கவர்னர் அலுவலகத்தில், 'தர்ணா' : அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி| Dinamalar

கவர்னர் அலுவலகத்தில், 'தர்ணா' : அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி

Added : ஜூன் 12, 2018
Advertisement
கவர்னர் அலுவலகத்தில், 'தர்ணா' : அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி

புதுடில்லி: டில்லி துணை நிலை கவர்னர் அலுவலகத்தில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மூத்த அமைச்சர்கள், தர்ணா போராட்டம் நடத்தியதால், பரபரப்பு ஏற்பட்டது.டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. ஆம் ஆத்மி அரசுக்கு மத்திய, பா.ஜ., அரசு, கவர்னர் வாயிலாக நெருக்கடி கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.'டில்லி யூனியன் பிரதேசம் என்பதால், துணைநிலை கவர்னருக்கு அதிக அதிகாரம் உள்ளது; இதை பயன்படுத்தி, ஆம் ஆத்மி அரசு செயல்படுத்தும் திட்டங்களை, மத்திய அரசு முடக்கி வருகிறது' என, அரவிந்த் கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டி வருகிறார்.சமீபத்தில், முதல்வர் கெஜ்ரிவால், ரேஷன் பொருட்களை வீடு தேடிச் சென்று வழங்குதல் உள்ளிட்ட திட்டங்களை துவங்கி வைத்தார். ஆனால், முதல்வரின் உத்தரவை செயல்படுத்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மறுத்து வருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம், முதல்வருக்கு இல்லை.
வலியுறுத்தல் : இதையடுத்து, 'மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த ஒத்துழைப்பு வழங்கவும், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், துணை நிலை கவர்னர் உத்தரவிட வேண்டும்' என, கெஜ்ரிவால் வலியுறுத்தி வருகிறார்.இதற்காக, துணைநிலை கவர்னர், அனில் பைஜாலை சந்திப்பதற்காக, முதல்வர் கெஜ்ரிவால், அமைச்சர்களுடன், நேற்று முன்தினம் மாலை, கவர்னர் மாளிகை சென்றார். ஆனால், கவர்னர் அனுமதி தரவில்லை. அதனால், கவர்னர் மாளிகையின் வரவேற்பாளர் அறையில், பல மணி நேரம் காத்திருந்தார்.அவருடன், மாநில அமைச்சர்களும் வந்தனர். எனினும், கவர்னரை சந்திக்க வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதையடுத்து, 'கவர்னரை சந்திக்கும் வரை வெளியே செல்ல மாட்டேன்' எனக் கூறி, கெஜ்ரிவால், வரவேற்பு அறையிலேயே அமர்ந்து, தர்ணா போராட்டம் நடத்தினார்.
குவிந்தனர் : சர்க்கரை நோயாளியான கெஜ்ரிவால், அங்கேயே இன்சூலின் மருந்து எடுத்துக் கொண்டார். மேலும், வீட்டில் இருந்து எடுத்து வந்திருந்த உணவையும் சாப்பிட்டதாகத் தெரிகிறது.முதல்வர் கெஜ்ரிவால் தர்ணா போராட்டத்தால், கவர்னர் மாளிகையைச் சுற்றி, ஏராளமான ஆம் ஆத்மி தொண்டர்கள் குவிந்தனர்; நள்ளிரவு முழுவதும் பரபரப்பு நிலவியது. எனினும், அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டு, கவர்னர் மாளிகைக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது.இதையடுத்து, முதல்வர் கெஜ்ரிவாலும், அமைச்சர்களும், வரவேற்பு அறையிலேயே படுத்து உறங்கினர்.நேற்று காலை, முதல்வர் கெஜ்ரிவால், தன், 'டுவிட்டர்' பக்கத்தில், 'டில்லி மக்களே, என் கோரிக்கை இன்னமும் நிறைவேறவில்லை; காத்திருக்கிறேன்' என, பதிவிட்டார்.இதற்கிடையே, கவர்னர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில், 'கவர்னர் மாளிகையில் தங்கி, முதல்வர் கெஜ்ரிவாலும், அவரது சக அமைச்சர்களும், கவர்னரை மிரட்ட முயற்சிக்கின்றனர்; மேலும், இது தேவையற்ற போராட்டம்' என, தெரிவிக்கப்பட்டது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை