சர்வதேச யோகா தினம்; நியூயார்க் செல்லும், 'டி -ஷர்ட்'| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சர்வதேச யோகா தினம்; நியூயார்க் செல்லும், 'டி -ஷர்ட்'

Added : ஜூன் 12, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
சர்வதேச யோகா தினம்; நியூயார்க் செல்லும், 'டி -ஷர்ட்'

திருப்பூர் : அமெரிக்கா, நியூயார்க்கில் நடக்கவுள்ள, உலக யோகா தினத்திற்காக, திருப்பூரிலிருந்து, 'டி- ஷர்ட்'கள் அனுப்பப்பட்டுள்ளன.

யோகாசனத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும், ஜூன், 21ல், சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டு, ஐக்கிய நாடுகள் சபை சார்பில், அமெரிக்கா, நியூயார்க் நகரில், சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது.

இந்திய துாதரகம் மற்றும் அனைத்து நாட்டு துாதரக அதிகாரிகளுக்கும், அந்நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் அணிவதற்காக, எஸ்.பி.ஐ., வங்கி மூலம், 'டி--ஷர்ட்'கள் வழங்கப்படுகின்றன. இந்த, டி - ஷர்ட்கள் திருப்பூரிலுள்ள ஒரு பனியன் ஏற்றுமதி நிறுவனத்தில், தயாரிக்கப்பட்டு, அனுப்பப்பட்டுள்ளது.

டி- - ஷர்ட் தயாரித்த, தாய் எக்ஸ்போர்ட்ஸ் உரிமையாளர், நல்லசிவம் கூறியதாவது: சர்வதேச யோகா தினத்திற்காக, யோகா 'லோகோ'வுடன், டி -ஷர்ட் டிசைன் செய்யப்பட்டுள்ளது. நியூயார்க் நகரிலுள்ள, பாரத ஸ்டேட் வங்கி மூலம், யோகா நிகழ்வில், பங்கேற்கும் அனைவருக்கும், டி- - ஷர்ட் வழங்கப்படுகிறது. இதற்காக, ஆண்களுக்கு, 1,000 பெண்களுக்கு, 700 என, டி - ஷர்ட் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Siddarth -  ( Posted via: Dinamalar Android App )
12-ஜூன்-201809:43:58 IST Report Abuse
Siddarth உடையோடு உள்ளத்தூய்மையும்! Good Idea. great.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை