சிவராஜ் விழாவில் எம்.எல்.ஏ., சரவெடி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

சிவராஜ் விழாவில் எம்.எல்.ஏ., சரவெடி

Added : ஜூன் 13, 2018
Advertisement

ரிஷிவந்தியம் தொகுதியை கோட்டையாக வைத்திருந்தவர் சிவராஜ். இவர் காங்கிரசில் இருந்து த.மா.கா.,விற்கு தாவி, அ.தி.மு.க.,வை அடுத்து தற்போது அ.ம.மு.க.,வில் உள்ளார். அக்கட்சியில் 4ம் தேதி அமைப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டது. அதற்கான விழா 10ம் தேதி நடந்தது. தொண்டர்கள் சகிதமாக தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்தார் சிவராஜ்.இந்த நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட செயலாளர் ஞானமூர்த்தி, கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ.,வும், தெற்கு மாவட்டச் செயலாளருமான பிரபு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். விழாவில் பேசிய பிரபு எம்.எல்.ஏ.,'நான் லட்சங்களுக்கு ஆசைப்பட்டு வரவில்லை. லட்சியத்திற்காக வந்திருக்கிறேன். நான் ஆளும் கட்சியில் இருந்திருந்தால் பல லட்சங்கள் சம்பாதித்திருக்கலாம். சசிகலா தான் எனக்கு தேர்தலில் சீட் கொடுத்தார். எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்க வழக்கு தீர்ப்பு வந்ததும், இந்த ஆட்சி கலைக்கப்பட்டு தினகரன் தலைமையில் புதிய ஆட்சி அமையும்' என்றதும் தொண்டர்கள் ஆரவாரமாக கைத்தட்டினர்.

Advertisement