தலைநகர் டில்லியில் இன்று இப்தார் விருந்து; ஓரணியில் திரளும் எதிர்க்கட்சி தலைவர்கள் Dinamalar
பதிவு செய்த நாள் :
தலைநகர் டில்லியில் இன்று இப்தார் விருந்து
ஓரணியில் திரளும் எதிர்க்கட்சி தலைவர்கள்

கர்நாடக முதல்வர் குமாரசாமி பதவியேற்பு விழாவுக்கு பின், எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும், காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ள, 'இப்தார்' நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்காக, மீண்டும் இன்று டில்லியில் கூடவுள்ளது, எதிர்பார்ப்பை ஏற்படுத்திஉள்ளது.

இப்தார் விருந்து, எதிர்க்கட்சி தலைவர்கள், கர்நாடக முதல்வர் குமாரசாமி, இப்தார் நோன்பு விருந்து , காங்கிரஸ், ராகுல் , லோக்சபா தேர்தல் 2019, டில்லி தாஜ் பேலஸ் ஓட்டல் இப்தார் விருந்து, சோனியா, 
Iftar party, opposition leaders, Karnataka chief minister kumarasamy,
 Congress, Rahul, Lok Sabha election 2019, Delhi Taj Palace hotel Iftar party, Sonia,


கடந்த, 2015ல், டில்லியில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா, இப்தார் நோன்பு விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். அதன்பின், இரண்டு ஆண்டுகளாக, டில்லியில் தேசிய அளவில், காங்கிரஸ் சார்பில், இப்தார் நோன்பு விருந்து நிகழ்ச்சி நடத்தப்படவில்லை.

இந்நிலையில், காங்கிரஸ் சார்பில் மீண்டும், இப்தார் நோன்பு விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவராக, ராகுல் பொறுப்பேற்ற பின் நடக்கும் முதல் விருந்து என்பதால், இது கூடுதல் முக்கியத்துவம், பெற்றுள்ளது.

ஆலோசனை:


'ஜனாதிபதி மாளிகையில் இந்த ஆண்டு இப்தார் நோன்பு இல்லை' என்ற தகவல் உறுதியானதும்,

தேசிய அளவில் எதிர்க்கட்சித் தலைவர்களை ஒரே இடத்தில் திரட்ட, தங்களுக்கு கிடைத்த மற்றொரு வாய்ப்பு என கருதி, காங்கிரஸ் இந்த ஏற்பாட்டை செய்துள்ளது.

அடுத்தாண்டு நடக்க உள்ள லோக்சபா தேர்தலை கருத்தில் வைத்து, பா.ஜ.,வுக்கு எதிராக, ஓரணியாக திரள்வதை காட்ட, தங்களுக்கு கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் தவறவிடக் கூடாது என்பதில், எதிர்க்கட்சிகள் குறியாக உள்ளன.

ராகுலின் இப்தார் நோன்பு விருந்தில் பங்கேற்க, முக்கிய பிரமுகர்கள் உட்பட, பா.ஜ.,வை எதிர்க்கும், அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலானோர், இதில் பங்கேற்க சம்மதம் தெரிவித்துள்ளனர்.

ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்றதற்காக, கடும் விமர்சனங்களுக்கு உள்ளான முன்னாள் ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜிக்கு, அழைப்பு விடுப்பதில் குழப்பம் நிலவியது. ஆனாலும், சோனியாவின் ஆலோசனைப்படி, அவருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

நம்பிக்கை:


ஆந்திராவில் மட்டுமல்லாது தேசிய அளவிலும், பல ஆண்டுகளாக காங்கிரசுடன், எதிரும் புதிருமாக இருந்துவரும், தெலுங்கு தேசம் தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடுவுக்கும், அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

டில்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான, அரவிந்த் கெஜ்ரிவால், தெலுங்கானா முதல்வரும், டி.ஆர்.எஸ்., தலைவருமான, சந்திரசேகர ராவ் ஆகியோருக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்படவில்லை.

டில்லி தாஜ் பேலஸ் ஓட்டலில், இன்று மாலை நடக்கும் இந்த விருந்துக்கு, தலைவர்களிடம் நேரடியாக பேசி, வருகையை உறுதி செய்த பின்பே, பட்டியல் இறுதியாகிஉள்ளது. இதனால், முக்கிய தலைவர்கள் அனைவரும் வருவர் என்ற பெரும் நம்பிக்கையில், காங்கிரஸ் உள்ளது.

'இப்தார் நோன்பு திறப்பு என்ற காரணமாக இருந்தாலும், பெங்களூரில் நடந்த, குமாரசாமி பதவியேற்பு விழாவுக்கு பின், மீண்டும், எதிர்க்கட்சிகள், தங்கள் பலத்தை காட்டும் நிகழ்ச்சியாகவே இது பார்க்கப்படும்' என, தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

- நமது டில்லி நிருபர் -


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rafi - Riyadh,சவுதி அரேபியா
14-ஜூன்-201802:39:10 IST Report Abuse

Rafi ஏழையின் பசியை அனைவரும் உணரவேண்டும் என்பதற்காக நோன்பு நோற்க வேண்டும் என்று அல்லாஹ்வே இந்த மாதத்தை புனிதப்படுத்தியுள்ளான். இம்மாதத்தில் ஏழைகளுக்கு தானம் செய்வது மற்றும் இறைவனை போற்றி துதி செய்தால் பத்து மடங்கு நன்மையை வழங்குகின்றான். இது அல்லாமல் நோன்பு நோற்பவர்களுக்கு நானே கூலி வழங்குவேன் என்றும் ஊக்கப்படுத்தியுள்ளான். ஆகவேதான் இஸ்லாமியர்கள் அனைவரும் நோன்பு நோற்பது கடமை ஆக்கப்பட்டுள்ளது. இதுவரை உள்ள அரசுகளும் நாங்களும் ஏழைகளின் பசி போக்கவே உழைத்துவருகின்றோம் என்ற அடிப்படையில் நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்ச்சியை நடத்தி கொண்டிருந்தார்கள். இதனால் இஸ்லாமியர்களுக்கு அரசியல் கட்சிகளோ, அரசோ நடத்துவதால் பயன் அடைகின்றார்கள் என்ற அர்த்தமில்லை, நாங்களும் உங்களைப்போல் (ஏழைகளின்) பசியை உணர முன்வருகின்றோம் என்ற நல்லசிந்தனையுடன் இந்த இப்தார் நிகழ்ச்சியை நடத்தி கொண்டிருந்தார்கள். இந்த அரசு புறக்கணித்ததால் எதிர்க்கட்சிகள் நாங்கள் ஏழைகளோடு இருக்கின்றோம் என்று நடத்த முன்வருகின்றார்கள். அரசோ, கட்சிகளோ நடத்தினாலோ, அல்லது நடத்தாவிட்டாலோ இஸ்லாமியர்கள் கவலை படப்போவதில்லை. அவர்கள் சிந்தனை எல்லாம் மறுமை வாழ்க்கைக்காக நன்மையை எப்படி சேமிக்கலாம் என்பதே.

Rate this:
skv - Bangalore,இந்தியா
14-ஜூன்-201802:11:46 IST Report Abuse

skv<srinivasankrishnaveni>கர்நாடகாலே ஆட்ச்சி அமைய செய்தது சோனியா என்ற அதிமேதாவி

Rate this:
vbs manian - hyderabad,இந்தியா
13-ஜூன்-201816:12:50 IST Report Abuse

vbs manianமுஸ்லீம் பண்டிகைக்கு அரசியல் கட்சிகள் எதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். பண்டிகையின் மஹத்வம் மறைந்து அரசியல் அக்கப்போர் மேலோங்கி நிற்கிறது. இந்த விருந்தில் ஏழை முஸ்லிம்களுக்கு இடம் கிடையாது. முஸ்லீம் சமுதாய செல்வந்தர்கள் அரசியல் வாதிகள் முஸ்லீம் அல்லாத செல்வந்தர்கள் பங்கு. இந்த பண்டிகையின் புனிதமே கெட்டு போகிறது.முஸ்லீம் சமுதாயம் யோசிக்க வேண்டும்.

Rate this:
Prakash Elumalai - Edison, NJ,யூ.எஸ்.ஏ
13-ஜூன்-201812:29:50 IST Report Abuse

Prakash Elumalaiபுனித ரமலான் அன்று வேண்டாம் தயவுசெய்து வேறு ஓருநாள்ல உங்கள் கொள்ளை கூட்டத்தை கூட்டுங்கள்

Rate this:
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
13-ஜூன்-201816:06:23 IST Report Abuse

Nallavan Nallavanநீங்கள் சொல்வது போல ஏதாவது இஸ்லாமிய அன்பர் கூறுவார் என்று நம்பி ஏமாந்தேன் .......

Rate this:
சிற்பி - Ahmadabad,இந்தியா
13-ஜூன்-201810:30:44 IST Report Abuse

சிற்பி இதுவே தான் உங்களுக்குள் பானிபட் களம். அடித்துக் கொள்ளுங்கள்.

Rate this:
balakrishnan - coimbatore,இந்தியா
13-ஜூன்-201809:48:47 IST Report Abuse

balakrishnanஎதிர்க்கட்சிகள் ஒன்றிணைவது ஒரு அரசியல் நிகழ்ச்சி, எல்லா கட்சிகளும் ஏதோ ஒரு அடிப்படையில் தேர்தலில் ஒன்றிணைந்து போட்டி இடுகின்றன, கூட்டணி அமைக்கின்றன, ஆனால் புனித ரமலான் நோன்பு நிகழ்ச்சியை இதுபோன்ற அரசியல் நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்த கூடாது,

Rate this:
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
13-ஜூன்-201811:31:58 IST Report Abuse

Nallavan Nallavan\\\\ ஆனால் புனித ரமலான் நோன்பு நிகழ்ச்சியை இதுபோன்ற அரசியல் நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்த கூடாது, //// பயன்படுத்த ஏன் இடம் கொடுக்கிறீர்கள் ??...

Rate this:
sankar - trichy,இந்தியா
13-ஜூன்-201814:55:27 IST Report Abuse

sankarரமலான் அன்னிக்குனு எல்லா முக்கியஸ்தரையும் கூப்பிட்டு அதை வைத்து நாலு அல்லக்கைகள் விளம்பரம் மற்றும் முக்கியத்துவம் பெற நினைக்கும்போது பதிலுக்கு அரசியல் வாதியும் அதைத்தான் செய்வான் . அவ்வளவு மத பற்று இருந்தால் ரமலான் நோன்புக்கு போகாதீங்க . சொன்னா எவன் கேட்க போறான்...

Rate this:
samkey - tanjore,இந்தியா
13-ஜூன்-201809:47:59 IST Report Abuse

samkeyஏன்டா ஊழல் பெருச்சாளிகளா? நீங்கள் ஒன்றுகூடி சதித்திட்டம் போடுவதற்கு இப்தார் நிகழ்ச்சி தான கிடைத்தது? இதனை ஏண்டா அரசியல் ஆக்குகிறீர்கள்? மோடியை அரசியல் ரீதியாக எதிர் கொள்ளுங்க இப்படி உங்கள் கீழ்த்தரமான சதிக்கு இஸ்லாமியர்களை இழுக்காதீர்கள் குல்லா போட்டுக்கொண்டு மக்களை ஏமாற்றலாம் என நினைக்காதீர்கள் அந்த அல்லாஹ் உங்களை மன்னிக்க மாட்டார்.

Rate this:
sankar - Nellai,இந்தியா
13-ஜூன்-201809:30:10 IST Report Abuse

sankarகுப்பைகள் ஒன்று சேர்வதில் பலன் இல்லை - பிஜேபி என்கிற புயல் அவற்றை ஊதி தள்ளிவிடும்

Rate this:
balakrishnan - coimbatore,இந்தியா
13-ஜூன்-201809:49:51 IST Report Abuse

balakrishnanஅந்த புயலே, எதிரில் வரும் சுனாமியை கண்டு அஞ்சி நடுங்கி, தரைமட்டத்துக்கு இறங்கி வேலைகளை செய்ய ஆரம்பித்துள்ளது, முதல் தோல்வி பயம்...

Rate this:
Arasu - Ballary,இந்தியா
13-ஜூன்-201820:54:08 IST Report Abuse

Arasuஒரு பிஜேபி யை எதிர்த்து இவ்வளவு பேர் கூடினா அதுவே பிஜேபி க்கு வெற்றி தான். ஒன்று மட்டும் நிச்சயமாக தெரிகிறது, கான் கிராஸ் இனி பிஜேபி க்கு சரிசமம் இல்லை....

Rate this:
Arasu - Ballary,இந்தியா
13-ஜூன்-201809:19:31 IST Report Abuse

Arasuஇன்னொரு கர்நாடகாவைத் தவிர இவர்களால் ஒன்றுசேரமுடியாது. அடித்துக் கொண்டு போய்விடுவார்கள். ஒற்றுமையாக இருந்தால் கான் கிராஸ் க்கு அதிகபட்சம் 125 சீட்கள் கொடுப்பார்கள் (2019 ல் போட்டியிட)

Rate this:
கருப்பட்டி சுப்பையா - தூத்துக்குடி ,இந்தியா
13-ஜூன்-201809:13:42 IST Report Abuse

கருப்பட்டி சுப்பையாஇதில் பாஜகவை எதிர்க்கும் அனைத்து எதிர்கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.... ஒரு மதத்தின் புனித நிகழ்ச்சியை அரசியல் கூட்டமாக நடத்துறாங்க. இத அந்த மதத்தை சேர்ந்தவங்க கூட எதிர்க்கலை. உண்மையாக தனது கடவுளையும் மதத்தையும் நேசிப்பவன் எவனும் இது போல் தனது மத சடங்கு அரசியலாக்கப்படுவதை விரும்பமாட்டான். சிறுபான்மையினர் வழிபாட்டை கட்சிகள் மதிப்பதாக இருந்தால் ஏழை இஸ்லாமியர்களுக்கோ அல்லது மசூதியிலோ இப்தார் விருந்து நடத்தியிருந்தால் அது உண்மையான மத நல்லிணக்கம். இதெல்லாம் வெறும் தாஜாவுக்காக போடப்படும் வேடம். இதையும் பெருமையாக இந்த மதத்தை சார்ந்தவர்கள் ஆதரிப்பதுதான் கொடுமை. நம்ம மதத்தை மட்டும் விமர்சிக்குறானுங்க வழிபாடுகளை மதிக்கலையே அரசியல்வாதிகள் என்றெல்லாம் வருந்தியதுண்டு. ஆனால் இப்படி போலியாக வழிபடுவதற்கு பதிலாக இவனுங்க இப்படி விமர்சிப்பதே நல்லதுனு தோணுது. இந்த விஷயத்தில் மோடி எவ்வளவோ பெட்டர். நல்லிணக்கத்தை கடைபிடிக்கிறேனு மற்ற மதத்தை போலியாக வழிபடவில்லை. எப்படியோ வாக்கு வங்கிக்காக மட்டும் சிறுபான்மையினர் பயன்படுத்தப்படுகிறார்கள் என்பதை இந்த கட்சிகள் மீண்டும் மீண்டும் நிருபிக்கிறார்கள்.

Rate this:
balakrishnan - coimbatore,இந்தியா
13-ஜூன்-201810:00:07 IST Report Abuse

balakrishnanஇந்தியாவில் ஆயிரக்கணக்கான விழாக்கள், ஆண்டு தோறும் நடைபெறுகின்றன, சில ஜாதிகள் தங்களுக்கென்ற சில விழாக்களை நடத்துகின்றன, அவர்களுக்குள் பல பிரிவுகள் குலதெய்வ வழிபாடுகளை தங்களுக்குள் நடத்துகின்றன, இதை தவிர பாரம்பரியமாக நடக்கும் பல்வேறு விழாக்கள் அழகர் ஆற்றில் இறங்குவது, திருச்செந்தூர் சூரசம்ஹாரம், பழனியில் நடக்கும் பூசம், இவைகள் எல்லாம் பிராந்திய விழாக்கள், இதை தவிர தேசிய விழாக்கள் என்று பெரும்பாலான மாநிலங்கள் கொண்டாடும் விழாக்கள், ஆனால் இந்த விழாக்களை ஒரு போதும் மதரீதியாக, ஜாதி ரீதியாக பிரித்து பார்க்க கூடாது, இந்தியாவிற்கு அப்படி ஒரு, ஒருதலை பட்சமாக நடந்துகொள்ளும் போக்கு இருக்கவே கூடாது, இங்கே அனைவரும் சமம் அந்த உணர்வை வளர்க்க யாரும் தயாராக இல்லை, பாரதி சொன்னது போல எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஓரினம், எல்லோரும் இந்திய மக்கள், எங்கே இருக்கிறது இங்கே...

Rate this:
sankar - trichy,இந்தியா
13-ஜூன்-201814:57:41 IST Report Abuse

sankarஅரசியல் வாதிங்க என்றாலே திருடங்க தான் . திருடர்கள் அனைவரும் ரமலான் அன்று ஒன்று கூடுகிறார்கள் . அடுத்த கொள்ளைக்கு திட்டம் போடுகிறார்கள் இதுல பாலா கிசுன்னு பாயிக்கு பெருமை வேற...

Rate this:
dandy - vienna,ஆஸ்திரியா
13-ஜூன்-201819:12:52 IST Report Abuse

dandyமஞ்சள் துண்டு ரமலான் கஞ்சி குடிப்பார் ..அனால் இந்து மதத்தை கேவலமாக் பேசுவார் ..யார் அறிவார் இந்த பந்தியில் தொப்பி அணிந்து முதல் வரிசையில் கட்டு மரம் இருப்பார்...

Rate this:
மேலும் 21 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement