டெல்டா விவசாயிகள் துக்க தினம் அனுசரிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

டெல்டா விவசாயிகள் துக்க தினம் அனுசரிப்பு

Added : ஜூன் 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நாகப்பட்டினம்: டெல்டா பகுதிகளில், ஏழு ஆண்டுகளாக, குறுவை சாகுபடி பொய்த்துப் போனதால், துக்க நாளாக அனுசரித்து, மெழுகுவர்த்தி ஏற்றி விவசாயிகள் அஞ்சலி செலுத்தினர். குறுவை சாகுபடிக்கு, மேட்டூர் அணையில் இருந்து, ஜூன் 12ல், தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால், ஏழு ஆண்டுகளாக தண்ணீர் திறக்கப்படாததால், டெல்டா விவசாயிகளுக்கு, 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. குறுவை பொய்த்துப் போனதால், ஆண்டுதோறும், 1.50 லட்சம் விவசாயிகளும், மூன்று லட்சம் விவசாய தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். வாழ்வாதாரத்தை இழந்துள்ள தங்களுக்கு, ஏக்கருக்கு, 20 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும், அனைத்து வங்கிகளிலும் அனைத்து விவசாயக் கடன்களையும் அரசு தள்ளுபடி செய்ய வேண்டும், 100 நாள் வேலைதிட்டத்தை செயல்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், குறுவை சாகுபடிக்கு, ஜூன் 12ல் தண்ணீர் திறக்காததை, காவிரி விவசாயிகள் துக்க நாளாக அனுசரித்து, மெழுகுவர்த்தி ஏற்றி, ஒப்பாரி வைத்து அஞ்சலி செலுத்தினர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை