Congress-JD(S) coordination committee to meet in Bengaluru on June 14 | நாளை காங்., மஜத கட்சிகளின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்| Dinamalar

நாளை காங்., மஜத கட்சிகளின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

Added : ஜூன் 13, 2018 | கருத்துகள் (9)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
 காங்கிரஸ்,மதச்சார்பற்ற ஜனதா தளம், ஒருங்கிணைப்பு குழு கூட்டம்,  கர்நாடக தேர்தல் 2018, முதல்வர் குமாரசாமி,  டேனிஷ் அலி, துணை முதல்வர் பரமேஷ்வரா ,முன்னாள் முதல்வர் சித்தராமையா , 
Congress-Secular Janata Dal, Coordination Committee Meeting, Congress, Karnataka Election 2018, CM Kumarasamy, Danish Ali, Deputy Chief Minister Parameshwara, former Chief Minister Siddaramaya,

புதுடில்லி: காங்கிரஸ் ,மஜத கட்சிகளின் முதல் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நாளை கூடுகிறது.
நடந்து முடிந்த கர்நாடக மாநில தேர்தலில் ஒருவரை ஒருவர் எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் மஜத கட்சிகள் தேர்தல் முடிவுக்கு பிந்தைய கூட்டணியாக ஆட்சி அமைத்துள்ளது. முதல்வராக மஜத தலைவர் குமாரசாமியும், துணை முதல்வராக காங்கிரசை சேர்ந்த பரமேஷ்வரா ஆகியோர் உள்ளனர்.
தேர்தல் பிந்தைய கூட்டணியாக ஆட்சி அமைத்த போதிலும் இரு கட்சிகளிடையே இலாகாக்களை பங்கிடுவதில் கருத்து வேறுபாடு உருவானது. இதனையடுத்து கருத்து வேறுபாடுகளை களைய ஒருங்கிணைப்பு குழுவை அமைப்பது என இரு கட்சிகளிடையே முடிவு செய்யப்பட்டது.
இது குறித்து மஜதவின் செயலாளர் டேனிஷ் அலி கூறி இருப்பதாவது:நாளை 14-ம் தேதி மாலை 4 மணி அளவில் இரு கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்ளும் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் முதல்வர் குமாரசாமி, துணை முதல்வர் பரமேஷ்வரா ,முன்னாள்முதல்வர் சித்த ராமையா மற்றும் இரு கட்சிகளின் சார்பில் தலா ஐந்து உறுப்பினர்க் கலந்து கொள்ள உள்ளனர்.
கூட்டத்தில் முக்கிய பிரச்னைகள் மற்றும் பொதுவான குறைந்த பட்ச திட்டம் குறித்து விவாதிக்கப்ட உள்ளது. மேலும் மாநிலங்களில் உள்ள பெரும்பாலான நிறுவனங்களுக்கு தலைவர்கள் நியமனம் செய்யப்படாமல் உள்ளது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
krishna - chennai,இந்தியா
13-ஜூன்-201812:36:02 IST Report Abuse
krishna தமிழன் தமிழன் என கூவி திரியும் கடைந்து எடுத்த திருடர்கள் சுடலை சீமான் பாரதிராஜா மற்றும் திருநாவுக்கரசரும் மிக பெரிய திருடன் திருமாவளவனும் காவேரி பிரச்னை பற்றி புதிய அரசு கர்நாடகாவில் வந்த பிறகு வாயே திறக்கவில்லை. ஆணையத்துக்கு இன்னும் கர்நாடக மெம்பரை நியமிக்கவில்லை. இந்த திருடர்கள் வாயே தீர்க்க மாட்டார்கள் என்ன என்றால் இருப்பது அங்கு ஆள்வது காங்கிரஸ் குமாரசுவாமி கேடு கெட்ட கூட்டணி.குமாரசாமி ஒரு சொட்டு தண்ணீர் கூட கொடுக்கமாட்டேன் என கூவி திரியும் ஆள்.மோடி சென்னை வந்த பொது இந்த திருடர்கள் என்ன ஆட்டம் போட்டார்கள்.இப்போது பத்திரிகை நண்பர்கள் ஆகட்டும் இந்த திருட்டு கூட்டம் ஆகட்டும் சிலேண்ட் மொட்டுக்கு பொய் விட்டார்கள்.மாற மண்டை தமிழனுக்கு இது PURIYADHU
Rate this:
Share this comment
Cancel
13-ஜூன்-201811:46:22 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் பேசாமல் காங்கிரெஸ்ஸை குமாரசாமி கட்சியுடன் இணைத்துவிடுங்கள். துணை முதல்வர் பதவி அடுத்த 5 ஆண்டுகளுக்கு நிச்சயம்.
Rate this:
Share this comment
Cancel
C.Elumalai - Chennai,இந்தியா
13-ஜூன்-201811:25:41 IST Report Abuse
C.Elumalai பெவிக்காலில் எல்லாம் ஒட்டாது, வெல்டிங் பண்ணா ஒருவேளை, நிக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X