ராகுலுக்கு எதிராக கோர்ட்டில் குற்றச்சாட்டு பதிவு| Dinamalar

ராகுலுக்கு எதிராக கோர்ட்டில் குற்றச்சாட்டு பதிவு

Added : ஜூன் 12, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

தானே: ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் தொடர்ந்த அவதுாறு வழக்கில், காங்., தலைவர் ராகுல் மீது, பிவண்டி கோர்ட்டில், நேற்று குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.மஹாராஷ்டிராவில், பா.ஜ.,வைச் சேர்ந்த, தேவேந்திர பட்னவிஸ் முதல்வராக உள்ளார். கடந்த, 2014ல் நடந்த, மாநில சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் காங்., வேட்பாளரை ஆதரித்து பேசிய அதன் தலைவர் ராகுல், 'மஹாத்மா காந்தியின் கொலைக்கு, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பே காரணம்' என்றார்.
கடும் கண்டனம் : ராகுலின் இந்த பேச்சுக்கு, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் சார்பில், கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ராகுலுக்கு எதிராக, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பைச் சேர்ந்த ராஜேஷ் குன்டே, நீதிமன்றத்தில் அவதுாறு வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு விசாரணை, பிவண்டி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ஏற்கனவே, இரு முறை விசாரணைக்கு ஆஜராகாத ராகுல், நேற்றைய விசாரணைக்கு ஆஜரானார். அப்போது, கோர்ட் வாசலிலும், அதை சுற்றிஉள்ள பகுதிகளிலும், ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.வழக்கை விசாரித்த நீதிபதி, 'இந்திய தண்டனை சட்ட பிரிவு, 499 மற்றும் 500ன் படி, தங்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுஉள்ளது. இதை நீங்கள் ஏற்கிறீர்களா...' என்றார். 'தான் எந்த குற்றமும் செய்யவில்லை' என, ராகுல் கூறினார். இதைஅடுத்து, இந்த வழக்கின் அடுத்த விசாரணை, ஆக.,10க்கு ஒத்தி வைக்கப்பட்டது. அதன் பின், ராகுல் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
தேவையற்றவை : கோர்ட் வளாகத்திற்கு வெளியே, காங்., தலைவர் ராகுல் பேசியதாவது:மத்தியில் ஆளும், பா.ஜ., அரசு, மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. விவசாயிகள் நலன், இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு பற்றி பொருட்படுத்துவது இல்லை. பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., இணைந்து, என் மீது தேவையற்ற குற்றச்சாட்டுகளை முன் வைக்கின்றன. எனக்கு எதிராக வேண்டுமென்றே வழக்கு தொடரப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X