'நீட்' தற்கொலையில் அரசியல்: நீதிபதி வேதனை Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
'நீட்' தற்கொலையில் அரசியல்
நீதிபதி வேதனை

சென்னை : 'மாணவர்கள் தற்கொலை சம்பவங்களில், கட்சிகள் அரசியல் செய்வது, துரதிருஷ்டவசமானது' என, சென்னை உயர் நீதிமன்றம், வேதனை தெரிவித்துள்ளது.

NEET exam,medical entrance test,நீட்,தற்கொலை,அரசியல்,நீதிபதி,வேதனை,உயர் நீதிமன்றம்,ஐகோர்ட்



மருத்துவ படிப்பில், மாணவர்கள் சேர வேண்டும் எனில், 'நீட்' நுழைவுத் தேர்வு எழுதி, தேர்ச்சி பெற வேண்டும். நீட் தேர்வால், மனம் உடைந்த மாணவி அனிதா, கடந்த ஆண்டு தற்கொலை செய்து கொண்டார்.அப்போது, மருத்துவ படிப்பில் மாணவர்கள் சேர்க்கை தொடர்பான வழக்கை விசாரித்த, நீதிபதி கிருபாகரன், நீட் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் விரக்தி அடைவதையும், அதனால், ஏற்படும் உயிர் இழப்புகளை தடுக்கவும், அரசுக்கு உத்தரவிட்டார்.


அமல்படுத்தப்படவில்லை :



மாணவர்களுக்கு கவுன்சிலிங் மற்றும் உரிய பயிற்சிகள் வழங்க வேண்டும் என,

தெரிவித்திருந்தார். தற்போது நடந்து முடிந்த, நீட் தேர்வில் தோல்வி அடைந்த, இரண்டு மாணவியர் தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் குறித்து, நீதிபதிகள் கிருபாகரன், கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், வழக்கறிஞர் ஏ.பி.சூரியபிரகாசம் முறையிட்டார்.


'மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கும்படி பிறப்பிக்கப்பட்ட உத்தரவு, முறையாக அமல்படுத்தப்படவில்லை. அரசுக்கு எதிராக, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அவர் கோரினார்.


குற்றம் கூறக்கூடாது :



உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர் சூரியபிரகாசம் மனுவும் தாக்கல் செய்தார். மனு, நீதிபதி கிருபாகரன் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல், ''மாணவர்களுக்கு, சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.


''நீட் தேர்வை, மாணவர்கள் எளிதாக அணுகும் வகையில், முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. எதிர்பாராத வகையில், தற்கொலை சம்பவங்கள் நடக்கின்றன. இதற்கு, அரசை குற்றம் கூறக்கூடாது,'' என்றார்.


Advertisement

உடனே, நீதிபதி கிருபாகரன், ''மாணவர்களின் தற்கொலை சம்பவங்களில், கட்சிகள், அரசியல் செய்வது துரதிருஷ்டவசமானது. முன்பே மாணவர்களுக்கு ஆலோசனை வழங்காமல், இறந்த பின், கண்ணீர் வடிப்பது தேவையற்றது.


''தற்கொலை சம்பவங்களுக்கு, அரசை மட்டுமே குற்றம் கூற முடியாது. இதை தடுக்க வேண்டிய பொறுப்பு, சமூகத்தில் உள்ள அனைவருக்கும் உள்ளது,'' என்றார்.


மாணவர்களின் தற்கொலையை தடுக்க, அரசு தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, இரண்டு வாரங்களில் பதில் அளிக்கும்படி உத்தரவிட்டு, விசாரணையை, நீதிபதி தள்ளிவைத்தார்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நாஞ்சில் நாடோடி - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
13-ஜூன்-201816:39:04 IST Report Abuse

நாஞ்சில் நாடோடிதமிழ் மாணவர்கள் NEET - விட பெரிய நுழைவுத் தேர்வை கூட திறமையாக எதிர்கொண்டு வெற்றி பெறுவார்கள். ஆனால் போலி அரசியல் வாதிகளும் சீக்கோ (சீமான் + வைகோ) போன்றோர்களும் ஓட்டுக்காகவும், கல்வி வியாபாரிகளிடம் கமிஷன் வாங்கவும் தமிழக மாணவர்களின் திறமையை தேசிய அளவில் சிறுமைபடுத்துகிறார்கள். அப்படிப் பட்டவர்கள் தமிழினதிற்கே ஆபத்தானவர்கள். அவர்களை ஒழிக்க நீதி மன்றம் ஒரு நீதி பிறப்பிக்க வேண்டும்...

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
13-ஜூன்-201816:32:01 IST Report Abuse

Endrum Indianடாஸ்மாக்கினாட்டில் எந்த தலைவரும் அறிவாளி கிடையாது???? கூமுட்டைகளின் தலைவர் எப்படி அறிவாளியாக முடியும்???? இப்தார் விருந்தில் பாஞ்சி கஞ்சி குடித்தால் அந்த கூமுட்டைக்கு பச்சை மூர்க்கர்களின் வோட்டு கிடைக்குமாம்?????கிறித்துமஸ் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டால் பாவாடைகள் ஒட்டு கிடைக்குமாம்???எவண்டா இதை கண்டு பிடிச்சது???? அவ்வளவு கேவலமான மதமா இஸ்லாமும், கிறித்துவமும்??? அது போதாது என்று நீட் தேர்வில் தோல்வி அடைந்து தற்கொலை செய்து கொண்டால் அவர்களுக்கு ரூ 7 லட்சம், அந்த பிணத்துக்கு மரியாதை செலுத்த போவது???? 2 வது நீட் தற்கொலை, 3 வது நீட் தற்கொலை என்னவாயிற்று???அவர்கள் வீட்டில் சென்று பார்க்கவில்லை, அவர்களுக்கு ரூ. 7 லட்சம் கொடுக்கவில்லை????ஏண்டா எதில் வோட்டு கிடைக்கும் என்றே பார்த்துக்கொண்டே இருப்பதா?? அப்படியே இப்தார் கஞ்சி, கிறிஸ்துமஸ் கேக் ஸ்டைலில் நடக்கின்றது? அப்போ நீட் எழுதும் குடும்பங்கள் எல்லாம் அவ்வளவு கேவலமானதா???இதை பார்த்தவுடன் வோட்டு போட்டுவிடுவார்களா???? நாராயணா மக்களே உங்களுக்கு ஒரு விண்ணப்பம் இப்போது டாஸ்மாக் நாட்டில் இருக்கும் எந்த ஒரு எம்.எல்.ஏ , எம்.பி யையும் இந்த ஆயுள் முழுவதும் தேர்ந்தேடுக்காதீர்கள். அவ்வளவு கேடு கெட்ட மனத்தினராக இருக்கின்றனர்.

Rate this:
தங்கை ராஜா - tcmtnland,இந்தியா
13-ஜூன்-201813:43:39 IST Report Abuse

தங்கை ராஜாதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நிறுத்தி உள்ளாட்சி அமைப்புகளை சீரழித்த புண்ணியவான்.

Rate this:
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
13-ஜூன்-201813:14:53 IST Report Abuse

Nallavan Nallavanபொதுத் தேர்வுகள், பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கு கொண்டு தோல்வியடைந்தவர்கள் சிலர் தற்கொலை செய்து கொள்கிறார்கள் ..... தனியாக கட் ஆப் மதிப்பெண், அரசின் சலுகைகள் கிடையாது, ஒரே ஆப்ஷன் மெரிட் இருந்தாலும், மேனேஜ்மேண்ட் கோட்டாதான் என்கிற நிலையிலும் "அவாள்" வீட்டுப்பிள்ளைகள் (பலர் ஏழ்மையுடன் போராடினாலும்) தற்கொலை செய்து கொள்வதில்லை ..... தொழிற்கல்வியோ, மருத்துவக் கல்வியோ இல்லாவிட்டாலும் சி.ஏ. அது .... இது என்று முற்சிக்கிறார்கள் ..... அவர்களில் உடல் உறுதியோ, மன உறுதியோ இல்லாதவர்கள் பலர் .... இருப்பினும் தற்கொலை என்றோ, தற்கொலை முயற்சி என்றோ நான் கேள்விப்பட்டதில்லை ..... எனக்கு மிகவும் வியப்பை அளிக்கும் விஷயங்களில் இதுவும் ஒன்று ..... நம்மிடம் இல்லாத ஒன்று (ஒன்றுதானா, பலவா?) அவர்களிடம் ஏதோ நிச்சயம் இருக்கிறது .....

Rate this:
13-ஜூன்-201815:50:48 IST Report Abuse

அண்ணாமலை ஜெயராமன்ஒன்றே ஒன்று மட்டும் போதும். இறைவன் நமக்கு அளித்திருக்கும் அறிவையும் , உடலையும் வைத்து இருக்கும் வாய்ப்புகளில் எது சிறந்தது என்று தேர்ந்தெடுத்து வாழ்வதுதான். நீங்கள் சொல்லும் கொடுமை இந்த நாட்டில் பல மாணவர்களுக்கு நடந்துகொண்டுதான் இருக்கிறது , என்ன செய்ய , இட ஒதுக்கீடு என்பது பொருளாதார அடிப்படையில் மாறினால் தான் இதற்கு தீர்வு கிடைக்கும்....

Rate this:
Manian - Chennai,இந்தியா
14-ஜூன்-201800:31:54 IST Report Abuse

Manianதற்கொலை செய்து கொள்வோர் (பணக்காரர்களும் இதில் உண்டு) பருக்கும் மரபணு கோராளரு இருக்கிறது, மன அழுத்தம் இருக்கிறது, எனா செய்வதென்று தெறியாமல் அற்ப காரணங்கள்/ காரணங்களா இல்லாமலே இருக்கிறது என்று ஒரு சமீபத்திய ஆராச்சி கட்டுரை சொல்கிறது. எனவே, பரிஷயில் பெயில் என்பது ஒரு சாக்குதான். பாசானலும், தன்னை யாரும் அன்போடு கூப்பிடவில்லை என்றும் சொல்லி தற்கொலை செய்து கொள்வார்கள். தங்கள் செத்தால் இருப்பவர்களுக்கு எவளவு துக்கம் இருக்கும், பொருளாதார நஷ்டம் இருக்கும் என்பதை சிந்திக்கும் திறமை இருக்காது. இந்த குறைபாடு குழந்தை பருவத்திலேயே காண்டு பிடிக்க வேண்டும்.. அது நம் நாட்டில் வருமுன், சில அ ஆயிரங்கள் தற்கொலை சேது கொள்ளும். அதை சடடத்தால், கோர்டுகளால் சரி செய்ய முடியாது. அதனாலேதான், களவு மணம் தற்கொலையில் முடியும்....

Rate this:
narayanan iyer - chennai,இந்தியா
13-ஜூன்-201811:42:53 IST Report Abuse

narayanan iyerஇந்த மாணவர் சமுதாயத்தில் எல்லா காலங்களிலும் தோல்வியால் தற்கொலை செய்வது நடந்துகொண்டுதான் இருக்கிறது . என்ன இப்போ நிறைய ஊடகங்கள் வந்துவிட்டது அவர்களுக்கும் பரபரப்பான செய்திவேண்டும் . வேகமாக பரவுகிறது வேதனையாக இருக்கு .

Rate this:
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
13-ஜூன்-201811:26:55 IST Report Abuse

Nallavan Nallavanஅனிதா தற்கொலை செய்துகொண்ட பிறகு தமிழக அரசு அவருடைய சகோதரருக்கு அரசு வேலை வழங்கியது .... பிரதீபாவின் உறவினர்களும் இதே ரீதியில் ஒரு கோரிக்கையை வைத்ததை நீதிபதி கவனித்திருப்பார் ....

Rate this:
13-ஜூன்-201815:54:44 IST Report Abuse

அண்ணாமலை ஜெயராமன்TNPSC என்ற துறையை இனி மூடிவிட வேண்டியது தான். நாட்டில் தற்கொலை செய்பவர் அல்லது கலவரம் செய்து ஊரை எரித்து அதனால் மரணமடைபவர்களின் குடும்பத்திற்குத்தான் இனி அரசாங்க வேலை. அதனால் அரசாங்கமே தற்கொலையை /கலவரத்தை ஊக்குவிக்கிறது. இந்த அரிய அரசு கொள்கையை மற்ற நாடுகளும் பின்பற்ற வேண்டுகிறோம்....

Rate this:
Raajanarayanan Raaj Narayanan - SANKARAN KOVIL,இந்தியா
13-ஜூன்-201810:42:23 IST Report Abuse

Raajanarayanan Raaj Narayananஎப்படியோ வைகோ,.திருமா,கம்யூனிஸ்ட்,சீமான் மற்ற எண்ணற்ற குப்பை கட்சிகள் பிணத்தின் மீது அரசியல் செய்கின்றன,ஆனால் இவர்கள் ஒருபோதும் அரசியலில் வெற்றி பெறப்போவதில்லை காசு வாங்கி கட்சி மற்றும் போராட்டம் பண்ணி மக்களை போராட்டத்தை தூண்டி கொன்று விடுவார்கள்.

Rate this:
கைப்புள்ள - nj,இந்தியா
13-ஜூன்-201810:25:06 IST Report Abuse

கைப்புள்ளநீட் தற்கொலைன்னு சொல்லாதீங்க. பொணத்தை கூட விட்டு வைக்காமல் பொணத்திலும் அரசியல் செய்து இந்த கேவலத்தை உருவாக்கி விட்ட கேடு கெட்டவன் கட்டுமரத்தானை ....

Rate this:
s t rajan - chennai,இந்தியா
13-ஜூன்-201809:48:38 IST Report Abuse

s t rajanநல்ல அறிவுரை. அரசியலாக்கும் கட்சிகளை முழுமையாக தடை செய்ய வேண்டும்

Rate this:
balakrishnan - coimbatore,இந்தியா
13-ஜூன்-201809:36:54 IST Report Abuse

balakrishnanமாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் விதத்தில், நன்னெறி வகுப்புகள், நீதிபோதனை வகுப்புக்கள் எல்லாம் தொடர்ந்து நடைபெறவேண்டும், அடுத்து பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தவறான எண்ணத்தை வளர்க்க கூடாது, எதையும் ஏற்கும் மனப்பக்குவத்தை வளர்க்க வேண்டும், அடுத்து இந்தியாவில் சாவை வைத்து அரசியல் செய்யாத கட்சிகளே கிடையாது

Rate this:
Giridharan Srinivasan - Chennai,இந்தியா
13-ஜூன்-201811:20:22 IST Report Abuse

Giridharan SrinivasanBalakrishnan - Coimbatore,இந்தியா, நீங்கள் சொல்லி இருப்பதில் ஒன்றை தவிர (அடுத்து இந்தியாவில் சாவை வைத்து அரசியல் செய்யாத கட்சிகளே கிடையாது.) மற்றவைகள் அனைத்தும் உண்மை / மிகச்சரியானது. "அடுத்து இந்தியாவில் சாவை வைத்து அரசியல் செய்யாத கட்சிகளே கிடையாது/" என்று பொதுப்படையாக சொல்லி உள்ளதால் அதை முழுவதும் சரி என்று சொல்ல முடியாது....

Rate this:
13-ஜூன்-201815:59:06 IST Report Abuse

அண்ணாமலை ஜெயராமன்///நன்னெறி வகுப்புகள், நீதிபோதனை வகுப்புக்கள்/// இதெல்லாம் இந்த மண்ணின் தர்மம் சம்பந்தப்பட்டது , அதையெல்லாம் சொல்லிக்கொடுக்க கூடாது. இது சிறுபான்மையினருக்கு எதிரானது. வெளிநாட்டு தற்குறிகள் பற்றி மட்டும் படிக்கலாம் அல்லது இந்த நாட்டை கொள்ளையடிக்க வந்த முகலாய மன்னர்களின் பராக்கிரமங்களை பற்றி படிக்கலாம் , 18 முறை போர் தொடுத்து வெற்றி பெற்று இந்த நாட்டின் கோவில் பொக்கிஷங்களை திருடி அதை இடித்து தள்ளியதை படித்து கொண்டாடலாம்....

Rate this:
13-ஜூன்-201816:01:05 IST Report Abuse

அண்ணாமலை ஜெயராமன்அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்று அவ்வையார் சொல்லுகிறார் , மூர்க்கம் ஏற்குமா ? மதத்திற்கு எதிரானதாயிற்றே....

Rate this:
Manian - Chennai,இந்தியா
14-ஜூன்-201800:45:08 IST Report Abuse

Manianஅதை மாற்றி, 'அன்னையும், பிதாவும் முள் நெறி தெய்வங்கள்','தந்தை தாய் பேன் (தலை)' என்று கூருவதே திருடர்கள் கழக கோட்பாடு....

Rate this:
மேலும் 16 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement