ஜிஎஸ்டியில் பெட்ரோல்: மத்திய அரசு மீது ராகுல் தாக்கு| Dinamalar

ஜிஎஸ்டியில் பெட்ரோல்: மத்திய அரசு மீது ராகுல் தாக்கு

Added : ஜூன் 13, 2018 | கருத்துகள் (33)
Advertisement
காங்கிரஸ், ராகுல், பெட்ரோல் விலை, ஜிஎஸ்டி, பாஜக, ஆர்எஸ்எஸ், மத்திய அரசு, ராகுல் காந்தி, Congress, Rahul, Petrol Price, GST, BJP, RSS, Central Government, Rahul Gandhi,

மும்பை: பெட்ரோல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர மத்திய அரசுக்கு விருப்பமில்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல் கூறியுள்ளார்.


விருப்பமில்லை


மும்பையில் நிருபர்களிடம் கூறியதாவது: பெட்ரோல் விலை சாமான்ய மக்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அதை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என நாங்கள் கேட்கிறோம். ஆனால், அரசுக்கு அதில் விருப்பமில்லை.
மகா கூட்டணி அமைப்பது அரசியலுக்காக அல்ல. அது மக்களின் எண்ணம். மக்கள் அனைவரும் பா.ஜ., ஆர்எஸ்எஸ்க்கு எதிராக உள்ளனர். சமூகத்தில் பணக்காரர்களுக்காக மட்டுமே அரசு உழைக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement