வாஜ்பாய் உடல் நலம் சீராக உள்ளது; 'எய்ம்ஸ்' டாக்டர்கள் அறிவிப்பு Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
வாஜ்பாய் உடல் நலம் சீராக உள்ளது
'எய்ம்ஸ்' டாக்டர்கள் அறிவிப்பு

புதுடில்லி : டில்லி, எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள, முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல்நிலை நன்றாக இருப்பதாக, டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

வாஜ்பாய்,உடல் நலம்,சீராக உள்ளது,AIIMS,எய்ம்ஸ்,எய்ம்ஸ் மருத்துவமனை,டாக்டர்கள்,அறிவிப்பு


பா.ஜ., மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான, வாஜ்பாய், 93, உடல் நலக்குறைவால், டில்லியில் உள்ள அவரது வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். அவ்வப்போது, மருத்துவ பரிசோதனைக்காக, டில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்று வருவது வழக்கம். இந்நிலையில், நேற்று முன்தினம், வாஜ்பாய், எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


பரிசோதனை :


எனினும், அவர், வழக்கமான மருத்துவ பரிசோதனைகளுக்காகவே அனுமதிக்கப்பட்டு உள்ளதாக, டாக்டர்கள் தெரிவித்தனர். பிரதமர் நரேந்திர மோடி, காங்., தலைவர் ராகுல் ஆகியோர், மருத்துவமனைக்கு சென்று, வாஜ்பாயின் உடல் நலம் குறித்து விசாரித்தனர்.

இந்நிலையில் வாஜ்பாய் உடல் நலம் குறித்து, எய்ம்ஸ் டாக்டர்கள் குழுவினர் கூறியதாவது: வாஜ்பாய்க்கு, சிறுநீர் பாதையில் தொற்று ஏற்பட்டுள்ளது; அதை சரி செய்வதற்காக, மருந்து கொடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு சிறுநீரக கோளாறும் உள்ளது. நேற்று, ஒரு முறை, 'டயாலிசிஸ்' சிகிச்சை அளிக்கப்பட்டது.

தற்போது அவரது உடல் நிலை நன்றாக உள்ளது. சிகிச்சைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கிறார். நோய் தொற்று முழுவதும் குணமடைந்ததும், அவர்,

Advertisement

'டிஸ்சார்ஜ்' செய்யப்படுவார். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நலம் விசாரிப்பு :


இதற்கிடையே, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள், ஜே.பி., நட்டா, ஹர்ஷவர்தன் உள்ளிட்டோர், மருத்துவமனைக்குச் சென்று, வாஜ்பாயின் உடல்நலம் குறித்து விசாரித்தனர்.


Advertisement

வாசகர் கருத்து (2+ 1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ganthi - chennai,இந்தியா
13-ஜூன்-201816:21:14 IST Report Abuse

Ganthiஇவர் அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒரு எளிய மனிதர் ஆடம்பர இல்லாத சாதாரண அரசியல் வாதி , ஒரே ஒரு அணு ஆயுத பரிசோதனையின் மூலம் உலகையே இந்தியா வை திரும்பி பார்க்க வைத்த ஒரு மாமனிதர். ஒரு மிக சிறந்த அரசியல் நாகரிகம் மிக்க பண்பாளர். இவரின் அரசியல் ஓயுவு இந்தியா அரசியலுக்கு மிக பெரிய பேரிழப்பு.

Rate this:
skv - Bangalore,இந்தியா
13-ஜூன்-201807:18:59 IST Report Abuse

skv<srinivasankrishnaveni>இவ்ளோ முதுமைலேயும் அவர் பூரணகுணம் அடைய இறைவனை வேண்டுவோம் , மனத்தூய்மையும் பொதுவாழ்க்கையே துயமையும் உள்ளவர் இந்த பெரியவர் மிகவும் நல்லவர் அதனாலே ஏ காங்கிரேகாரனுக்கு திமுகவுக்கு எல்லாம் இவரை பிடிக்காது ஆனால் மக்கள் விரும்பும் நல்ல தலைவர்/நான் என்றும் இவரின் ரசிகை இவரின் கவிதைகளுக்கு பேச்சுக்களையும் ரசிப்பவல் நல்லதே செய்தவர் நல்லதே எண்ணுபவர் , இவருடைய வாக்குகளில் நான் இன்றும் நெனெச்சு ரசிப்பது காங்கிரஸ் கரீபீ ஹாடாவ் என்று சொல்லி க்ரீபோங்கோ ஊருக்கு வெளியே துரத்தியது தான் என்று சொல்லிண்டே இருப்பார் பொருள் (ஏழ்மையை விரட்டுவோம் என்று சொல்லிட்டு ஏழைகளை ஊருக்கு வெளியே துரத்தியது )

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X