Rahul Gandhi's Amethi Visit Tomorrow Cancelled Over Security Concerns | ராகுலின் பாதுகாப்புக்கு உ.பி.,போலீஸ் மறுப்பு :அமேதி பயணம் ரத்து| Dinamalar

ராகுலின் பாதுகாப்புக்கு உ.பி.,போலீஸ் மறுப்பு :அமேதி பயணம் ரத்து

Added : ஜூன் 13, 2018 | கருத்துகள் (47)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 ராகுல் பாதுகாப்பு, உத்தர பிரதேசம் போலீஸ், அமேதி பயணம் ரத்து, ராகுல் அமேதி சுற்றுப்பயணம், காங்கிரஸ் தலைவர் ராகுல் , முஸ்லிம் ரம்ஜான் கொண்டாடம், உத்தர பிரதேசம், 
Rahul security, Uttar Pradesh police, Amethi tour canceled, Rahul Amethi tour, congress leader Rahul, Muslim ramjan celebration, Uttar Pradesh,

லக்னோ: ராகுலின் அமேதி சுற்றுப்பயணத்தில் போதிய பாதுகாப்பு அளிக்க உ.பி., போலீஸ் மறுத்தததை அடுத்து சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டது.
உ.பி., மாநிலம் அமேதி ராகுலின் சொந்ததொகுதியாகும். இத்தொகுதியில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்தார்.இந்நிலையில் மாநில போலீசார் காங்கிரஸ் தலைவர் களிடம் கூறி இருப்பதாவது: காங்கிரஸ் தலைவர் ராகுல் அமேதி தொகுதியில் சுற்றுப்பயணம் உள்ள நேரத்தில் அத்தொகுதியில் முஸ்லிம் மக்கள் ரம்ஜான் கொண்டாட உள்ளனர். இதனையடுத்து அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க இருப்பதால் ராகுலுக்கு போதிய பாதுகாப்பு அளிக்க முடியாது என கூறியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து ராகுலின் அமேதி பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக ராகுல் கடந்த ஏப்ரல் மாதம் அமேதி தொகுதியில் மூன்று நாள் சுற்றுப்பயணம் செய்தார். என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (47)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sahayam - cHENNAI,இந்தியா
13-ஜூன்-201820:20:25 IST Report Abuse
Sahayam பிஜேபி இவரை அமுக்க அமுக்க தானாக வளர்க்க பட்டு விடுவார் ராகுல்.
Rate this:
Share this comment
Cancel
Kansami Ponsami - Thoothukudi,இந்தியா
13-ஜூன்-201815:17:37 IST Report Abuse
Kansami Ponsami ஆளும் பிஜேபியின் அடவாடிகளில் தினம் ஒன்று.. அதில் ஒன்று இது...என்ன அடாவடி செய்தாலும் வரும் தேர்தலில் பாடம் பிஜேபிக்கு மக்கள் மூலம் மறக்கமுடியாதபடி கிடைத்து மூலையில் போய் உக்காருகின்ற நிலைமை வரும்...
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
13-ஜூன்-201815:11:48 IST Report Abuse
Pasupathi Subbian இந்த பப்புவின் விளையாட்டு இப்போதெல்லாம் அதிகமாகிவிட்டது. நேற்று முன்னாள் பிரதமர் திரு வாஜ்பாய் அவர்கள் உடல்நல குறைவால் மறுத்தவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவரின் குடும்பத்தாரிடம் பேசிய ராகுல் , தான் மருத்துவமனைக்கு வருவதாக சொல்லவே இல்லை. மருத்துவமனை அதிகாரிகளோ ராகுலை சாயங்காலம் ஆறு மணிக்குமேல் வரச்சொல்லி தகவல் தெரிவித்துள்ளனர். இதையெல்லாம் மீறி மதியம் மூன்று மணிக்கே ராகுல் , வாஜ்பாயை மருத்துவமனையில் சென்று பார்த்து வந்துள்ளார். இதை பற்றிய பெருமையாக அடுத்து வந்த கூட்டத்தில், வாஜ்பாய் , காங்கிரசுக்கு எதிரானவர் இருந்தாலும் தான் அப்படி அல்ல, காங்கிரசின் போர்வீரன், மற்றவர்கள் வந்து பார்ப்பதற்கு முன் ,நான் முதலில் , சென்று அவரை பார்த்துவந்தேன் , என்று பெருமை முடித்துக்கொண்டார். இதில் இருந்தே தெரிகிறது இவருக்கு பொறுப்புணர்வு இல்லாதது. அதை விட எல்லாம் தெரிந்த இந்த பப்புவின் பொன்மொழிகள் , மற்றும் ஆராய்ச்சிகள் அயல்நாட்டினர் பாராட்டும் அளவுக்கு சென்றுவிட்டது. கோக்ககோலாவின் உரிமையாளர் , எலும்பிச்சை சர்பத் விற்றவர் என்ற உண்மையை கட்னுபிடித்து , அதற்க்கு டாக்டரேட் பட்டம் வாங்கிக்கொண்டார்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X