பிரபல சாமியார் பையு மஹாராஜ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை| Dinamalar

பிரபல சாமியார் பையு மஹாராஜ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

Added : ஜூன் 12, 2018 | கருத்துகள் (3)
Advertisement
பிரபல சாமியார் பையு மஹாராஜ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

இந்துார்: ம.பி.,யில், பிரபல சாமியார், பையு மஹாராஜ், நேற்று, தன்னை தானே, துப்பாக்கியால் சுட்டுதற்கொலை செய்தார்.
மத்திய பிரதேசத்தில், பா.ஜ.,வை சேர்ந்த, சிவ்ராஜ் சிங் சவுகான் முதல்வராக உள்ளார்.இந்துாரில் வசித்து வந்த, பிரபல சாமியார், பையு மஹாராஜ், 50, நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்று, ஆன்மிக சொற்பொழிவு ஆற்றி வந்தார். பையு மஹாராஜின் ஆன்மிக, சமூக சேவையை பாராட்டி, கேபினட் அமைச்சர் அந்தஸ்த்துக்கு நிகரான பதவி வழங்கி, ம.பி., மாநில அரசு, அவரை கவுரவிக்க முன் வந்தது. எனினும், ஆன்மிகவாதிக்கு, எந்த பதவியும் தேவையில்லை எனக் கூறி, பையு மஹாராஜ், அதை ஏற்க மறுத்துவிட்டார். இந்நிலையில், இந்துாரில் உள்ள அவரது வீட்டின் அறையில் நேற்று, ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதையடுத்து, அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், பையு மஹாராஜ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.அவரது, உடலில் இருந்த துப்பாக்கி குண்டுகள், அறையில் கிடைத்த கடிதம் உள்ளிட்டவற்றின் அடிப்படையில், அவர் தற்கொலை செய்திருக்கலாம் என, போலீசார் தெரிவித்துள்ளனர்.அவரது அறையில் கண்டெடுக்கப்பட்ட கடிதத்தில், 'மன அழுத்தம் அதிகரித்துவிட்டது. என் குடும்பத்தை யாரேனும் பார்த்துக்கொள்வர்; நான் விடை பெறுகிறேன்' என எழுதப்பட்டிருந்தது.அதில் இருந்த எழுத்துக்கள், பையு மஹாராஜின் கையெழுத்தே என, அவரது குடும்பத்தார் உறுதி செய்துள்ளனர்.அவரது முதல் மனைவி, 2015ல் மறைந்தார். அதன் பின், பையு மஹாராஜ் இரண்டாவது திருமணம் செய்தார். அவருக்கும், முதல் மனைவிக்கும் பிறந்த பெண் குழந்தை ஒன்று உள்ளது.பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் முதல்வராக இருந்த போது, 2011ல்ஆமதாபாதில், மக்கள் பிரச்னைக்காக உண்ணாவிரதம் இருந்தார்.அப்போது, உண்ணாவிரதத்தின் மூன்றாம் நாளில், பையு மஹாராஜ் நேரில் சென்று, மோடியை சந்தித்து, அவருக்கு பழ ரசம் வழங்கி,உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.சமூக ஆர்வலர், அன்னா ஹசாரேவின், ஊழலுக்கு எதிரான போராட்டத்தின் போது, அரசுடன் பேச்சு நடத்தி, நல்ல முடிவுக்கு வரும்படி, அவர்களுக்கு, பையு மஹாராஜ் ஆலோசனை வழங்கினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
13-ஜூன்-201809:13:46 IST Report Abuse
Srinivasan Kannaiya மனதை கட்டுப்படுத்த முடியாத பையு மஹாராஜ் எப்பிடி சாமியாராக இருக்க முடியும்...
Rate this:
Share this comment
Cancel
sudharshana - chennai,இந்தியா
13-ஜூன்-201806:47:28 IST Report Abuse
sudharshana சாமியார்களுக்கு அவர்கள் ஆற்றும் சொற்பொழிவுகளில் அவர்களுக்கே நம்பிக்கை இல்லை
Rate this:
Share this comment
Cancel
kundalakesi - VANCOUVER,கனடா
13-ஜூன்-201806:41:12 IST Report Abuse
kundalakesi மனதை கட்டுப்பாட்டில் வைப்பதே துறவின் லட்சியம். மனமது செம்மையானால் மந்திரங்கள் தேவையில்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை