மருத்துவ செலவால் ஏழையாகும் இந்தியர்கள்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

மருத்துவ செலவால் ஏழையாகும் இந்தியர்கள்

Added : ஜூன் 13, 2018 | கருத்துகள் (64)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
மருத்துவ செலவு, இந்தியர்கள், ஏழை, பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல், புற்றுநோய், இதய நோய்கள் , 
Medical expenses, Indians, poor, British medical journal, cancer, cardiovascular diseases,

புதுடில்லி: மருத்துவ செலவு காரணமாக, ஏறக்குறைய 5.5 கோடி இந்தியர்கள் கடந்த ஒரே ஆண்டில் ஏழை ஆகி உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல், புற்றுநோய், இதய நோய்கள் மற்றும் சர்க்கரை நோய்களுக்காக இந்தியர்கள் செலவிடும் தொகை குறித்து ஆய்வு ஒன்றை நடத்தியது. இதில், மருத்துவ செலவுகளுக்காக அதிக அளவில் நிதி செலவிடுவதால் ஒரே ஆண்டில் 5.5 கோடி இந்தியர்கள் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 3.8 கோடி பேர் வறுமை கோட்டிற்கு கீழ் தள்ளப்பட்டுள்ளனர்.


மருந்துக்கு அதிக செலவு:


2011-12ம் ஆண்டு முதல், மக்களின் மருத்துவ செலவின சுமையை குறைப்பதற்காக அரசு காப்பீட்டு திட்டங்கள் பலவற்றை நடைமுறைப்படுத்தி வருகிறது. இருப்பினும் மருந்து, மாத்திரைகளுக்காக செலவிடப்படும் தொகை அதிகமாக உள்ளது. அத்தியாவசிய மருந்துகளின் விலையை அரசு குறைத்து வந்தாலும், மருந்துகளின் செலவுகள் மருத்துவமனைகள் சார்ந்ததாக இருப்பதால், இந்தியர்களின் மருத்துவ சுமையை குறைப்பது சவாலாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (64)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nakkal Nadhamuni - Chennai,இந்தியா
14-ஜூன்-201812:12:23 IST Report Abuse
Nakkal Nadhamuni மருத்துவம், கல்வி, சுகாதாரம்... இவைகள் எப்பொழுது வியாபாரமானதோ அப்பொழுதே எல்லாம் கெட்டு விட்டது... நம்மிடம் இருக்கும் பெருமைகளை மறந்து, மேற்கத்திய நாடுகளில் இருக்கும் நல்லவற்றை எடுத்துக்கொள்ளாமல், எதையும் ஆராயாமல் அவர்களிடம் இருப்பதை அப்படியே எடுத்துக்கொள்வதால் வரும் விளைவுகள் இன்று வரும் நோய்கள்... நமது கல்வி முறையில் பெரிய மாற்றம் வேண்டும்... உடல் சுகத்தையே பார்த்து வாழ்ந்தால் இதுதான் நடக்கும்... உடலையும் ஆத்மாவையும் சமமாக பார்த்துக்கொள்ளவேண்டும்..
Rate this:
Share this comment
Cancel
14-ஜூன்-201811:32:31 IST Report Abuse
ருத்ரா ஓரளவு தரமான உணவு, சுகாதாரமான இருப்பிட வசதி, நல்ல குடிநீர் கிடைத்தால் நோய்களால் பாதிக்கப்பட மாட்டார்கள். வெறும் சிராய்ப்பு காயத்திற்கு கூட full Scan பண்ண சொல்வது ஆம்புலன்ஸ் வசதி மனிதாபிமான அடிப்படையில் தரமறுப்பது Birth முதல் Death வரை certificate ற்கு பணம் கேட்பது இதை பார்க்கும் போது நோயே மேல் என்ற நிலைக்கு தள்ளப்படுகறார்கள் என்பது தான் சாத்தியம் சத்தியம்.
Rate this:
Share this comment
Cancel
sridhar - Chennai,இந்தியா
14-ஜூன்-201808:04:55 IST Report Abuse
sridhar வீதியோர டாக்டர் கூட பீஸை இஷ்டத்திற்கு ஏற்றிவிட்டார்கள். கட்டாய இன்ஜெக்ஷன் வேற. ஒரு சாதாரண நோய்க்கு கூட இன்று 400 , 500 ரூபாய் செலவு.
Rate this:
Share this comment
Cancel
சீனு. கூடுவாஞ்சேரி. என்ன உடற்பயிற்சி செய்தாலும் புற்றுநோய் போன்ற கொடிய நோய்களை தவிர்க்க முடியாது. அது ஆண்டவன் நமது முற்பிறவியில் செய்த தவற்றுக்கு அளிக்கும் தண்டனை.
Rate this:
Share this comment
Cancel
P R Srinivasan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
14-ஜூன்-201806:04:39 IST Report Abuse
P R Srinivasan உண்ணும் உணவிற்கு ஏற்ப உடல் உழைப்பு தேவை. பெரிய நகரங்களில் குழந்தைகள் விளையாடுவது என்பதே குறைந்து விட்டது. உடல் பருமன் சிறு வயதிலேயே பிரச்சனை தர ஆரம்பிக்கிறது. உடல் பருமன் பல வியாதிகளுக்கு விதை விதைக்கிறது. இங்குள்ள மருத்துவர்களுக்கும் ஒரு நெறிமுறை இல்லாமல் போய்விட்டது. பணத்திற்காக மக்களின் உடல் நலத்தோடு விளையாடுகிறார்கள். ஒரு நோயாளியின் உடல் நல ஆவணங்கள் சரியாக பராமரிக்க படுவதில்லை. டிஜிட்டல் இந்தியாவின் முதல் முன்னுரிமை மக்களின் உடல் நல ஆவணங்களை சரியாக பராமரிப்பதற்காக இருக்கவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
B.s. Pillai - MUMBAI,இந்தியா
14-ஜூன்-201804:24:13 IST Report Abuse
B.s. Pillai cleanliness is the first criteria for good health. Then the food habits. When we were children, we did not have vitamin ts , Boost etc. We were eating simple food and vegis. The trend changed to Fast Food and with it brought all new diseases. We go back to stone age, as far as food is concerned and we will be newly born without disease. The Central Government had very drastically reduced the cost of life saving medicines and proceedures. AYUSH is the new mantram. The cost of a stent used for heart blocks , which was 1.25 Lakhs when I underwent the Angioplasty, is now available for 8000-15000 only. Knee transplantation was costing 2-3Lakhs, now hardly 22000/= The Chemists who were charging the MRP for us is now ready to give 10-20% discount on the cost of medicines. In Coimbatore, I got 35% discount for all medicines. The present Budget is for the health of the poor, more than 50crore public will be covered by Medical Insurance. it was P.C and Dr.MMS who introduced foreign Insurance companies in India. They are looting us. None of these foreign companies paid the claim, but always rejected the claims of poor. Whereas Indian Insurance company General Ins. had always been fair in deciding the claims of its customers. We are Indians andl let us support Indian Insurance companies which obey rules and the rules of IRDA Authority.
Rate this:
Share this comment
Cancel
Mahendra Babu R - Chennai,இந்தியா
14-ஜூன்-201804:02:02 IST Report Abuse
Mahendra Babu R தினமும் அல்லது வாரத்திற்கு நான்கு நாட்களாவது உடற்பயிற்சி செய்யுங்கள். மனதுக்கும் உடலுக்கும் சம்பந்தம் உள்ளது. அதனால் எந்த ஒருவிஷயத்தையும் தலையில் ஏற்றி கொண்டு குழம்பாதீர்கள். இது tension ஏற்றிவிடும். நீங்கள் யோசித்துப் பார்த்தால் 2 வருடம் முன்பு இருந்த பெரிய பிரச்சனை இப்போது இருந்த இடம் தெரியாமல் போயிருக்கும். ஆக பிரச்சனைகள் என்பது வாழ்க்கையில் தற்காலிகமானது என்பதை உணருங்கள். மனதில் எப்போதும் அமைதியை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். உடற்பயிற்சிக்கு பின் ஒரு பத்து நிமிடம் கண்மூடி எதையும் நினைக்காமல் அமர்ந்திருக்கவும். விளம்பரம் செய்யப்படும் உணவுப்பொருள்களை வாங்கி சாப்பிடாதீர்கள். முடிந்தவரை வீட்டிலேயே சமைத்து சாப்பிடுங்கள். இனிப்பு, உப்பு, காரம், துவர்ப்பு, புளிப்பு, கசப்பு ஆகிய ஆறு சுவைகளும் உணவில் போதுமான அளவு கலந்திருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். அணைத்து விதமான காய்கறிகள் பழங்கள் எடுத்துக்கொள்ளுங்கள். தாகம் எடுத்தால் மட்டும் தேவையான அளவு (இது மனிதனுக்கு மனிதன் மாறுபடும்) தண்ணீர் குடியுங்கள். இயற்கை உபாதைகளை அடக்காதீர்கள். மாத்திரை போடாமல் 7 அல்லது 8 மணி நேர இரவு தூக்கத்திற்கு பழகுங்கள். தலைவலி, ஜுரம், வாந்தி, பேதி என்று சின்ன சின்ன விஷயங்களுக்கு மாத்திரை போடாதீர்கள். இது பெரும்பாலும் கஞ்சி, கஷாயம் வைத்து குடித்துவிட்டு நன்றாக ஓய்வு எடுத்தால் தானாகவே சரியாகிவிடும். ஓரிருநாள் பொறுத்து பார்த்து சரியாகவில்லை என்றால் மருத்துவரிடம் செல்லவும். சொந்த அனுபவம் பின்வருமாறு - சொல்ல சொல்ல கேட்காம அதிக அளவு உப்பு, (மருத்துவர் சொன்னதை விட) அளவுக்கு அதிகமா சர்க்கரை நோய் மாத்திரைகள், அவ்வப்போது வலி மாத்திரைகள் சாப்பிட்டதன் விளைவு, இன்று என் தந்தை (70 வயது) சிறுநீரகம் செயலிழந்து சொல்லொண்ணா துயரை அனுபவித்து வருகிறார். நான் தான் அருகிருந்து கவனித்து வருகிறேன். வாரமிருமுறை dialysis, மருந்து மாத்திரை என்று எப்படியும் மாதத்திற்கு 35 ஆயிரம் வரை வந்துவிடும் என்னதான் அலுவலகத்தில் parental insurance இருந்தாலும் வருடத்திற்கு 3 லட்சம் வரைதான் கொடுப்பார்கள், அதுவும் 70 அல்லது 80 சதவீதம்தான் claim செய்ய முடியும். சிறுநீரக செயலிழப்பு நோயாளிகள் மிக எளிதில் நோய்வாய்ப்பட்டு விடுவார். சிறிய ஜலதோஷம், ஜுரம் கூட ICU வில் படுக்கவைத்துவிடும். அதுமட்டுமில்லாமல் dialysis tube இல் ரத்தம் வரவில்லை, நரம்பு சுருங்கி விட்டது என்று சின்ன சின்ன அறுவை சிகிச்சைகள் வேறு, இதில் அவருக்கும் உடல் அவதி, insurance அளவும் ஆறு மாதத்திலேயே காலியாகிவிடும், அப்புறம் முழுவதும் கையில் இருந்துதான் செலவு செய்ய வேண்டும். ஒரு நாளைக்கான அளவு 750 மில்லி - நீர் ஆகாரம் (தண்ணீர், டீ, காபி, சாம்பார், ரசம் எல்லாம் சேர்த்து) இதை தாண்டி விட்டால், மூச்சு திணறல் வந்துவிடும், கை கால்கள் வீங்கிவிடும், உடல் எடை ஏறி நடக்க முடியாது. கொஞ்சம் மீறினால் பாதி நினைவு இழந்து உளற ஆரம்பித்து விடுவார்கள். குறிப்பிட்ட உணவை மட்டும்தான் சாப்பிடவேண்டும் என்று கட்டுப்பாடுகள் வேறு. இரவில் தூக்கம் வராமல் அமர்ந்து கொண்டே இருப்பார், பகலில் தூங்குவார். நமக்கு பெரிய நோய் எதுவும் வராத வரைதான் இந்த உலகம் சொர்க்கம். இப்படி ஏதும் நோய் வந்து விட்டால் இந்த பூமி தான் நரகம். நோய்களில் இருந்து தப்பித்துக்கொள்ள, இந்த உலகில் கடைசி நாள் வரை நோயில்லாமல் வாழ, ஆரம்பத்தில் சொன்ன பழக்கவழக்கங்களை கடைபிடியுங்கள். இயற்கையும் நம் முன்னோரும் நமக்கு துணையிருப்பர் நன்றி
Rate this:
Share this comment
Mahendra Babu R - Chennai,இந்தியா
14-ஜூன்-201819:42:49 IST Report Abuse
Mahendra Babu Rமுக்கியமாக, நேரம் பார்த்து சாப்பிடாமல் நன்றாக பசித்த பின் சாப்பிடுங்கள். பசி இல்லாதபோது சாப்பிடவேண்டாம். அதேபோல் பசிக்கும்போது சாப்பிடாமல் இருக்கவும் வேண்டாம். பசி, தாகம் இவையெல்லாம் நம் உடல் நம்மிடம் பேசும் மொழி - அதை உணர்ந்து நடந்தாலே போதும் முக்கால்வாசி நோய்கள் நம்மை அண்டாது...
Rate this:
Share this comment
Cancel
Needhiyin Pakkam Nil - Chennai,இந்தியா
14-ஜூன்-201802:55:57 IST Report Abuse
Needhiyin Pakkam Nil அதற்கு பெயர் மருத்துவ காப்பீடு கிடையாது மருத்துவ மோசடி, காப்பீட்டை கிளைம் பண்றதுக்குள்ள இருக்கிற பாதி உயிரும் போய்டும். கல்வியையும் மருத்துவத்தையும் இலவசமாக நான் கொடுக்கிறேன் என்று சொல்கின்ற கட்சியை நாம் ஆட்சிக்கு வர விடாமல் பார்த்து கொள்கிறோம் ஆனால் மனித உயிரை வைத்து விலை பேசி வியாபாரம் செய்யும் கார்ப்பரேட் அரசுகளை நாம் பதவியில் உட்கார வைக்கிறோம், அதனால தான் நாம் இந்த மாதிரி விலை கொடுத்து கொண்டிருக்கிறோம்.......
Rate this:
Share this comment
Cancel
Siva - Aruvankadu,இந்தியா
13-ஜூன்-201821:32:21 IST Report Abuse
Siva கடந்த ஏப்ரல்14.. 53 வயது முடிந்து விட்டது எனக்கு. இது வரைக்கும் எந்த பெரிய ஆஸ்பிடல் சென்றதில்லை. எப்போதாவது ஏற்படும் சிறு தொல்லை களுக்கு பொது மருத்தவரை மட்டும் ஆலோசனை கேட்பேன். உடல் உழைப்பு இன்றி ஓசி கஞ்சி அதாவது இலவசம் எதிர் பார்ப்பவர்கள் மருத்துவ செலவு செய்வது காலத்தின் கட்டாயம்.
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
13-ஜூன்-201821:15:05 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் வெளிநாட்டு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மருத்துவ காப்பீடு என்ற பெயரில் இந்தியாவுக்குள் படையெடுத்த போனதே, சில வருடங்களுக்கு முன்பே சொல்லியிருந்தேன். இந்தியாவில் இன்னும் சிறிது காலத்தில் நடுத்தர மற்றும் ஏழை மக்களிடமிருந்து மருத்துவவசதி பறிக்கப்படுகிறது என்று. அந்த கொள்ளையர்கள் தனது கோர முகத்தை காட்ட ஆரம்பித்து விட்டார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை