கவர்னர் அலுவலகத்தில், 'தர்ணா'; அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி Dinamalar
பதிவு செய்த நாள் :
கவர்னர் அலுவலகத்தில், 'தர்ணா'
அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி

புதுடில்லி : டில்லி துணை நிலை கவர்னர் அலுவலகத்தில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மூத்த அமைச்சர்கள், தர்ணா போராட்டம் நடத்தியதால், பரபரப்பு ஏற்பட்டது.

Arvind Kejriwal,Aam Aadmi Party,Governor,Kejriwal,ஆம் ஆத்மி,ஆளுநர்,கவர்னர்,கெஜ்ரிவால்,தர்ணா


டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. ஆம் ஆத்மி அரசுக்கு, மத்திய, பா.ஜ., அரசு, கவர்னர் வாயிலாக நெருக்கடி கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.

'டில்லி யூனியன் பிரதேசம் என்பதால், துணைநிலை கவர்னருக்கு அதிக அதிகாரம் உள்ளது; இதை பயன்படுத்தி, ஆம் ஆத்மி அரசு செயல்படுத்தும் திட்டங்களை, மத்திய அரசு முடக்கி வருகிறது' என, அரவிந்த் கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டி வருகிறார்.

சமீபத்தில், முதல்வர் கெஜ்ரிவால், ரேஷன் பொருட்களை வீடு தேடிச் சென்று வழங்குதல் உள்ளிட்ட திட்டங்களை துவங்கி வைத்தார். ஆனால், முதல்வரின் உத்தரவை செயல்படுத்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மறுத்து வருகின்றனர்.

அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம், முதல்வருக்கு இல்லை.

வலியுறுத்தல்:


இதையடுத்து, 'மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த ஒத்துழைப்பு வழங்கவும், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், துணை நிலை கவர்னர் உத்தரவிட வேண்டும்' என, கெஜ்ரிவால் வலியுறுத்தி வருகிறார்.

இதற்காக, துணைநிலை கவர்னர், அனில் பைஜாலை சந்திப்பதற்காக, முதல்வர் கெஜ்ரிவால், அமைச்சர்களுடன், நேற்று முன்தினம் மாலை, கவர்னர் மாளிகை சென்றார். ஆனால், கவர்னர் அனுமதி தரவில்லை. அதனால், கவர்னர் மாளிகையின் வரவேற்பாளர் அறையில், பல மணி நேரம் காத்திருந்தார்.

அவருடன், மாநில அமைச்சர்களும் வந்தனர். எனினும், கவர்னரை சந்திக்க வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதையடுத்து, 'கவர்னரை சந்திக்கும் வரை வெளியே செல்ல மாட்டேன்' எனக் கூறி, கெஜ்ரிவால், வரவேற்பு அறையிலேயே அமர்ந்து, தர்ணா போராட்டம் நடத்தினார்.

குவிந்தனர் :


சர்க்கரை நோயாளியான கெஜ்ரிவால், அங்கேயே இன்சூலின் மருந்து எடுத்துக் கொண்டார். மேலும், வீட்டில் இருந்து எடுத்து

Advertisement

வந்திருந்த உணவையும் சாப்பிட்டதாகத் தெரிகிறது. முதல்வர் கெஜ்ரிவால் தர்ணா போராட்டத்தால், கவர்னர் மாளிகையைச் சுற்றி, ஏராளமான ஆம் ஆத்மி தொண்டர்கள் குவிந்தனர்; நள்ளிரவு முழுவதும் பரபரப்பு நிலவியது. எனினும், அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டு, கவர்னர் மாளிகைக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது.

இதையடுத்து, முதல்வர் கெஜ்ரிவாலும், அமைச்சர்களும், வரவேற்பு அறையிலேயே படுத்து உறங்கினர். நேற்று காலை, முதல்வர் கெஜ்ரிவால், தன், 'டுவிட்டர்' பக்கத்தில், 'டில்லி மக்களே, என் கோரிக்கை இன்னமும் நிறைவேறவில்லை; காத்திருக்கிறேன்' என, பதிவிட்டார்.

இதற்கிடையே, கவர்னர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில், 'கவர்னர் மாளிகையில் தங்கி, முதல்வர் கெஜ்ரிவாலும், அவரது சக அமைச்சர்களும், கவர்னரை மிரட்ட முயற்சிக்கின்றனர்; மேலும், இது தேவையற்ற போராட்டம்' என, தெரிவிக்கப்பட்டது.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sahayam - cHENNAI,இந்தியா
14-ஜூன்-201806:42:38 IST Report Abuse

Sahayamவிடாதீங்க சார்

Rate this:
Rafi - Riyadh,சவுதி அரேபியா
14-ஜூன்-201801:59:09 IST Report Abuse

Rafi மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை அவமானப்படுத்தி கொண்டிருக்கின்றார்கள். முதல்வரையே சந்திக்க முடியாதவர் எப்படி அந்த மாநில நிர்வாக தலைவராக இருக்க முடியும். ஜனநாயகம் நசுக்கப்பட்டு கொண்டிருக்கு, மீண்டும் ஜனநாயகம் தலைநிமிர மக்கள் விழிப்புடன் இணைந்து எச்சரிக்கையுடன் செயல் பட வேண்டும்.

Rate this:
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
15-ஜூன்-201810:23:22 IST Report Abuse

Agni Shivaஜனநாயகம் நசுக்கப்பட்டு இருக்கிறது என்றால் கதவு இடுக்கில் கையை விட யார் சொன்னது?...

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
13-ஜூன்-201819:52:23 IST Report Abuse

Pugazh Vபெரும்பான்மை மக்களின் தேர்வை ஏளனப்படுத்தி மக்களின் தீர்ப்பை ம. அரசு அவமானப்படுத்துகிறது.

Rate this:
Makkal Enn pakam - Riffa,பஹ்ரைன்
13-ஜூன்-201816:48:35 IST Report Abuse

Makkal Enn pakamவாய் வடை மன்னன் ஒரு கொடுங்கோலன், அவரும் எதுவும் செய்யமாட்டார் வேறு யாரையும் செய்யவிடமாட்டார்.

Rate this:
vbs manian - hyderabad,இந்தியா
13-ஜூன்-201816:14:49 IST Report Abuse

vbs manianஒரு அரசின் நிர்வாகத்தையே தெரு கூத்தாக்கி விட்டார்கள்

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
13-ஜூன்-201814:27:58 IST Report Abuse

Pugazh Vஜனநாயகக் கேலிக் கூத்து இது. பிஜேபி யினர் கெஜ்ரிவாலை திட்டி எழுதலாம். ஆளுநருக்கு பவர் அதிகம் என்றால் அப்புறம் அங்கே எதற்கு ஒரு அரசாங்கம்? IIT பேரைக் கெடுக்க ஒரு ஆசாமி என்றால் அது கெஜ்ரிவால் தான்.

Rate this:
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
15-ஜூன்-201810:30:49 IST Report Abuse

Agni Shiva..டெல்லியில் மத்திய அரசின் அனைத்து முக்கிய அலுவலகங்கள் மற்றும் ராணுவத்தின் அனைத்து தலைமையகமும் அமைந்திருக்கின்ற காரணத்தினால் அது ஏதோ இது போன்றவர் நிர்வாகத்தின் கீழ் வந்தால் எதிரி நாடு சொல்வது போல நடந்து அனைத்து மத்திய மந்திரிகளை, ஏன் பிரதம முந்திரியையும், ராணுவ அதிகாரிகளையும் தனது போலீசை விட்டு கைது செய்து அலுவலகங்களையும் பூட்டி வைப்பான். இந்த பயித்தியம் போல ஏதாவது ஓன்று நாளை ஆட்சிக்கு வந்துவிட்டால் அப்படி செய்து விடக்கூடாது என்று தான் டெல்லி முனிசிபாலிட்டி மேயருக்கு உள்ள அதிகாரத்தை மட்டுமே கொடுத்து இருக்கிறார்கள் அரசியலமைப்பை வடித்தவர்கள். பெயர் மட்டும் தான் தோரணையாக டெல்லி முதலமைச்சர் என்று. டெல்லியில் உள்ள சாக்கடைகளை அடைப்பு நீக்குவதும், கக்கூஸுகளை பராமரிப்பதும் தான் இந்த கூத்தனுக்கு உள்ள முக்கிய பணி. அதை செய்யவே முடியாமல் திணறுகிறான் இந்த கோமாளி,...

Rate this:
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
13-ஜூன்-201813:21:24 IST Report Abuse

Nallavan Nallavan\\\\ சர்க்கரை நோயாளியான கெஜ்ரிவால், அங்கேயே இன்சூலின் மருந்து எடுத்துக் கொண்டார். //// கொஞ்சம் டோஸ் கூடப் போனாலும் மயங்கிடப் போறான்யா .... வெளிய வெரட்டுங்க ....

Rate this:
San - Madurai ,இந்தியா
13-ஜூன்-201810:19:15 IST Report Abuse

SanPeople of Delhi knows gimmicks and dramas of forgerywal

Rate this:
Sahayam - cHENNAI,இந்தியா
13-ஜூன்-201810:04:50 IST Report Abuse

Sahayamஎல்லா கவர்னர்றும் மத்திய அரசின் கட்டு பாட்டுக்கு வந்தது நாட்டுக்கு நல்லது அல்ல

Rate this:
balakrishnan - coimbatore,இந்தியா
13-ஜூன்-201809:42:50 IST Report Abuse

balakrishnanஅந்த காலத்தில் காங்கிரஸ் ஆளுநர் மூலமாக ஒரு மறைமுக அழுத்தத்தை கொடுக்கும், ஆனால் எதிலும் வித்தியாச இயக்கமான பி.ஜெ.பி தங்களின் கட்சியினரை ஆளுநராக நியமனம் செய்து நேரடியாகவே யுத்தத்தை தொடுக்கிறது

Rate this:
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
13-ஜூன்-201820:25:24 IST Report Abuse

Nallavan Nallavanபாலு பாய் ...... அரசியலை கடந்த நான்கு வருடங்களாகத்தான் அதுவும் அரைகுறையாக கவனிக்கிறீர்கள் என்று தெரிகிறது ..... மற்றவர்களையும் அவ்வாறு எண்ணிவிடாதீர்கள் .... தமிழகத்தையே எடுத்துக் கொள்வோம் .... பர்னாலா உங்கள் கலைஞருக்குத் தம்பி போன்றவர் ..... தொந்தரவே செய்யமாட்டார் ..... அவரைத்தான் உங்கள் காங்கிரஸ் (நீங்கள் கூறியபடி அழுத்தம் கொடுக்க அல்ல, மாறாக கண்டு கொள்ளாமல் இருக்க) நியமித்தது ..... சென்னா ரெட்டி, ரோசய்யா இவர்கள் சமூக சேவகர்கள் இல்லை ..... உங்களுக்குத் பிரியமான காங்கிரசின் தொண்டர்களே ........

Rate this:
மேலும் 12 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement