இதற்கு ஒரு வழி காணுங்க பயணிப்போரை பயமுறுத்தும் முள் செடிகள் பராமரிப்பின்றி ரோடு வரை படரும் அவலம்| Dinamalar

தமிழ்நாடு

இதற்கு ஒரு வழி காணுங்க பயணிப்போரை பயமுறுத்தும் முள் செடிகள் பராமரிப்பின்றி ரோடு வரை படரும் அவலம்

Added : ஜூன் 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

வத்திராயிருப்பு:மாவட்டத்தில் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருவதால் ரோடுகளின் இருபுறமும் முள்செடிகள் வேகமாக படர்ந்து வளர்கின்றன. மாதக்கணக்கில் பராமரிப்பில்லாமல் விடப்பட்டதால் ரோட்டின் மையப்பகுதிவரை நீண்டு பயணிகளை பாடாய்ப்படுத்துகிறது.
மாவட்டத்தில் நெடுஞ்சாலை தொடங்கி கிராம சாலைகள் வரை அனைத்து பகுதிகளிலும் ரோடு போடப்பட்டதோடு சரி. கடந்த ஓராண்டுக்கு மேலாக எவ்வித பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளவில்லை. ரோட்டில் வளரும் செடி, கொடிகள், மரக்கிளைகளை சாலைப் பணியாளர்கள் வெட்டி போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் பாதுகாத்து வந்தனர். தற்போது பெரும்பாலான ரோடுகள் தனியார் பராமரிப்பில் விடப்பட்டு விட்டன. கான்ட்ராக்ட் எடுத்த தனியார் நிறுவனமோ புதிய ரோடு, பாலம் கட்டுவதில்தான் முனைப்புடன் உள்ளது. பராமரிப்பு பணிகளை செய்வதில்லை. இதனால் ரோட்டின் இருபுறமும் சீமைக்கருவேலம், புதர்களும் மண்டிக் கிடக்கின்றன. பஸ், வேன், கார்களில் செல்லும் பயணிகளை முள்செடிகள் 'பதம்' பார்க்கின்றன. முள்ளில் சிக்கும் இருசக்கர வாகனங்கள் பஞ்சராகி விடுகின்றன. இதனால் பயணிகள் பாதிக்கும் நிலை தொடர்கிறது.

முகத்தை கிழிக்குது
கிராம ரோடுகள் கேட்பாரின்றி கிடக்கின்றன. முள்ளை வெட்டுவதற்கு கூட நாதியற்ற நிலைதான் அனைத்து பகுதிகளிலும் உள்ளது. தனியார் நிறுவனங்களை தட்டிக்கேட்க யாருக்கும் தைரியம் இல்லை. முகத்தில் கிழிக்கும் முள்செடிகளால் பயணிகள் படாதபாடுபடுகின்றனர்.
-- அண்ணாத்துரை, தம்பிபட்டி

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை