வாக்கூர் கிராமத்தில் பா.ஜ.,வினர் பிரசாரம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

வாக்கூர் கிராமத்தில் பா.ஜ.,வினர் பிரசாரம்

Added : ஜூன் 13, 2018
Advertisement

விக்கிரவாண்டி;விக்கிரவாண்டி ஒன்றிய பா.ஜ., சார்பில், ஐம்பெரும் விழா நடந்தது.விக்கிரவாண்டி அடுத்த வாக்கூர் கிராமத்தில், பா.ஜ., சார்பில் துாய்மை இந்தியா திட்டம், கட்சி கொடியேற்று விழா, தெருமுனை பிரசாரம், முதியோர்களைசந்தித்தல் ஆகிய ஐம்பெரும் விழா நடந்தது. ஒன்றிய தலைவர் ரவி தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச் செயலாளர் ஜெயக்குமார் முன்னிலைவகித்தார். மாவட்ட தலைவர் தனசேகரன் வரவேற்றார்.கோட்ட இணைபொறுப்பாளர் அருள், கட்சி கொடியேற்றி வைத்து, துாய்மை இந்தியா திட்டத்தை துவக்கி வைத்து, தெருமுனைபிரசாரம் செய்தார். பின்னர், கிராமத்திலுள்ள முதியோர்களை சந்தித்து, அவர்களுக்கு பிஸ்கட், பிரட் ஆகிய உணவுகளைவழங்கினர்.கோட்ட வணிகர் அணி பொறுப்பாளர் பாலு, மாவட்ட துணை தலைவர் பாண்டியன், அறிவு சார்அணி செயலாளர் இளவரசன், ஒன்றியநிர்வாகிகள் அங்காளன், சாது சுந்தர்சிங், ஏழுமலை, சம்பத் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிர்வாகி குக சரவணன் நன்றி கூறினார்.

Advertisement