70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி!| Dinamalar

பொது செய்தி

இந்தியா

70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி!

Updated : ஜூன் 13, 2018 | Added : ஜூன் 12, 2018 | கருத்துகள் (7)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
prahlad jani,பிரஹலாத் ஜனி

மெஹ்சானா : குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த, ஒரு துறவி, 70 ஆண்டுகளாக, உணவு, தண்ணீர் இன்றி, காற்றை மட்டும் சுவாசித்து வாழும் தகவல் வெளியாகியுள்ளது.
குஜராத்தில், முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, மெஹ்சானா மாவட்டம், சரோட் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரஹலாத் ஜனி, 88. சிவப்பு நிற உடையணியும் இவர், 'மாதாஜி' என, அழைக்கப்படுகிறார். கடந்த, 70 ஆண்டுகளாக, உணவு, தண்ணீர் இன்றி, காற்றை மட்டும் சுவாசித்து உயிர் வாழும் இவரைப் பார்த்து, உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் அதிசயிக்கின்றனர்.
கடந்த, 2010ல், நம் நாட்டின், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான, டி.ஆர்.டி.ஓ., மற்றும் ராணுவ உடற்கூறியல் அமைப்பு இணைந்து, பிரஹலாத் ஜனியை கண்காணிக்க முடிவு செய்தது. அதன்படி, ஒரு தனி அறையில், பிரஹலாத்தை, 15 நாட்கள் தங்க வைத்து, தீவிரமாக கண்காணிக்கப்பட்டார்.
இதன்பின், அவருக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. அதில், பட்டினியாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆனால், தான் வணக்கும் கடவுளின் அருளால், தியானத்தின் வாயிலாக, தனக்கு சக்தி கிடைப்பதாக, பிரஹலாத் கூறினர்.
பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பிரபல அரசியல் தலைவர்கள், பிரஹலாத்தின் ஆசிரமத்துக்கு வந்து, ஆசி பெற்றுள்ளனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohammed Abdul Kadar - dammam,சவுதி அரேபியா
13-ஜூன்-201814:17:56 IST Report Abuse
Mohammed Abdul Kadar அமெரிக்க விஞ்சானிகள் செக் பண்ணினார்களா
Rate this:
Share this comment
Cancel
Jaya Ram - madurai,இந்தியா
13-ஜூன்-201813:15:31 IST Report Abuse
Jaya Ram முடியும், காற்றினில் இருந்து அவர்களுக்கு தேவையான சக்தியினை உறிஞ்சும் சக்தி உண்டாக்கிக் கொள்ளமுடியும்
Rate this:
Share this comment
Cancel
கோமாளி - erode,இந்தியா
13-ஜூன்-201806:30:50 IST Report Abuse
கோமாளி தமிழக வரலாறு தெரியாதவர்கள் தான் இதெல்லாம் பார்த்து வியப்படைவார்கள்..
Rate this:
Share this comment
senthil - chennai,இந்தியா
13-ஜூன்-201812:56:40 IST Report Abuse
senthilஅய்யா உடலில் பஞ்சபூதத்தை அடக்கி ஆளும் வல்லமை கொண்டவர்களால் இப்படி வாழ்வது சர்வ சாதாரணம் ... இவர் வெளி உலகுக்கு தெரிந்த நபர் .... வெளி உலகிற்கு தெரியாமல் இவரை போல பலர் இருக்கின்றனர் ... இந்த வாழ்வியல் முறை பற்றிய நெறிமுறை இங்கிருக்கும் கலாச்சாரத்தை ( இந்து மதம் என்று கூறிக்கொள்ளலாம் ) தொடர்ந்துவந்த ஞானிகளால் அவரவர் ( இந்திய பண்டைய ) மொழிகளில் எழுதப்பட்டுள்ளது .... தமிழில் மிக அதிகமாக எழுதப்பட்டுள்ளது ...குறிப்பாக வள்ளலார் அவர்களின் நூல்களில் எளிமையாக எழுதப்பட்டுள்ளது ....இதைத்தான் ஆன்மீகம் சம்பந்தப்பட்டது என்று கூறலாம் .....இவை அணைத்து இறைவன் கிருபை இருந்தால் கிட்டும் ...கிட்டியும் நடைமுறை படுத்துவதென்பது நமக்கு விதி இருந்தால் நடக்க வாய்ப்புள்ளது ....ஆகையால் இந்த ஜென்மத்தில் நல்லது செய்தால் அடுத்த ஜென்மத்தில் இறைவனடி சேர வாய்ப்புள்ளது ........
Rate this:
Share this comment
Cancel
13-ஜூன்-201805:28:47 IST Report Abuse
ருத்ரா ஓரு வேளை உணவு தாமதமானால் கூட தவித்து கோபம் அடைகிறோம் .தாங்கள், OH god. உண்மையிலேயே அதிசயம் காற்றே உணவாக.மரியாதைக்கும் வணக்கத்திற்கும் உரியவர். GREAT.
Rate this:
Share this comment
Cancel
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
13-ஜூன்-201804:08:28 IST Report Abuse
Kuppuswamykesavan பொதுவாக, மனிதனே, இயற்கையில், ஒரு அங்கம்தான் எனலாம். இயற்கையின் பேரறிவையும், பேராற்றலையும், அதன் நிகழ்கால, எதிர்கால செயல்களையும், எவராலும் அறுதியிட்டு, நூறு சதவீதம் கணித்து கூற முடியாது எனலாம். இவரை பொருத்தவரை, இயற்க்கையின் ஆச்சரிய அதிசய படைப்புக்களில் ஒன்று, இவர் எனலாம்.
Rate this:
Share this comment
Idithangi - SIngapore,சிங்கப்பூர்
13-ஜூன்-201810:29:35 IST Report Abuse
Idithangi கடவுள் அருள்ன்னு அவரே சொல்லறார். நீங்க வந்து இயற்கை அது இதுன்னு கதை விடுறீங்க. இவர் இவ்வாறு இருப்பது கடவுளின் கருணையே.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை