பயங்கரவாதிகள் தாக்குதல் : இரண்டு போலீசார் பலி| Dinamalar

பயங்கரவாதிகள் தாக்குதல் : இரண்டு போலீசார் பலி

Added : ஜூன் 12, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரை குறிவைத்து, பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், இரண்டு போலீசார் உயிரிழந்தனர்.ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், முதல்வர், மெஹபூபா முப்தி தலைமையிலான, மக்கள் ஜனநாயகக் கட்சி - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தில், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவதும், அதற்கு, நம் ராணுவத்தினர் பதிலடி கொடுப்பதும் தொடர்கதையாகி உள்ளது.ஜம்மு - காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் செயல்பட்டு வரும் நீதிமன்றத்தில், இரவில், நீதிமன்ற வளாகத்தில், பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.நேற்று காலை, அந்த பகுதியில் நுழைந்த பயங்கரவாதிகள், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரை குறிவைத்து, துப்பாக்கியால் சுடத் துவங்கினர். இதற்கு, போலீசாரும் பதிலடி கொடுத்தனர். இரு தரப்புக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில், இரண்டு போலீசார் உயிரிழந்தனர்.இதையடுத்து, சம்பவம் நடந்த பகுதியில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. பயங்கரவாதிகளை தேடும் பணியில், போலீசார் ஈடுபட்டுள்ளனர்.இதே போல, சதர் பகுதியில், பாதுகாப்பு பணியில் இருந்த, சி.ஆர்.பி.எப்., எனப்படும், மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் மீது, பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதில், 10 வீரர்கள் காயம் அடைந்தனர்.

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், ரம்ஜான் மாதம் துவங்கியதில் இருந்து, 44 முறை, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை