பா.ஜ., - ஆர்எஸ்எஸ் நாட்டை அடிமையாக்கி உள்ளன: ராகுல்| Dinamalar

பா.ஜ., - ஆர்எஸ்எஸ் நாட்டை அடிமையாக்கி உள்ளன: ராகுல்

Added : ஜூன் 11, 2018 | கருத்துகள் (111)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
ராகுல், பாஜக, ஆர்எஸ்எஸ், பிரதமர் மோடி, பாஜக எம்எல்ஏக்கள், ஓபிசி , விவசாயிகள் கடன், தொழிலதிபர்கள்,  பாஜக-ஆர்எஸ்எஸ், காங்கிரஸ் , 
Rahul, BJP, RSS, PM Modi, BJP MLAs, OBC, farmers loan, industrialists, BJP-RSS, Congress,

புதுடில்லி : டில்லியில் ஓபிசி பிரிவினரிடையே காங்., தலைவர் ராகுல் இன்று உரையாற்றினார். அப்போது பா.ஜ., மற்றும் ஆர்எஸ்எஸ் குறித்து கடுமையாக விமர்சித்து பேசினார்.
கூட்டத்தில் ராகுல் பேசியதாவது : மக்களை பிளவுபடுத்த ஆர்எஸ்எஸ் வற்புறுத்துகிறது. ஓபிசி பிரிவினரிடையே பிளவை ஏற்படுத்த ஆர்எஸ்எஸ் நினைக்கிறது. ஆர்எஸ்எஸ் அல்லது பிரதமர் மோடிக்கு எதிராக பேசுபவர்கள் பற்றி சில பா.ஜ., எம்எல்ஏ.,க்கள் பேசுவதை கேட்கவே பயமாக இருக்கிறது.
பா.ஜ., மற்றும் ஆர்எஸ்எஸ்.,-ல் இருக்கும் 2 - 3 தலைவர்கள் நாட்டை இன்று அடிமையாக்கி வைத்துள்ளனர். பெரும்பாலானவர்கள் பேசுவதற்கே அனுமதிக்கப்படுவதில்லை. அப்படியே பேசும் எங்களைப் போன்றவர்களின் பேச்சுக்களை பா.ஜ., காது கொடுத்து கேட்பதில்லை. ஆர்எஸ்எஸ் பேச்சை மட்டும் கேட்கிறது.
உண்மையாக, கடினமாக உழைப்பவர்கள், திறமையுடையவர்கள் இருட்டடிப்பு செய்யப்படுகிறார்கள். திறமை இல்லாதவர்கள் பரிசு கொடுத்து கவுரவிக்கப்படுகிறார்கள். தொழிலதிபர்களுக்கு மட்டுமே மோடி ஆதரவாக உள்ளார். விவசாயிகளின் துயர் துடைக்க எதுவும் செய்யவில்லை. விவசாயிகள் கடனை திருப்பிக்கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறார்கள். ஆனால் தொழில்துறை நிறுவனங்களின் கடன்பாக்கி ரூ.2.5 லட்சம் கோடியாக உள்ளது.
அமெரிக்காவில் சாதாரண மனிதர் கோக்கோகோலா நிறுவன அதிபராகவும், மெக்டெனால்ட் நிறுவன அதிபராகவும், மெக்கானிக், போர்டு மோட்டார் நிறுவனராகவும் முடியும். இந்தியாவில் அது முடியுமா? திறமையானவர்களுக்கு மதிப்பளிக்கப்படுவதாக பிரதமர் மோடி கூறுவது பொய் என்றார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (111)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
madhavan rajan - trichy,இந்தியா
12-ஜூன்-201801:58:26 IST Report Abuse
madhavan rajan இப்போ தெரியுதா குமாரசாமிக்கு ராகுலும் சோனியாவும் அடிமையானாங்கன்னு. மோடிக்கு பயந்து காங்கிரஸ் ஒரு சின்ன கட்சிக்கு அடிமையாயிடுத்துன்னா இந்திய நாட்டை பாஜக அடிமையாக்கிட்டதுன்னு சொல்றதுல என்ன தப்பு. என்ன பாஜகவோட ஆர் எஸ் எஸ்ஸை சேக்குறதினாலே காங்கிரசை எப்பவுமோ இத்தாலி கிருஸ்துவர்கள்தான் இயக்குகிறார்கள் என்பது ஏற்றுக்கொள்ளவேண்டியது தான்.
Rate this:
Share this comment
Cancel
11-ஜூன்-201822:48:58 IST Report Abuse
kulandhaiKannan அதுதானே! நாட்டு மக்களை அடிமைகளாக்குவது நேரு குடும்ப பிறப்புரிமையல்லவா!
Rate this:
Share this comment
Cancel
Krishna - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
11-ஜூன்-201822:31:45 IST Report Abuse
Krishna அறுவைத்தைந்து வருடம் காங்கிரஸின் அடிமையாக இந்தியாவை நடத்தினர் . காந்தி குடும்பத்தினரை விட்டு யாவரும் இந்தியாவை யாவரும் ஆளக்கூடாது . ஆண்டாள் இப்படித்தான் உளறுவார்கள்
Rate this:
Share this comment
Cancel
adalarasan - chennai,இந்தியா
11-ஜூன்-201822:04:38 IST Report Abuse
adalarasan இந்தியா இந்த அளவுக்கு மோசமான நிலைமைக்கு காரணமே 60 ஆண்டுகளுக்குமேல், காங்கிரஸ் ஆட்சிதான் அதில் முக்கிய பங்கு, உங்கள் முன்னோர்களுக்கு உண்டு?குடும்ப ஆட்சி எதனைநாளுக்குத்தான் ஓடும்?பெரோஸ் காந்தி,இந்திரஜி, குடம்பத்திற்குத்தான், காங்கிரஸ் உறுப்பினர்கள் அடிமையாக்கப்பட்டுள்ளனர் உங்கள் கட்சி,ராவ், அவர்கள், ஆட்சியில்தான், பல, முன்னேற்றா நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன? ஆனால், அவரை பற்றி யாருமே பேசுவதே இல்லை? அது இருக்கட்டயம், உங்களுக்கு என்ன தகுதியின், பேரில், தலைமை, பதவி, பிறகு, பிரதமர் பதவி எல்லாம், உங்கள் கட்சியினர் தர தயாராக உள்ளனர்? மக்களுக்கு புரியவில்லை?ஒரு பொறுப்பிலும், உறுப்படையாயாக, செயல் படாமல், மன்மோகன் சிங், எடுத்தவுடன் கேபினட் பதவி கொடுக்க தயார் என்று கூறியபின்னும், எடுத்துக்கொள்ளவில்லை? இப்பொழுது, பிரதமர் ஆவதற்கு தயார் என்று நீங்களே கூறுவது கொஞ்சம் வோவரா , உங்களுக்கே தோன்றவில்லையா?
Rate this:
Share this comment
Cancel
Viswanathan Meenakshisundaram - karaikudi,இந்தியா
11-ஜூன்-201822:02:33 IST Report Abuse
Viswanathan Meenakshisundaram "அமெரிக்காவில் சாதாரண மனிதர் கோக்கோகோலா நிறுவன அதிபராகவும், மெக்டெனால்ட் நிறுவன அதிபராகவும், மெக்கானிக், போர்டு மோட்டார் நிறுவனராகவும் முடியும். இந்தியாவில் அது முடியுமா? திறமையானவர்களுக்கு மதிப்பளிக்கப்படுவதாக பிரதமர் மோடி கூறுவது பொய் என்றார்" . முதலில் உங்கள் கட்சிக்கு உங்கள் குடும்பம் அல்லாத ஒருவர் தலைவர் ஆக முடியுமா
Rate this:
Share this comment
Cancel
Suman - Mayiladuthurai ,இந்தியா
11-ஜூன்-201821:46:31 IST Report Abuse
Suman இளவரசர் சொன்னால் அவ்ளோதான்
Rate this:
Share this comment
Cancel
Sriman - Chennai,இந்தியா
11-ஜூன்-201821:15:09 IST Report Abuse
Sriman ராகுலு வாயை கொடுத்து அதை புண்ணாக்கி கொள்ளாதீர்கள். 2014ல் ஆப்படிக்காமல் விட்டிருந்தால் கான்கிராஸ், ஐ.எஸ்.எஸ் நாட்டை அடிமையாக்கி இருப்பார்கள்.என்று அமித்ஷா சொல்லப்போறாரு.
Rate this:
Share this comment
Cancel
GMM - KA,இந்தியா
11-ஜூன்-201821:06:57 IST Report Abuse
GMM திருமண உறவு கட்டுப்பாடு, கலாச்சாரம் சார்ந்த ஒற்றுமை, வர்த்தக ஒழுக்கம் ஆகியவற்றிற்கு சாதி வடிவம் இருக்கலாம். சாதி மக்களால் உருவானது, ஆனால் அரசியல் நோக்கங்களுக்காக அரசாங்கத்தில் பட்டியலிடப்பட்டது. மத்திய பட்டியல் மொத்தம் 181 OBC(TN). ஒரு சில சாதிகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பம் காங்கிரஸ் கட்சி போன்ற நன்மைகளை அனுபவிக்கும். பலவீனமான சமூகங்களுக்கான தேர்வு வயது மற்றும் மதிப்பெண்கள் தளர்வுடன் இருக்க வேண்டும். கடின உழைப்பு செயல்திறன் அரசியல் கொள்கையால் மறைக்கப்பட்டுள்ளது.காங்கிரஸ் தலைவர் பல சமநிலையற்ற கருத்துக்களில் ஆர்எஸ்எஸ் இணைக்கிறார்..
Rate this:
Share this comment
Cancel
elakkumanan - Naifaru,மாலத்தீவு
11-ஜூன்-201820:36:05 IST Report Abuse
elakkumanan சட்டம் ஒழுங்கை பற்றி காவல் துறைதான் பேசணும். திருட்டு தொழில் பற்றிய நுணுக்கங்களை திருடன்தான் நல்லா பேசமுடியும்,.
Rate this:
Share this comment
Cancel
Narayan - Zurich,சுவிட்சர்லாந்து
11-ஜூன்-201820:32:43 IST Report Abuse
Narayan சிரிப்பு போலீஸ் பாத்து இருப்பீங்க, அது மாதிரி இவரு சிரிப்பு அரசியல்வாதி...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை