சென்னை- - சேலம் பசுமை சாலைத்திட்டம் : மத்திய அமைச்சர் மகிழ்ச்சி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

சென்னை- - சேலம் பசுமை சாலைத்திட்டம் : மத்திய அமைச்சர் மகிழ்ச்சி

Added : ஜூன் 12, 2018 | கருத்துகள் (30)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
சென்னை- - சேலம்  பசுமை சாலைத்திட்டம்  : மத்திய அமைச்சர் மகிழ்ச்சி

திருவாரூர்: ''சென்னை- - சேலம் பசுமை சாலைத்திட்டம், தமிழகத்துக்கு கிடைத்த வரப்பிரசாதம்,'' என, மத்திய இணை அமைச்சர், பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.
திருவாரூரில், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: சென்னை- - சேலம் பசுமை சாலைத்திட்டத்தை வேண்டும் என்றே, பல இயக்கங்கள் எதிர்க்கின்றன. தமிழக வளர்ச்சிக்கு தடையாக உள்ள இவர்களை, மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். சென்னை- - சேலம் பசுமை சாலைத்திட்டம், தமிழகத்திக்கு கிடைத்த வரப்பிரசாதம். தி.மு..க., ஆட்சியில், இதுபோன்ற புதிய திட்டங்கள் எதும் கொண்டு வர முயற்சிக்கவில்லை. எனவே, இந்த திட்டத்தை தி.மு.க.,வினர் எதிர்க்கின்றனர். காவிரி பிரச்னைக்கு நிரந்தர தீர்வாக, ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காவிரி ஆணையம் செயல்பட, கர்நாடக அரசு, தன் பிரதிநிதிகளை அனுப்பாமல் உள்ளது. இதனால், ஆணையம் செயல்பாடு முழுமை பெறாமல் உள்ளது.தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின், தங்களது கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியுடன் பேசி, கர்நாடகாவில் இருந்து பிரதிநிதியை அனுப்பச்சொல்ல வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r.sundaram - tirunelveli,இந்தியா
19-ஜூன்-201817:03:11 IST Report Abuse
r.sundaram அடுத்து குமாரி மாவட்டத்தில் துறைமுக திட்டம் ஆரம்பம் எப்போது?
Rate this:
Share this comment
Cancel
Ramanathan V - chennai,இந்தியா
14-ஜூன்-201815:08:54 IST Report Abuse
Ramanathan V காவேரி ஆணையம் அமைக்க DMK ஆதரவு தேவை என்றால் மந்திரி நீர் எதற்கு ஐயா இருக்கிறீர்கள். DMK ஆட்சியில் இருந்தால் அவர்கள் கர்நாடகாவில் கேட்பார்கள். தமிழ் நாட்டில் தண்ணீருக்கு அலைவதை பார்த்து மந்திரி நீர் கிண்டல் பண்ணாதீர்கள் ஐயா மந்திரி. நீர் மந்திரியாக இருந்துக்கொண்டு தமிழ் மக்களுக்கு தண்ணீர் கிடைப்பதற்கு வழி செய்யவும். கிண்டல் வேண்டாம். எல்லா எதிர் கட்சிகளும் போராடி தான் சுப்ரீம் கோர்ட்டை பணிய வைத்துள்ளார்கள். இல்லை என்றால் தீபக் மிஸ்ரா மடிவரா. மந்திரி அவர்களே தமிழ் மக்களுக்கு தண்ணீர் கிடைப்பதற்கு வழி செய்யவும்.
Rate this:
Share this comment
Cancel
ravisankar K - chennai,இந்தியா
14-ஜூன்-201806:27:41 IST Report Abuse
ravisankar K ஒரு காலத்தில் 200 km பயணம் செய்ய 7 மணி நேரம் ஆகும் . இப்போது குறைந்துள்ளது . ஒரு மணி நேரம் குறைந்தாலும் அது எல்லோருக்கும் பயன்தான் . நேரம் என்பது ஏழை , பணக்காரன் எல்லோருக்கும் பொதுவானதே . இருக்கும் சாலையை அகலப்படுத்தினால் அதனால் இழப்பு புதிய சாலையை விட மேலும் அதிகம்தான் ஆகும் . சென்னை- திருச்சி சாலையை விட இதற்கு ஏன் முக்கியத்துவம் என்றால் , இது முதல்வர் சொந்த ஊர் என்பது ஒரு காரணமாக இருக்கலாம் . இதனால் காடுகள் அழிப்பு , விவசாயம் பாதிப்பு , புவி வெப்பமயமாதல் என்கிறார்கள் . பாதிப்பு உண்டுதான். ஆனால் பருவ நிலை மாறுபாடிற்கு இந்தியா காரணம் அல்ல . 100 ஆண்டுகளாக வளர்ந்த நாடுகள் உருவாக்கிய மாசுதான் காரணம் . அமெரிக்காவில் நியூ யார்க் நகரில் மட்டும் மின்சாரம் உபயோகம் ஏறக்குறைய நம் மொத்த தமிழ் நாட்டிக்கு சமம். அந்த நகரின் மக்கள் தொகை 85 லட்சம் மட்டுமே . ஆனால் வளர்ந்த நாடுகள் புவி வெப்பமாவதை காரணம் காட்டி நம் வளர்ச்சியை நிறுத்த சொல்கின்றன . ஆனால் அவர்கள் அந்த நாட்டு வளர்ச்சியை மட்டும் நிறுத்த மாட்டார்கள் . அவர்களுக்கு சொகுசு வாழ்க்கை. ஆனால் நமக்கு அத்தியாவசிய தேவை . இதைத்தான் இந்தியா இதுவரை வளர்ந்த நாடுகளிடம் சொல்லி வருகிறது . இந்த திட்டத்தை எதிர்த்தால் இது இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு சென்று விடும் . அங்கும் இதே பாதிப்புதான் . பாதிப்பை குறைக்க மரம் நடலாம் , காடுகளை பாதுகாத்து உருவாக்கலாம் , மாசு கட்டுப்படுத்தலாம் . இதை செய்யாமல் வெறும் வளர்ச்சியை மட்டும் தடுப்பதால் ஒரு பயனும் இல்லை .
Rate this:
Share this comment
Cancel
Anandan - chennai,இந்தியா
14-ஜூன்-201805:59:47 IST Report Abuse
Anandan இவங்க மகிழ்ச்சி அடைந்தாள் அது தமிழ்நாட்டிற்கு கேடாயிற்றே.
Rate this:
Share this comment
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
14-ஜூன்-201804:08:06 IST Report Abuse
Kasimani Baskaran ஜியோ சிம் வேண்டும் ஆனால் அம்பானி மட்டும் வேண்டாம்... பலரது லாஜிக் புல்லரிக்க வைக்கிறது...
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
13-ஜூன்-201814:37:26 IST Report Abuse
Pugazh V ஏன் இந்த ஆள் எதுக்கெடுத்தாலும் திமுக வை சாடுகிறார்? கடந்த ஒன்பது ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத திமுகவை குறை சொல்லி எத்தனை நாள் பட்டப் போகிறார்கள்? மத்திய பிஜேபி காங்கிரசை குறை சொல்லும், ivar திமுக வை குறை சொல்கிறார்? கடந்த 9 ஆண்டுகளாக jeyalalithaa endha nala thittamum seyyavillai enru solla payam, நன்றி unarchchi தடுக்கிறது. ஒரு டம்மி வேட்பாளரைப் போட்டு ivarai ஜெயிக்க வைத்த ஜெயலலிதாவுக்கு நன்றி காட்ட vendaamaa?
Rate this:
Share this comment
Darmavan - Chennai,இந்தியா
14-ஜூன்-201807:14:45 IST Report Abuse
Darmavanஅஸ்திவாரம் போடும்போது கெடுத்துவிட்டால் கட்டிடம் எப்படி காட்டினாலும் ஒழுங்காக இருக்காது.அஸ்திவாரத்தை தன சுய நலத்தால் திருட்டு முட்டாள் கட்சி கெடுத்துவிட்டது.அதைத்தான் சொல்கிறார்.சரி செய்ய பல காலம் பிடிக்கும்....
Rate this:
Share this comment
Cancel
Appavi Tamilan - Chennai,இந்தியா
13-ஜூன்-201814:13:22 IST Report Abuse
Appavi Tamilan மகிழ்ச்சி அல்ல மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தார் என்று சொல்லலாம். ஏனென்றால் இந்த சாலை அமைவதை பயன்படுத்தி ஏழை விவசாயிகளின் வளமான விலை நிலங்களையும், நடுவே உள்ள கனிம வளங்களை கொண்ட ஏழு மலைகளையும் வெட்டி அளித்து அவற்றை கொள்ளை அடிக்க வெறியோடு காத்திருக்கும் கார்ப்பரேட் பெருமுதலாளிகள் அள்ளித்தரும் கமிஷன் நிறைய கிடைக்குமே. அதனால் மகிழ்ச்சி. ஏற்கனவே உள்ள நெடுஞ்சாலைகளில் அதிகம் போக்குவரத்து இல்லாத நேரத்தில், வெறும் 60 கிமீ தூரத்தை குறைக்க பத்தாயிரம் கோடி மக்கள் வரிப்பணத்தை செலவளிக்கும்போது கிடைக்கும் சில கோடிகள் கமிஷன் பிசிறும் கிடைக்குமே. அதனால் மகிழ்ச்சி. தவிர தமிழகத்தில் செயல்படுத்தப்போகும் பிற பேரழிவு திட்டங்கள் மூலம் கிடைக்கும் வளங்களை சுரண்டி வடநாட்டிற்கும், வெளிநாட்டிற்கு கொண்டு செல்ல இந்த தேவையற்ற சாலையை பயன்படுத்தலாம் மற்றும் அதன்மூலமும் கிடைக்கப்போகும் கமிஷனால் மகிழ்ச்சி. இப்படி தமிழகத்தை பாலைவனமாக்கி திணிக்கப்படும் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மகிழ்ச்சி அடைகிறார் பிறப்பால் தமிழரான இந்த மந்திரி...
Rate this:
Share this comment
Cancel
Selva Kumar - Chennai,இந்தியா
13-ஜூன்-201813:03:44 IST Report Abuse
Selva Kumar உண்மையில் மக்களுக்கு பயன் தரும் திட்டம் என்றால் இதை ரயில்வே பாதையாக போடலாமே சாலையை விட கூடுதல் விரைவாக பயணிக்கலாம். மாசுவும் ஏற்படாது. மக்களுக்கு சுங்க வரி சுமையும் இருக்காது. உண்மையில் இது யாருக்கான திட்டம் என்று புரியவே இல்லை
Rate this:
Share this comment
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
14-ஜூன்-201804:05:14 IST Report Abuse
Kasimani Baskaranவிமானம் கூட விடலாம்......
Rate this:
Share this comment
Cancel
Sathish - Coimbatore ,இந்தியா
13-ஜூன்-201812:47:15 IST Report Abuse
Sathish ஐயா மங்குனி அமைச்சர்களே. சேலம் மக்கள் அனைவரின் கேள்விகளையும் பியூஸ் மனுஷ் தொகுத்து உங்கள் முன்வைக்கிறார். அவருக்கு விளக்கம் சொல்லுங்கள் முதலில். வரப்பிரசாதம் ஈரவெங்காயமெல்லா அப்புறம் பேசலாம்.
Rate this:
Share this comment
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
13-ஜூன்-201812:38:28 IST Report Abuse
Visu Iyer தி.மு..க., ஆட்சியில், இதுபோன்ற புதிய திட்டங்கள் எதும் கொண்டு வர முயற்சிக்கவில்லை. /// இதற்கு முன் அம்மா ஆட்சியில் இருந்த போதும் இப்படி முயற்சிக்க வில்லை என்று சொல்ல தயங்குவது ஏன் என்று மக்கள் கேட்கிறார்கள் என்ன பதில் சொல்ல.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை