பாம்பன் ரயில் பாலத்தில் இரும்பு கர்டர் பொருத்தும் பணி | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பாம்பன் ரயில் பாலத்தில் இரும்பு கர்டர் பொருத்தும் பணி

Added : ஜூன் 12, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
பாம்பன் ரயில் பாலத்தில் இரும்பு கர்டர் பொருத்தும் பணி

ராமேஸ்வரம்: பாம்பன் ரயில் பாலத்தில் ரூபாய் 8 கோடி செலவில் புதிய இரும்பு கர்டர் பொருத்தும் பணி துவங்கியது. பாம்பன் ரயில் பாலத்தில் தண்டவாளம் மற்றும் அதனை தாங்கி நிற்கும் 144 இரும்பு கர்டரில் 40 சதவீதம் சேதமடைந்து பாலம் பலவீனமானது. கடந்தாண்டு பழைய தண்டவாளத்தை அகற்றி புதியது பொருத்தினர். கடந்த இரு ஆண்டுகளில் சேதமடைந்த 44 இரும்பு கர்டரை அகற்றி புதிய கர்டர்கள் பொருத்தப்பட்டது. தற்போது ரூபாய் 8 கோடி செலவில் 27 புதிய கர்டர்கள் பொருத்தப்பட உள்ளது. நேற்று மதியம் 12:30 மணிக்கு பாலத்தில் சேதமடைந்த ஒரு கர்டரை அகற்றி, புதிய கர்டர் மாற்றப்பட்டது. ஜூன் 30 தேதிக்குள் 10 கர்டர்கள் பொருத்தப்பட உள்ளது. கர்டர் பொருத்துதல், பரமக்குடி அருகே தண்டவாளம் பராமரிப்பு பணியால், திருச்சியில் இருந்து ராமேஸ்வரம் வரும் பயணிகள் ரயில் சேவை, ஜூன் 30 தேதி வரை பரமக்குடியில் நிறுத்தப்பட்டு, மீண்டும் அங்கிருந்து திருச்சி செல்லும்(நேரம் மாற்றமில்லை) என ரயில்வே ஊழியர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X