டிரம்ப் - கிம் ஜாங்: உரசல் டூ சமாதானம்...| Dinamalar

டிரம்ப் - கிம் ஜாங்: உரசல் டூ சமாதானம்...

Added : ஜூன் 13, 2018
Advertisement
Donald Trump,Trump,டிரம்ப்,டோனால்ட் டிரம்ப்

ஜன., 2, 2017 : புத்தாண்டு உரையில் பேசிய வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் 'நாம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை தயாரிப்பின் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டோம்' என தெரிவித்தார்.இதற்கு பதிலளித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், 'அப்படி ஒன்றும் நடக்காது' என்றார்.

ஜன.4: கிம் ஜாங், ''என் டேபிள் மீது, அணு ஆயுதத்தை ஏவுவதற்கான பட்டன் தயார் நிலையில் உள்ளது' என, அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசினார். இதற்கு 'அணு ஆயுதங்களை ஏவுவதற்காக, என் கட்டுப்பாட்டில் உள்ள பட்டன் சக்தி வாய்ந்தது. அது, நன்றாக வேலையும் செய்யக் கூடியது' என டிரம்ப் பதில் தெரிவித்தார்.

ஏப்.4: வடகொரியா ஏவிய, குறுகிய துாரம் சென்று தாக்கும் ஏவுகணை ஜப்பான் கடலில் விழுந்தது.

ஜூலை 28: 3000 கி.மீ., துாரம் வரை சென்று தாக்கும் ஏவுகணையை சோதித்தது.

செப்.4: உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி, 'ஹைட்ரஜன் அணுகுண்டு' சோதனையை நடத்தியது. இதனால் ஹம்யாங் மாகாணத்தில் 6.1 என்ற ரிக்டர் அளவில் நில அதிர்வு உணரப்பட்டது.

ஜன.2018 : தென்கொரியாவில் நடக்கும் குளிர்கால ஒலிம்பிக் தொடருக்கு, வீரர்களை அனுப்புவது தொடர்பாக தென்கொரிய அதிகாரிகள் வடகொரியா சென்று பேச்சுவார்த்தை.

பிப்., : வடகொரிய வீரர்கள், ஒலிம்பிக் தொடரில் பங்கேற்றனர்.

மார்ச் : வடகொரிய அதிபர் கிம், அமெரிக்க அதிபரை சந்திக்க விரும்புவதாக, தென்கொரிய அதிகாரிகளிடம் தெரிவித்தார். தென்கொரிய துாதர் இதனை டிரம்பிடம் தெரிவித்தார். டிரம்ப்பும் அதற்கு சம்மதம் தெரிவித்தார்.

மார்ச் 27: கிம் ஜாங் உன், ரகசிய பயணமாக சீனா சென்று அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்தார். இது அடுத்தநாளே உலகத்திற்கு தெரிந்தது. இதுதான் கிம்மின் முதல் வெளிநாட்டு பயணம்.

ஏப். 21: அணு ஆயுத உற்பத்தியை நிறுத்துவதாகவும், நாட்டின் வளர்ச்சியின் பக்கம் கவனம் செலுத்துவதாகவும் கிம் தெரிவித்தார். இதற்கு 'இது வடகொரியாவுக்கும், உலகிற்கும் நல்ல செய்தி' என டிரம்ப் டுவிட்டரில் தெரிவித்தார்.

ஏப்.27: வடகொரிய - தென்கொரிய எல்லையில், வடகொரிய அதிபர் கிம் ஜாங் - தென்கொரிய அதிபர் மூன் ஜோ இடையிலான வரலாற்று சந்திப்பு நிகழ்ந்தது.

மே 7: கிம் ஜாங்., மீண்டும் சீனா சென்று அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்தார்.

மே 9: அமெரிக்க செயலர் பாம்பியோ வடகொரிய சென்று இருநாட்டு தலைவர்கள் சந்திப்பு குறித்து ஆலோசனை நடத்தினார். சிறையில் இருந்த 3 அமெரிக்கர்களை, வடகொரியா விடுதலை செய்தது.

மே 10: அமெரிக்க அதிபர் டிரம்ப் டுவிட்டரில், 'கிம் ஜாங்கை, சிங்கப்பூரில் ஜூன் 12ல் சந்திப்பதாக' தெரிவித்தார்.

மே 24: சந்திப்பு ரத்து செய்யப்படுவதாக அமெரிக்கா அறிவிப்பு.

மே 26: வடகொரிய - தென்கொரிய அதிபர்கள் மீண்டும் சந்திப்பு.

மே 30: வடகொரிய துாதர் நியூயார்க்கில் அமெரிக்க செயலரை சந்தித்தார்.

ஜூன் 1: திட்டமிட்டபடி ஜூன் 12ல் சந்திப்பு நடக்கும் என வெள்ளை மாளிகை அறிவிப்பு.

ஜூன் 12: சிங்கப்பூரில் வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு நடந்தது.

காக்டெயில் இறால், ரெட் ஒயின்: அமெரிக்க அதிபர் டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜாங்உன் ஆகியோருக்கு கொரிய, மலாய், மற்றும் மேற்கத்திய வகைகளில் உணவு தயார் செய்யப்பட்டு இருந்தன. நேற்று காலை சென்டோசா தீவில் இரு அதிபர்களும் சந்தித்தனர். அதன் பின், இரு தலைவர்களுக்கும் மிகப் பிரமாண்டமான முறையில் மேற்கத்திய, கொரிய மற்றும் மலாய் கலாசாரம் கலந்த மதிய உணவு தயார் செய்யப்பட்டு இருந்தது. கொரிய ஸ்டப்டு குக்கும்பர் (வெள்ளரி), ஆக்டோபஸ், காக்டெயில் இறால், பிரெஞ்சு பாஸ்டரிஸ், பலவகையான ஐஸ்கிரீம்கள் வைக்கப்பட்டன.உணவுக்கு முன் 'ஸ்டார்ட் அப்' க்காக கிரீன் மேங்கோ கெராபு, எலுமிச்சை மற்றும் ஆக்டோபஸ் கலந்த ஜூஸ் வழங்கப்பட்டது. மேலும், 'டாபினோய்ஸ் பொட்டேட்டோ' (உருளைக்கிழங்கு), வேக வைக்கப்பட்ட 'பிரோகோலினி' (காய்), சிவப்பு ஒயின், 'யாங்ஜூ பிரைட் ரைஸ்', 'ஜோ சில்லி சாஸ்', 'பச்சைப் பட்டாணி', 'முட்டை' போன்றவை கண்ணைக் கவரும் வகையில் சமைக்கப்பட்டு இருந்தன. ஆனால் இதில் எந்தெந்த உணவுகளை யார்யார் சாப்பிட்டனர் என தெரிவிக்கப்படவில்லை.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை