சொத்து குவிப்பு வழக்கு; சிக்கினார் அமைச்சர்! Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
பால் வளத்துறை அமைச்சர்,ராஜேந்திர பாலாஜி,சொத்து குவிப்பு,வழக்கு,சிக்கினார்,அமைச்சர்,சென்னை,உயர் நீதிமன்றம்

சென்னை : அளவுக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில், பால் வளத்துறை அமைச்சர், ராஜேந்திர பாலாஜி சிக்குகிறார். அமைச்சர் மீதான புகார் குறித்து, ஐ.பி.எஸ்., அதிகாரியை நியமித்து, 1996ல், இருந்து விசாரணை நடத்த வேண்டும் என, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

மதுரை, தல்லாகுளத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, 2011ல், நடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட, வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது, அசையும் சொத்தின் மதிப்பு, 18.88 லட்சம் ரூபாய், அசையா சொத்தின் மதிப்பு, 19.11 லட்சம் ரூபாய் என, குறிப்பிட்டிருந்தார்.

அமைச்சரான பின், ராஜபாளையம் அருகேயுள்ள தேவதானத்தில், 74 லட்சம் ரூபாய்க்கு, 35 ஏக்கர் நிலம் வாங்கினார். அதன், உண்மையான மதிப்பு, ஆறு கோடி ரூபாய்.

சிவகாசி அருகே திருத்தங்கல் நகரில், 23.35 லட்சம் ரூபாய் மதிப்பில், இரண்டு மனைகள் வாங்கி உள்ளார். மேலும், ௭5 சென்ட் நிலமும் வாங்கி உள்ளார்.

மொத்தத்தில், அவரது சொத்தின் மதிப்பு, எட்டு கோடி ரூபாய் இருக்கும். அதிகார துஷ்பிரயோகம் செய்து, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, 2013 அக்டோபரில், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனரிடம் புகார் அளித்தேன்.

என் மனு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

முகாந்திரம் இல்லை :


இம்மனு, 2013 டிசம்பரில் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு விசாரணைக்கு வந்தபோது, விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யும்படி, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர். இதையடுத்து, எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், 2018 மார்ச்சில், வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வழக்கு குறித்த ஆவணங்களை தாக்கல் செய்யும்படி, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட

அறிக்கையில், 'அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான புகாரை விசாரித்த அதிகாரி, புகாரில் எந்த முகாந்திரமும் இல்லை; ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தேவையில்லை என்று கூறியுள்ளார்' என, தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், வழக்கின் உத்தரவை, தேதி குறிப்பிடாமல், நீதிபதிகள் தள்ளி வைத்திருந்தனர். சென்னை உயர் நீதிமன்றத்தில், இவ்வழக்கின் உத்தரவை, நேற்று நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அடங்கிய, டிவிஷன் பெஞ்ச் பிறப்பித்தது.

மீண்டும் விசாரணை :


நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: திருத்தங்கல் பேரூராட்சி துணை தலைவராக, 1996ல், ராஜேந்திர பாலாஜி இருந்துள்ளார்.

அமைச்சராக இருந்த, 2011 - 13 காலகட்டத்தில் மட்டும், விசாரணை நடந்துள்ளது. பேரூராட்சி துணை தலைவராக இருந்த நாளில் இருந்து, ஆரம்பகட்ட விசாரணை நடத்தியிருக்க வேண்டும். ஆரம்பகட்ட விசாரணை நடத்திய புலனாய்வு அதிகாரி, லஞ்ச ஒழிப்பு துறையின் வழிகாட்டி குறிப்பில் கூறியுள்ளதை பின்பற்றவில்லை.

நீதிமன்றத்தின் முன் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களை, முழுமையாக ஆய்வு செய்த பின், ஆரம்பகட்ட விசாரணை முறையாக நடத்தப்படவில்லை என, கருதுகிறோம். எனவே, மீண்டும் விசாரணை நடத்தப்பட வேண்டும். பேரூராட்சி துணை தலைவராக இருந்த, கால கட்டத்தில் இருந்து, அதாவது, 1996ம் ஆண்டில் இருந்து, 2018 பிப்ரவரி வரை, விசாரணை இருக்க வேண்டும்.

தற்போது, அமைச்சராக ராஜேந்திர பாலாஜி உள்ளார். அவரது பதவியை கருத்தில் கொண்டு, எஸ்.பி., அந்தஸ்தில் உள்ள, ஐ.பி.எஸ்., அதிகாரியை நியமித்து, ஆரம்பகட்ட விசாரணை நடத்த வேண்டும். அவ்வப்போது, விசாரணை அறிக்கையை, நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். ஆரம்பகட்ட விசாரணையின் முன்னேற்றத்தை, 'சீல்' இடப்பட்ட உறையில், ஆக., 3ல், தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை, ஆக., 6க்கு தள்ளிவைக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (70+ 45)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv - Bangalore,இந்தியா
14-ஜூன்-201802:03:25 IST Report Abuse

skv<srinivasankrishnaveni>திமுக மலைமுழுங்கிகள் அதிமுக நதிகள் கடல்கள் என்று எல்லாத்தையும் விழுங்கி ட்டு பசிக்குது என்று அலையும் சுறாக்கள் என்பதுதான் உண்மை மொத்தத்துல ரெண்டுமே ஓலைகளிலே எல் முனையளவும் வித்தியாசமே இல்லாமல் கொள்ளைஅடிச்சு சொத்தும் சேர்க்கும் கூட்டங்களேதானே இந்த ரெண்டும் அடிச்சுள்ள கொள்ளைகளில் இந்திய எகானாமியே சீர் செய்ய முடியும் , மக்கள் உதவினால்தான் கதிமோக்ஷம் தமிழ் நாட்டுக்கு என்பதுதான் 100% உண்மை

Rate this:
Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா
13-ஜூன்-201820:55:13 IST Report Abuse

Panneerselvam Chinnasamyதிமுக வில் ஒன்றிரெண்டு பேர்கள் ஊழல் செய்திருக்கலாம்... ஆனால் அ திமுகவில் TOP TO BOTTOM ஊழல் ... சொத்தை கத்திரிக்காயை சொத்தையை வெட்டிவிட்டு சமைக்கலாம்... ஆனால் முழுதும் அழுகிய கத்திரிக்காயை என்ன செய்வது?

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
13-ஜூன்-201819:59:45 IST Report Abuse

Pugazh Vஇதில் ஏன் திமுக மேற்கோள் காட்டப்படுகிறது ? ஊழல் குற்றங்கள் அனைத்துமே நிரூபிக்கப்பட்டு பதவி பறிக்கப்பட்டு100 கோடி அபராதம் விதிக்கப்பட்ட ஜெயலலிதா கட்சி யினர் பற்றிய செய்தியில் , இன்று வரை எந்த குற்றச்சாட்டுமே நிரூபிக்கப்படாத திமுகவினரை ஏன் மேற்கோள் காட்டுகிறார்கள்?

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
13-ஜூன்-201819:55:55 IST Report Abuse

Pugazh Vவிஜயபாஸ்கர் என்ற அமைச்சர் வீட்டில் எடுத்த ஆவணங்களை எடைக்கு போட்டு புண்ணாக்கு வாங்கி தின்று விட்டார்களா? அடுத்து வேர்க்கடலை வாங்க இந்த அமைச்சர் வீட்டில் ஆவணங்கள் எடுக்கிறார்களா?

Rate this:
P R Srinivasan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
13-ஜூன்-201819:35:57 IST Report Abuse

P R Srinivasanஇவர்கள் விசாரித்து முடிவு செய்வதற்குள் மக்களே இந்த ஊழலை மறந்து விடுவார்கள். சில சமயத்தில் குற்றம் சாட்டப்பட்டவர் மறைந்துவிடுவார்.

Rate this:
Sha Shank Shankar - Chennai,இந்தியா
13-ஜூன்-201818:51:18 IST Report Abuse

Sha Shank Shankar வளமான துறையில் இருந்து கொண்டு தன்னை வளப்படுத்திக் கொள்ளவில்லையென்றால் எப்படி?

Rate this:
Sha Shank Shankar - Chennai,இந்தியா
13-ஜூன்-201818:49:30 IST Report Abuse

Sha Shank Shankar விசாரணை நடக்கும் ஆனா நடக்காது தீர்ப்பு வரும் ஆனா வராது தண்டனை கிடைக்கும் ஆனா கிடைக்காது சட்டத்தின் மீது நம்பிக்கை இருக்கு ஆனா இல்லை

Rate this:
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
13-ஜூன்-201816:11:36 IST Report Abuse

Nallavan Nallavanதமிழகத்தில் அதிமுக -வின் பெயரால் பாஜக ஆள்கிறது என்றும், அதிமுக -வை அடிமைக்கட்சி என்றும் திமுக-காங்கிரஸ் அல்லக்கைகள் சொல்லி வந்தார்கள் ..... அவர்கள் இந்த நடவடிக்கையைப் பாராட்டுவார்கள் என்று நம்புவோம் .... ஏனென்றால் திமுக ஆட்சியில், ஆட்சி நடக்கும்பொழுதே பல ஊழல் குற்றச்சாட்டுக்கள் எழுந்தாலும், திமுக-காங்கிரஸ் அடிமைகள், """" குற்றச்சாட்டு வந்தாலே ஒருவர் குற்றவாளி அல்ல """" என்று (படிப்பாளி புகழ் உட்பட) கூறிவந்தார்கள் ....

Rate this:
Nalanvirumbi - New York,யூ.எஸ்.ஏ
13-ஜூன்-201814:45:41 IST Report Abuse

Nalanvirumbiஅம்மா வழியில் ஆட்சி நடக்கிறது இதனை குறை சொல்வது தவறு.....

Rate this:
r.sundaram - tirunelveli,இந்தியா
13-ஜூன்-201813:13:21 IST Report Abuse

r.sundaramஅந்த விசாரணை அதிகாரி ஏன் வழிகாட்டு குறிப்புகளை பின்பற்றவில்லை? அவருக்கு அமைச்சரிடம் இருந்து பயமுறுத்தல் இருந்ததா? இல்லை வேறு விவகாரமா? முதலில் அந்த அதிகாரியை விசாரிக்க வேண்டும். இந்த மாதிரி அதிகாரிகள் இருக்கப்போய் தான் இந்த மாதிரி அமைச்சர்களும் இருக்கிறார்கள், விசாரணையில் இருந்து தப்புகிறார்கள். அதனால் முதலில் அந்த விசாரணை அதிகாரியை விசாரிக்க வேண்டும்.

Rate this:
மேலும் 60 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement