பள்ளி பொது தேர்வுகளுக்கான தேதிகள் அறிவிப்பு; 'ரிசல்ட்' தேதியும் முன்கூட்டியே வெளியீடு Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
பள்ளி பொது தேர்வுகளுக்கான தேதிகள் அறிவிப்பு
'ரிசல்ட்' தேதியும் முன்கூட்டியே வெளியீடு

சென்னை : அடுத்த ஆண்டில் நடக்க உள்ள, 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு தேதிகளை, பள்ளி கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் நேற்று வெளியிட்டார்.

பள்ளி,பொது தேர்வு,தேதிகள், ரிசல்ட் தேதி, வெளியீடு


கடந்த ஆண்டை போலவே, நடப்பு கல்வி ஆண்டு துவக்கத்திலேயே, பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் தேதிகளையும், அவற்றின் முடிவுகள் வெளியாகும் தேதிகளையும், அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி, தயார் செய்துள்ளார். அதை, சென்னை, தலைமை செயலகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார்.

* அதன்படி, பிளஸ் 2 தேர்வு, 2019 மார்ச், 1ல் துவங்கி, 19ல் முடிகிறது. தேர்வு முடிவுகள், ஏப்., 19ல் வெளியாகின்றன. பிளஸ் 1 தேர்வு, மார்ச், 6ல் துவங்கி, 22ல் முடிகிறது.

தேர்வு முடிவுகள், மே, 8ல் வெளியாகின்றன. 10ம் வகுப்பு தேர்வு, மார்ச், 14ல் துவங்கி, 29ல் முடிகிறது. ஏப்., 29ல், தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன

* கடந்த ஆண்டு, பிளஸ் 1ல், 600 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதியவர்கள், இந்த ஆண்டு பிளஸ் 2 படிக்கின்றனர். அவர்களுக்கு, ஒவ்வொரு பாடத்துக்கும், தலா, 100 மதிப்பெண் வீதம், இரண்டரை மணி நேரம் தேர்வு நடத்தப்படும்

* கடந்த ஆண்டு வரை, பிளஸ் 2 படித்து, 1,200 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதி, சில பாடங்களில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு, பழைய முறைப்படி, ஒவ்வொரு பாடத்துக்கும், தலா, 200 மதிப்பெண் வீதம், 1,200 மதிப்பெண்களுக்கு, மூன்று மணி நேரம் தேர்வு நடத்தப்படும். இரண்டு பிரிவினருக்கும், காலையில் தேர்வு துவங்கி, மதியம் முடியும்

* இந்த ஆண்டு, புதிதாக அமலுக்கு வந்துள்ள, மொழி பாடத்தாள் குறைப்புப்படி, பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும், பழைய, புதிய மாணவர்களுக்கும், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில், ஒரு தாளுக்கு மட்டுமே, தேர்வு நடத்தப்படும்.

Advertisement

இவ்வளவு இடைவெளி தேவையா:

அட்டவணைப்படி பிளஸ் 2 தேர்வு மார்ச் 1 துவங்கி 19 ம் தேதி வரை நடக்கிறது. தமிழ், ஆங்கிலம் மொழிப்பாடங்கள் ஒரு தாளாக குறைக்கப்பட்ட பின்பு, 6 தாள்களுக்கு தேர்வு நடக்கிறது. ஞாயிறு விடுமுறை தவிர, தினமும் தேர்வு நடத்தி 1 ம் தேதி முதல் 7ம் தேதிக்குள் தேர்வை முடித்து விடலாம். ஆனால் தமிழ் தேர்வுக்கும் ஆங்கில தேர்வுக்கும் இடையே 4 நாட்கள் இடைவெளி உள்ளது. பத்தாம் வகுப்பு தேர்வு மார்ச் 14ல் துவங்கி 29 ம் தேதி வரை நடக்கிறது. ஏழு தாள்கள் உள்ள, தேர்வை நடத்த 15 நாட்கள் தேவைப்படுகிறது. ஒவ்வொரு தேர்வுக்கும் இடையில், இடைவெளி அதிகம் வருவதால் மாணவர்கள் சோர்வடைகின்றனர். நிறைய நாட்கள் தேர்வு பீதியில் இருக்க வேண்டி உள்ளது. அதற்கு பதிலாக ஞாயிறு விடுமுறை தவிர தொடர்ச்சியாக இந்த தேர்வையும் நடத்தலாம். தேர்வுக்கு 8 மாதங்கள் உள்ளதால், இப்போதே தேர்வு அட்டவணை அறிவிக்கப்பட்டதால் மாணவர்கள் தயாராவது எளிது. எனவே தேர்வு நேரத்தில் படிப்பதற்கு என்று நாட்கள் தேவையில்லை. மனநல மருத்துவர் வி.ராமானுஜம் கூறுகையில், ''சீக்கிரம் தேர்வு முடிந்தால், ஒரே உந்துதலோடு படித்து எழுதிவிடலாம். ஒவ்வொரு தேர்வுக்கு இடையே விடுமுறை இருந்தால், ஒருவித சோம்பேறித்தனம் ஏற்படுவதாக மாணவர்கள் உணருகின்றனர். ஒரு ஆண்டு காலம் படிக்கமுடியாத பாடத்தை எப்படி குறிப்பிட்ட நாட்களுக்குள் படித்துவிட முடியும். எனவே தேர்வுக்கு இடைவெளி, விடுமுறை தேவையற்றது,'' என்றார்.மார்ச் 1 ம் தேதி துவங்கி பிளஸ் 2 தேர்வை காலையிலும், பத்தாம் வகுப்பை தேர்வை மதியமும் நடத்தினால் அதிகபட்சம் 10 ம் தேதிக்குள் இரண்டு தேர்வையும் முடித்து விடலாம். அதற்கு பிறகு பிளஸ் 1 தேர்வை நடத்தலாம். இதனால் தேர்வுப்பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கும், தலைமை ஆசிரியர்களுக்கும் எளிதாக இருக்கும். கடந்த ஆண்டு பொதுத்தேர்வுகள் துவங்கி முடிய 35 நாட்கள் ஆனது. அந்த வகையில் இந்தமுறை நாட்கள் இடைவெளி குறைக்கப்பட்டுள்ளது. இன்னும் குறைக்க வேண்டும். கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கவனிப்பாரா?


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (16+ 8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
13-ஜூன்-201820:26:25 IST Report Abuse

Pugazh Vகைப்புள்ள என்ற போலிப் பெயரில் ஒளிந்து கொண்டு அநாகரிகத்தின் உச்சமாக எழுதுவதை அ ஜெயராமன் முதல் நல்லவன் என்ற பேரில் ஒளிந்திருப்பவர் வரை கண்டுகொள்ளாமல் இருப்பது விசித்திரம். படித்த பண்பாளர்கள் எனில் சக-கட்சிக்காரர் என்றாலும் கண்ட்ரோல் பண்ணும் விதத்தில் அறிவுரை சொல்லலாமே. கலைஞர் ஆட்சி யில் யாருமே படிக்கவே இல்லையா? பட்டங்கள் பெறவில்லையா? நல்ல வேலைகளில் அமரவில்வையா? அயல்நாடு சென்று மேற்படிப்பு படிக்க தகுதிபெறவில்லையா? கலைஞர் பற்றி இந்த செய்தியில் மிகவும் அநாகரிகமாக அவமரியாதையாக ஏன் எழுதுகிறார்?

Rate this:
13-ஜூன்-201816:03:10 IST Report Abuse

அண்ணாமலை ஜெயராமன்சிறப்பாக செயல்படும் அமைச்சர் இவர். வாழ்த்துக்கள்.

Rate this:
J.Isaac - bangalore,இந்தியா
13-ஜூன்-201815:53:42 IST Report Abuse

J.Isaacமுதலாவது குழந்தைகளுக்கு புத்தகமே சரியாக கொடுக்க முடியல . அதற்குள் தேர்வு தேதி அறிவிச்சாச்சு .

Rate this:
muthu Rajendran - chennai,இந்தியா
13-ஜூன்-201814:56:30 IST Report Abuse

muthu Rajendranஒரு வருடத்திற்கு முன்னாள் தேர்வு அட்டவணையை தெரிவிக்க அமைச்சர் தேவையா ? இயக்குனர் சொல்லமாட்டாரா பாடத்திட்டத்தில் சி பி எஸ் சி பாட புத்தகங்களை குறிப்பாக உயிரியல் வேதியல் இயற்பியல் ஆகிய புத்தகங்களை பிளஸ் ஒன்று மற்றும் இரெண்டு வைத்து நடத்தினால் நமது மாநில குழந்தைகள் நீட் போட்டித்தேர்வை எதிர்கொள்ள முடியும் இல்லை நீட் தேர்வில் சி பி எஸ் சி பாடத்திட்டம் மற்றும் இதர பாடத்திட்டங்களில் சமமாக கேள்விகள் வருவதற்கு ஏற்பாடு செய்யுங்கள் இப்பபோதைக்கு இது தான் தீர்வாக தெரிகிறது. மற்றபடி நீட் தேர்விலிருந்து விலக்கு கோருவது என்பது அரசியல் ரீதியாக எடுத்து செல்லும் முயற்சி அதை தனியாக செய்யுங்கள் அதுவரை தமிழக குழந்தைகள் மற்ற மாநில மாணவர்களோடு சமமாக போட்டியிட வாய்ப்பு ஏற்படுத்துங்கள் குறிப்பாக கிராமப்புற மாணவர்களுக்கு இந்த மூன்று பாடங்களை புகட்ட ஒரு தனி தொலைக்காட்சியை கூட அரசு துவங்கலாம்

Rate this:
Shankarnar - Chengalpattu,இந்தியா
13-ஜூன்-201812:35:38 IST Report Abuse

Shankarnarஏம்பா மினிஸ்டரு எல்லா தேர்வுக்கும் ஒரே மாதிரி 2 நாள் லீவு விட வேண்டியது தான ? ஒரே தேர்வுக்கு 1 நாள் இன்னொரு தேர்வுக்கு 2 நாள் லீவு விட்ட எப்புடிபா ? விருப்ப மொழி பாடத்துக்கு லீவ் இல்லயே நீ படிக்கும் போதும் இப்படி தானே இருந்தது?? நீயும் இப்பட்டியே பண்றயே தீர்ப்பை கொஞ்சம் மாத்தி சொல்லு பா

Rate this:
RGK - Dharapuram,இந்தியா
13-ஜூன்-201812:34:02 IST Report Abuse

RGKஇவர் ஒரு டாப் performing அமைச்சர். உங்களது பணி தொடரட்டும். எடப்பாடியும் இவர் துறையில் தலையிடாமல் இருப்பது ஒரு நல்ல அறிகுறி.

Rate this:
suriyanila - Vaniyambadi,இந்தியா
13-ஜூன்-201812:16:06 IST Report Abuse

suriyanilaமாண்புமிகு அமைச்சர் அவர்களின் செயல்பாடு மிகவும் சிறப்பாக உள்ளது. தேர்வு அட்டவணைகள், அனைத்து தரப்பு மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு மிகவும் நல்ல முறையில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் மாற்றம் தேவையில்லை. ஒவ்வொரு தேர்வுக்கும் உள்ள இடைவெளி அவசியம். மாணவர்களுக்கு போதிய ஒய்வு அவசியம். மனநல மருத்துவரே நீங்கள் நன்கு பயிற்சி எடுக்கவேண்டும். ஏசி அமர்ந்துகொண்டு முடிவெடுக்காதீர்கள். தேர்வு தொடர்ச்சியாக இருந்தால் தான் சோர்வடைவார்கள்.

Rate this:
V.Rajeswaran - chennai,இந்தியா
13-ஜூன்-201811:48:42 IST Report Abuse

V.Rajeswaranநன்றி செங்கோட்டையன் சார் உங்கள் நல்ல முயற்சிகள் தொடரட்டும் உங்களை மறைந்த முதல்வர் அம்மா அவர்கள் தளபதியாக வைத்த காரணம் இப்போதுதான் புரிகிறது வரும்கால தலைமுறை உங்களை வாழ்த்தும் மிக்க நன்றி

Rate this:
வல்வில் ஓரி - Koodal,இந்தியா
13-ஜூன்-201811:21:28 IST Report Abuse

வல்வில்  ஓரிநல்ல வேலை...ஜெ இந்நேரம் இருந்திருந்தால் ஒருத்தரும் துறை ரீதியான முடிவை கூட எடுக்கமுடியாம ஒரு பைலும் நகராம இருக்கும்...

Rate this:
SUNA PAANA - Chennai,இந்தியா
13-ஜூன்-201810:57:04 IST Report Abuse

SUNA PAANAமிக அருமையாக செயல்படுகிறார். கல்வி துறை நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. வாழ்த்துக்கள். கூடிய விரைவில் அவர் முதல் அமைச்சராக தேர்வு செய்யப்பட்டு தமிழகத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வார் என நம்புகிறோம்

Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement