நிலத்தடி நீர் மட்டம் குறைந்ததால் பம்ப் செட்டுகள்...இயங்கவில்லை ! குறுவை, சொர்ணவாரி நடவு செய்த விவசாயிகள் அவதி| Dinamalar

தமிழ்நாடு

நிலத்தடி நீர் மட்டம் குறைந்ததால் பம்ப் செட்டுகள்...இயங்கவில்லை ! குறுவை, சொர்ணவாரி நடவு செய்த விவசாயிகள் அவதி

Added : ஜூன் 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
நிலத்தடி நீர் மட்டம் குறைந்ததால் பம்ப் செட்டுகள்...இயங்கவில்லை ! குறுவை, சொர்ணவாரி நடவு செய்த விவசாயிகள் அவதி

கடலுார்;கடலுார் மாவட்டத்தில் மழை பெய்வது குறைந்து வருவதால் நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்திற்கு சென்றுள்ளது. இதனால் மின் மோட்டார் இயங்காததால் போர்வெல்லை நம்பி நடவு செய்த விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் பருவமழை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. பல இடங்களில் பருவம் தவறிய மழை பெய்து வருகிறது. தொடர் மழை இல்லாததால் பெய்யும் மழை முழுவதும் கடலுக்கு சென்று கலந்து விடுகிறது. மழை, வெள்ளநீரை சேமித்து வைக்க கர்நாடகா மாநிலம் போன்று இயற்கையாக மலை சூழல் இல்லாததால் அவ்வளவு தண்ணீரும் கடலுக்கே சென்று சேருகிறது.
இதனால் ஆண்டுதோறும் நிலத்தடி நீர்மட்டம் கீழ்நோக்கி இறங்குவது மீண்டும் உயருவதில்லை. ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவது குறைந்து விட்டது. கடலுார் மாவட்டத்தில் தென்பெண்ணையாறு, கெடிலம், மணிமுக்தாறு, பரவனாறு, கொள்ளிடம் ஆறுகள் இருந்தும் தொடர் தண்ணீர் வரத்து இல்லாததால் நீர்மட்டம் உயரவில்லை.
காவிரி நீரை நம்பி விவசாயம் செய்ய முடியாத விவசாயிகள் பலர் நிலத்தடி நீரை பயன்படுத்தி நடவு செய்து வருகின்றனர். குமராட்சி, கம்மாபுரம், கடலுார், பண்ருட்டி பகுதியில் அதிகளவு நிலத்தடி நீரை பயன்படுத்தி விவசாயம் செய்து வருகின்றனர். தற்போது கோடை முடிவுறும் தருவாயில் உள்ள நிலையில் மழையே பெய்யாததால் நிலத்தடிநீர் அதலபாதாளத்திற்கு சென்றுள்ளது.இதனால் கடந்தாண்டு விருத்தாசலம், கம்மாபுரம் பகுதியில் 70 முதல் 75 அடியில் இருந்த நீர்மட்டம் தற்போது 90 முதல் 95 அடிவரை சென்றுள்ளது. விவசாயிகள் சரிவர கவனிக்காமல் விட்டதால் நீர்மூழ்கி மோட்டார்கள் காயில் எரிந்து போகும் நிலை தொடர்ந்து வருகிறது. மோட்டாரை பறிகொடுத்த விவசாயிகள் காயில் கட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டதோடு, இறங்கிய நீர்மட்டம் வரையில் பைப்பை இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.அப்பகுதியில் நீர்மட்டத்தை உயர்த்த நெய்வேலியில் எடுக்கப்படும் உபரி தண்ணீரை சென்னைக்கு அனுப்பியது போக, மீதியுள்ள தண்ணீரை மாவட்டத்தின் மேற்கு பகுதியில் உள்ள விருத்தாசலம், நல்லுார், மங்களூர், கம்மாபுரம் ஒன்றியத்தின் ஒரு பகுதியில் உள்ள 250க்கும் அதிகமான கிராமப் பகுதிகள் பயன்பெறும் வகையில் திருப்பி விட வேண்டும் என கடலுார் மாவட்ட உழவர்மன்ற கூட்டமைப்பு தலைவர் கார்மாங்குடி வெங்கடேசன் அரசு செயலருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.கம்மாபுரம் அருகே உள்ள தொமூரைச் சேர்ந்த செந்தில்குமார் கூறுகையில், '400 அடியில் உள்ள போர்வெல் முழுவதும் பம்ப் செட் இயங்கவில்லை. அதைவிட ஆழமுள்ள 500 அடி போர்வெல் மட்டுமே இயங்குகிறது. இதனால் கூடுதல் திறனுள்ள மின் மோட்டார் மாற்ற வேண்டியுள்ளது. அதனால் மின்சாரம் பற்றாக்குறை ஏற்பட்டு மோட்டார் காயில் போகிறது' என்றார்.எப்படி இருந்தாலும் இயற்கை மழை கை கொடுத்தால்தான் குறுவை, சொர்ணவாரி பட்டத்தில் நடவு செய்த விவசாயிகள் அறுவடை செய்ய முடியும்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை