளி என்றால் அவரவர் சொந்த ஊர்களுக்கு செல்வது என்றாலே சிம்ம சொப்பனமாக இருக்கிறது இவரும் இவருடைய குடும்பத்தாரும் மட்டும் அணைத்து வசதிகளுடனும் இருக்கும் இடத்திலேயே அணைத்து விழாக்களையும் கொண்டாடுவார்கள், 1972 வரை எந்தவிதமான பிரச்சினையும் இல்லாமல் இருந்த காவேரி பிரச்சினை (அதாவது கபினி ,ஹேமாவதி, ஹாரங்கியில் ) கர்நாடக அரசு அணை கட்ட அனுமதித்து தண்ணீர் நேரடி வரத்தினை தடை செய்தது யார். 1971 வரை குறைந்த பட்சம் 40 வயதுள்ளவர்கள் வரை குடி என்றால் என்னவென்று அறியாமல் இருந்த தமிழ் நாட்டினை குடிகார மாநிலமாகினது யார், தலையினை இருப்பவர்களும் நீங்கள், விதவைகளுக்கு உதவிப்பணம் என்று அறிவிக்கும் பன்முகமும் உங்களுக்கு உண்டு, மாநில உரிமைகளை மக்களின் அனுமதியில்லாமல் உங்கள் வீடு சொத்து போல் விட்டு கொடுத்தீர்களே அதுவும் பன்முகத்தன்மையின் விளைவுதான், ஏறத்தாழ 6 ஆண்டுகள் உங்களின் தவறான தொழிற்கொள்கையினால் பணம் சம்பாதிக்கும் ஆசையினால் தமிழ் நாட்டினை இருந்த மாநிலமாக்கினீர்களே அதுவும் பன்முக தன்மையினால்தான், மதுரையில் உங்கள் கட்சிக்காரர்கள் கொள்ளை அடிப்பதிப்பதற்காக ஏரிகளை மூடி கட்டிடங்கள் கட்டினீர்களே இன்று 600 அடி போர் போட்டால் கூட தண்ணீர் இல்லை என்ற நிலைமையினை மதுரைக்கு உருவாக்கியவர் பன்முகத்தன்மை கொண்டவர்தான், நான் 1967இல் இந்த சட்டமன்றத்தில் அண்ணாவின் நவரத்தினம் என்று அழைக்கப்பட்ட மந்திரிசபையில் பொதுப்பணித்துறை மந்திரியாக இந்த பன்முகம் கொண்டவர் பதவி ஏற்கும்போது நான் அவருடைய அறையில் அமர்ந்து பதவி ஏற்பு நிகழ்ச்சிகளை கண்டு களித்தவர்களில் ஒருவன் தான் இப்போது மனம் வெந்து இப்பேற்பட்டவர்களுக்கா நம்முடைய படிப்பினை விட்டு உழைத்தோம் இவர்கள் ஆட்சிக்குவர என்று இப்படி விமர்சிக்கிறேன் ஆனால் இந்த மண்ணில் நிறைய பேர் சாபத்தினை அவர் வாங்கியுள்ளார் அதையெல்லாம் அனுபவிக்கும் காலகட்டம் நெருங்குகிறது. ஆனால் ஒன்று மட்டும் எனக்கு புரியவேயில்லை தவறுகள் பல புரிந்து எதுவுமே செய்யாத மாதிரி பேசுகிறீர்களே நீங்கள் எல்லாம் நல்ல அறிவுள்ள, மானமுள்ள மனிதர்கள் தானா? என்று
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை