ரயில் டிக்கெட் முன்பதிவு; திடீர் சலுகை அறிவிப்பு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ரயில் டிக்கெட் முன்பதிவு; திடீர் சலுகை அறிவிப்பு

Updated : ஜூன் 13, 2018 | Added : ஜூன் 12, 2018 | கருத்துகள் (15)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
ரயில் டிக்கெட்,முன்பதிவு,திடீர் சலுகை,அறிவிப்பு

லக்னோ : 'ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு, 'டெபிட்' அட்டை பயன்படுத்துவோரிடம், வங்கி பரிவர்த்தனைக் கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது' என, இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான, ஐ.ஆர்.சி.டி.சி., தெரிவித்துள்ளது.


ரயில்களில் தினமும் முன்பதிவு செய்யப்படும், 10 லட்சம் ரயில் டிக்கெட்டுகளில், ஏழு லட்சம் டிக்கெட்டுகள், ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்யப்படுகின்றன. இவ்வாறு ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வோர், 'கிரெடிட்' மற்றும் 'டெபிட்' அட்டைகளை பயன்படுத்துகின்றனர். இதற்கு, சம்பந்தப்பட்ட வங்கிகள், பரிவர்த்தனை கட்டணமாக, குறிப்பிட்ட தொகையை வசூலிக்கின்றன.
கிரெடிட் அட்டைக்கு, பரிவர்த்தனை கட்டணமாக, 1.8 சதவீத தொகை வசூலிக்கப்படுகிறது. டெபிட் அட்டைகளுக்கான பரிவர்த்தனை கட்டணம் வங்கிகளுக்கு ஏற்ப மாறுகிறது. சில வங்கிகள், ஒரு டிக்கெட்டுக்கு, 10 ரூபாய் வசூலிக்கின்றன. சில வங்கிகள், 5,000 ரூபாய் வரையிலான டிக்கெட் கட்டணத்திற்கு, ஐந்து ரூபாயும், அதற்கு மேலான தொகைக்கு, 10 ரூபாயும் வசூலிக்கின்றன.

இது குறித்து, பயணியர் அளித்த புகாரையடுத்து, டெபிட் அட்டை மற்றும் 'இ - வாலட்' என்னும் டிஜிட்டல் முறை மூலம் முன்பதிவு செய்வோரிடம், பரிவர்த்தனை கட்டணம் வசூலிக்கக்கூடாது என, அனைத்து வங்கிகளுக்கும், ஐ.ஆர்.சி.டி.சி., கடிதம் அனுப்பியது. இதையடுத்து, டெபிட் அட்டை மற்றும் இ - வாலட் வாயிலாக, டிக்கெட் முன்பதிவு செய்வோரிடம், பரிவர்த்தனை கட்டண வசூலிப்பதை, வங்கிகள் நிறுத்தியுள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raajan - Mumbai,இந்தியா
13-ஜூன்-201813:19:32 IST Report Abuse
Raajan சமீபத்தில் திருநெல்வேலியிலிருந்து மும்பை செல்ல (16339 ) 3AC 3 பயணச்சீட்டு (counter ticket) வாங்கியிருந்தேன். மூன்றும் காத்திருப்பு பட்டியல் எண் 33 , 34 , 35 . நடுஇரவில் இரயிலில் பயணம் செய்ய chart வெளியாகியது. எங்களது பயண சீட்டு அதே காத்திருப்பு பட்டியலில் இருந்து confirm ஆகவில்லை. விடிந்தவுடன் போய் கவுண்டர் ல் ரத்து செய்யபோனேன். அங்கே என்னுடைய முழு பணமும் பிடித்து கொள்ளப்பட்டது no refund என்று சொல்லிவிட்டார்கள். waitlist பயணச்சீட்டாக இருந்தாலும் வண்டி புறப்படுவதற்கு 30 நிமிடத்ததிற்கு முன்னாடியே ரத்து செய்ய வேண்டுமாம். இப்படி அநியாயமாக எங்களுடைய பணம் 5500 ரயில்வே நிர்வாகம் பிடுங்கி கொண்டது. இது என்ன நியாயம். காத்திருப்பு பட்டியலில் இருப்பவர்கள் வண்டியிலும் ஏறவிடமாட்டேங்குறாங்க, பணத்தையும் பிடுங்கி கொண்டார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Jaya Ram - madurai,இந்தியா
13-ஜூன்-201813:03:24 IST Report Abuse
Jaya Ram நல்ல செயல் பயணம் இடம் உறுதி செய்யப்படாமல் கடைசிவரை வெய்ட்டிங்கில் இருக்கும் ஆன் லைன் டிக்கெட் களுக்கும் முழு தொகை வாபஸ் செய்தால் மிக நன்றாக இருக்கும் அல்லது ஒரு 20 ரூபாய் சேவை சார்ஜ் எடுத்துக்கொள்ளலாம்
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
13-ஜூன்-201812:49:29 IST Report Abuse
Nallavan Nallavan \\\\ இது குறித்து, பயணியர் அளித்த புகாரையடுத்து, டெபிட் அட்டை மற்றும் 'இ - வாலட்' என்னும் டிஜிட்டல் முறை மூலம் முன்பதிவு செய்வோரிடம், பரிவர்த்தனை கட்டணம் வசூலிக்கக்கூடாது என, அனைத்து வங்கிகளுக்கும், ஐ.ஆர்.சி.டி.சி., கடிதம் அனுப்பியது. //// வங்கிகளை ரிசர்வ் வங்கித்தான் கட்டுப்படுத்துகிறது என்று எண்ணிக்கொண்டிருந்தேன் ..... இப்பொழுதுதான் தெரிகிறது ஐ.ஆர்.சி.டி.சி. கூட வங்கிகளுக்கு உத்தரவிட முடியும் என்று ..... பெரும் "புரட்சி" இது .... மோதி வாழ்க ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X