49 நகரங்களில் கசடுக்கழிவு நிலையங்கள்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

49 நகரங்களில் கசடுக்கழிவு நிலையங்கள்

Added : ஜூன் 12, 2018 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: ''தமிழகத்தில், 49 நகரங்களில், 217 கோடி ரூபாய் செலவில், கசடுக்கழிவு சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும்,'' என, முதல்வர், பழனிசாமி அறிவித்தார்.
சட்டசபையில், 110 விதியின் கீழ், முதல்வர் வெளியிட்ட அறிவிப்புகள்:
தமிழகத்தில், 35 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், பாதாள சாக்கடை திட்டம் முடிக்கப்பட்டு, பயன்பாட்டில் உள்ளது. மூன்று மாநகராட்சிகள் மற்றும், 25 நகராட்சிகளில், பாதாள சாக்கடை பணிகள் நடந்து வருகின்றன.  பாதாள சாக்கடை திட்டத்தில், சிரமம் ஏற்படுவதால், மாற்று ஏற்பாடாக, கசடுக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த, அரசு முடிவு செய்துள்ளது. நடப்பாண்டு, 51 நகராட்சிகள், 59 பேரூராட்சிகள் பயன்பெறும் வகையில், 49 நகரங்களில், 217 கோடி ரூபாய் செலவில், கசடுக்கழிவு சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் பாதாள சாக்கடை திட்டம், குடிநீர் திட்டம் ஆகியவற்றில், குழாய்கள் பதித்தல் மற்றும் மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க, நடப்பாண்டு, 1,000 கோடி ரூபாயில், 1,350 கி.மீ., நீளத்திற்கு, சாலை பணிகள் மேற்கொள்ளப்படும் பேரூராட்சி பகுதிகளில், 200 கோடி ரூபாய் செலவில், சாலை மேம்பாட்டுப் பணிகள், 'நபார்டு' வங்கி நிதி உதவியுடன் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு முதல்வர் அறிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
13-ஜூன்-201809:05:59 IST Report Abuse
Srinivasan Kannaiya மற்றுமொரு அத்திப்பட்டு தடுப்பு அணை விவகாரம்தான்...
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
13-ஜூன்-201809:05:04 IST Report Abuse
Srinivasan Kannaiya தமிழகத்தில், 49 நகரங்களில், 217 கோடி ரூபாய் செலவில், கசடுக்கழிவு சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும்..இந்த ஆட்சி முடிந்த பிறகு பாருங்கள்... இந்த ஒதுக்கீடு மட்டும் காணாமல் போய் இருக்கும் கூடவே இந்த கசடுக்கழிவு சுத்திகரிப்பு நிலையம் இருக்காது... தோல் இருக்க சுளை மட்டும் அரசியல்வாதிகளால் விழுங்க பட்டு இருக்கும்...
Rate this:
Share this comment
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
13-ஜூன்-201803:37:27 IST Report Abuse
Mani . V 200 கோடி சுவாகா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X