அழிவின் விளிம்பில், 'சிறுமலை வாழை'| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அழிவின் விளிம்பில், 'சிறுமலை வாழை'

Updated : ஜூன் 11, 2018 | Added : ஜூன் 11, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
அழிவின் விளிம்பில், 'சிறுமலை வாழை'

திண்டுக்கல்: அழிவின் விளிம்பில் இருக்கும், சிறுமலை வாழையை, கண்காணிப்பு வளையத்திற்குள் பாதுகாக்க, தோட்டக்கலைத்துறை முடிவு செய்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், சிறுமலையில், 10 ஆயிரம் ஏக்கரில், மலைவாழை சாகுபடியாகிறது. இதற்கு, 2008ல், புவிசார் குறியீடு கிடைத்தது. பூச்சிகளால், சிறுமலை வாழையில், முடிகொத்து நோய் தாக்குதல் ஏற்பட்டு, 25 ஆயிரம் ஏக்கரில் இருந்து, 10 ஆயிரம் ஏக்கராக, சாகுபடி பரப்பு குறைந்துள்ளது.

விவசாயிகளும் முடிகொத்து நோய்க்கு பயந்து, சவ்சவ், எலுமிச்சை போன்றவற்றை பயிரிடுகின்றனர். அதனால் வரத்து குறைந்து, ஒரு பழம், 12 ரூபாய் வரை விற்கப்படுகிறது. வாழை ஆராய்ச்சி நிலையம் சார்பில், பாரம்பரியமிக்க, சிறுமலை வாழையில், நோய் தாக்காமல் இருக்க, அதன் சாகுபடி பரப்பை அதிகரிக்க, ஆய்வு கள் நடந்து வருகிறது.

தோட்டக்கலை சார்பில், 24 மணி நேரமும் கண்காணிப்பு வளையத்திற்குள் வைத்து, சிறுமலை வாழையை பாதுகாக்க, ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நாஞ்சில் நாடோடி - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
11-ஜூன்-201811:03:12 IST Report Abuse
நாஞ்சில் நாடோடி தோட்டக்கலைத்துறையின் முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள். இதுபோல் பல பாரம்பரிய பயிர்களை காப்பாற்ற தோட்டக்கலைத்துறை ஆவன செய்தல் நன்று...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை