மகளுக்கு பாலியல் தொல்லை: தந்தை கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மகளுக்கு பாலியல் தொல்லை: தந்தை கைது

Added : ஜூன் 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுக்கோட்டை: புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் ஜாபர் அலி, 45. இவரது, 15 வயது மகள், அங்குள்ள பள்ளியில் 10ம்வகுப்பு படித்து வந்தார். தந்தை ஜாபர் அலி, தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், எனவும் அந்த சிறுமி, நேற்று முன் தினம், மாவட்ட எஸ்.பி.,யிடம் புகார் கொடுத்தார். எஸ்.பி., உத்தரவுப்படி, மகளிர் போலீசார் நடத்திய விசாரணையில், ஜாபர் அலி, தன் மனைவி இருக்கும் போதே, மூத்த மகளிடம் பலமுறை சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்திருக்கிறார். கடந்த ஓராண்டுக்கு முன், அவரது மனைவி இறந்து விட்டதால், ஜாபர்அலி, பள்ளியில் படிக்கும் மகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளது தெரிந்தது. போலீசார் விசாரணை நடத்தி, தஞ்சாவூர், சாலியமங்கலம் தெருவில் மறைந்திருந்த ஜாபர் அலியை கைது செய்து, நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை