சிறைகளில் ஜாமர் கருவிக்கு நிதி: முதல்வர்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

சிறைகளில் ஜாமர் கருவிக்கு நிதி: முதல்வர்

Added : ஜூன் 13, 2018
Advertisement

சென்னை: சட்டசபையில் 110வது விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு:விழுப்புரம், மணப்பாைறை சிப்காட்டில் உட்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.148.5 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

தேனி ஆண்டிபட்டியில் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இரண்டு குடியிருப்புகள் 6 கோடி ரூபாயில் கட்டப்படும்.

திருப்பூர் பல்லடத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடம் 5.20 கோடி ரூபாயில் கட்டப்படும்

கன்னியாகுமரி குற்றவியல் நீதிமன்றத்தில் ரூ.4 கோடியில் புதிய கட்டடம் கட்டப்படும். சிறைகளில் மொபைல் போன் பயன்பாட்டை குறைக்க ஜாமர் கருவி பொருத்ததற்காக ரூ.10.10 கோடி ஒதுக்கப்படும்.

மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் பணிபுரியும் சிறப்பு ஆசிரியர்களுக்கான சம்பளம் ரூ.10 ஆயிரத்திலிருந்து ரூ.14 ஆயிரமாக அதிகரிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement