சென்னை - சேலம் பசுமை சாலைத்திட்டம்: மத்திய அமைச்சர் மகிழ்ச்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சென்னை - சேலம் பசுமை சாலைத்திட்டம்: மத்திய அமைச்சர் மகிழ்ச்சி

Added : ஜூன் 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருவாரூர்: ''சென்னை சேலம் பசுமை சாலைத்திட்டம், தமிழகத்துக்கு கிடைத்த வரப்பிரசாதம்,'' என, மத்திய இணை அமைச்சர், பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.

திருவாரூரில், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: சென்னை சேலம் பசுமை சாலைத்திட்டத்தை வேண்டும் என்றே, பல இயக்கங்கள் எதிர்க்கின்றன. தமிழக வளர்ச்சிக்கு தடையாக உள்ள இவர்களை, மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். சென்னை சேலம் பசுமை சாலைத்திட்டம், தமிழகத்திக்கு கிடைத்த வரப்பிரசாதம். தி.மு..க., ஆட்சியில், இதுபோன்ற புதிய திட்டங்கள் எதும் கொண்டு வர முயற்சிக்கவில்லை. எனவே, இந்த திட்டத்தை தி.மு.க.,வினர் எதிர்க்கின்றனர். காவிரி பிரச்னைக்கு நிரந்தர தீர்வாக, ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காவிரி ஆணையம் செயல்பட, கர்நாடக அரசு, தன் பிரதிநிதிகளை அனுப்பாமல் உள்ளது. இதனால், ஆணையம் செயல்பாடு முழுமை பெறாமல் உள்ளது. தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின், தங்களது கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியுடன் பேசி, கர்நாடகாவில் இருந்து பிரதிநிதியை அனுப்பச்சொல்ல வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை