முட்டாளாக்கிய மக்கள்: சித்தராமைய்யா புலம்பல்| Dinamalar

முட்டாளாக்கிய மக்கள்: சித்தராமைய்யா புலம்பல்

Added : ஜூன் 13, 2018 | கருத்துகள் (68)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
சித்தராமைய்யா, கர்நாடக மக்கள், தோல்வி

மைசூரு : சமீபத்தில் நடந்து முடிந்த கர்நாடக சட்டசபை தேர்தலில், முன்னாள் முதல்வர் சித்தராமைய்யா சாமுண்டீஸ்வரி தொகுதியில் தோல்வி அடைந்தார். இருப்பினும் வருணா பகுதியில் மகனை வெற்றி அடைய வைத்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக சென்றார்.

இதற்கிடையில் மைசூருவில் தனது ஆதரவாளர்களிடம் பேசிய சித்தராமைய்யா, மக்கள் என்னை முட்டாளாக்கி விட்டனர். இதுவே போதும். நான் வருணா தொகுதியில் போட்டியிட்டிருந்தால் எளிதாக வெற்றி பெற்றிருப்பேன். நீங்கள் என்னை தோற்கடித்திருக்க மாட்டீர்கள். 2008 ம் ஆண்டு வருணா தொகுதியில் போட்டியிட்டு, வெற்றி பெற்று எதிர்க்கட்சி தலைவரானேன். 2013 ல் முதல்வரானேன்.

நான் 40 வருடங்களாக அரசியலில் உள்ளேன். 13 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளேன். எதற்காக மக்களும், கட்சி தலைவர்களும் என்னை அந்த தொகுதியில் இருந்து வெளியேற்றினார்கள் என தெரியவில்லை. ஊழல், லஞ்சம் இல்லாத நிலையான அரசை தந்தேன். ஏழை மக்கள் மீதே என் கவனம் இருந்தது. கர்நாடக மக்கள் பசியில் இருந்து விடுபட அன்னபாக்யா திட்டத்தை கொண்டு வந்தேன். 4 கோடி மக்களுக்கு இலவச அரிசி வழங்கினேன்.

ஆனால் இதை எந்த பா.ஜ., ஆளும் மாநிலமும் கொண்டு வரவில்லை. இருந்தும் மக்கள் காங்.,ஐ ஆதரிக்கவில்லை. சிறு சிறு காரணங்களுக்காக மக்கள் என்னை தோற்கடித்து விட்டனர். அம்பேத்கார், இந்திரா போன்ற பெரிய தலைவர்களே மக்களால் தோற்கடிக்கப்பட்டவர்கள் தான் என்றார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (68)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
anand - Chennai,இந்தியா
14-ஜூன்-201813:50:31 IST Report Abuse
anand மக்களை பிரிக்க நினைத்தாய்..விரட்டி அடித்து விட்டார்கள்
Rate this:
Share this comment
Cancel
S.BASKARAN - BANGALORE,இந்தியா
14-ஜூன்-201813:37:27 IST Report Abuse
S.BASKARAN தன்னை அம்பேத்கர் மற்றும் இந்திரா அவர்களை ஒப்பிட்டு அவர்களை அவமானப்படுத்துவதுபோல் உள்ளது.
Rate this:
Share this comment
Cancel
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
14-ஜூன்-201811:02:28 IST Report Abuse
pradeesh parthasarathy பிஜேபி , மற்றும் ரெட்டி சகோதரர்களின் பண பலத்துக்கு முன்னால் இவரால் தாக்குப்பிடிக்க முடியவில்லை என்பதே உண்மை ... இவரை தோற்கடிக்க வேண்டும் என்றே ஸ்ரீராமுலுவை இவர் நிற்கும் தொகுதியில் நிறக்கவைத்து பிஜேபி பெரும் அளவில் பணத்தை வாரி செலவு செய்தது ...
Rate this:
Share this comment
Cancel
Venki - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
14-ஜூன்-201809:25:38 IST Report Abuse
Venki இப்போதாவது திருந்துஇ மக்களை முட்டாள்கள் என்று நினைக்காதே
Rate this:
Share this comment
Cancel
Srikanth Tamizanda.. - Bangalore,இந்தியா
14-ஜூன்-201808:24:19 IST Report Abuse
Srikanth Tamizanda.. /கலைஞர் மற்றும் திமுக வினர் மீதான எல்லா குற்றச்சாட்டுகளும் பொய்கள் ஆதாரங்கள் இல்லாதவை என்று ஒவ்வொன்றாக களையப்பட்டு வருகின்றன. / இந்த கருத்தை முக குடும்பத்தினரோ அல்லது திமுக தொண்டர்களோ கூட நம்ப மாட்டார்கள்..
Rate this:
Share this comment
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
14-ஜூன்-201811:09:34 IST Report Abuse
Pugazh Vநம்ப அவசியமே இல்லை. அனைத்து நீதிமன்றங்களும் இதை செய்து வருவதால், நம்ப அவசியமில்லை. இன்று வியாழக் கிழமை என்பதை நம்ப வேண்டுமா என்ன? நம்பினாலும் நம்பாவிட்டாலும் இந்தியாவில் இன்று வியாழக் கிழமை தான். அது மாதிரி தான் இதுவும். ஜெயலலிதா மாதிரியோ லாலு மாதிரியோ எந்த ஊழலாவது நிரூபணம் ஆகி தண்டனை வழங்க முடிந்ததா ? இல்லை அல்லவா? அப்போ, இனியேனும் இந்த போலிக் குற்றச்சாட்டுகளை நிறுத்தலாமே. ஆனால் மாட்டேன் என்றாலும் பரவாயில்லைசொல்லிக் கொண்டே இருங்கள்....
Rate this:
Share this comment
Krish Sami - Trivandrum,இந்தியா
14-ஜூன்-201811:24:23 IST Report Abuse
Krish Samiநிரூபிக்க முடியாமல் குற்றம் செய்யும் ஆற்றலை புகழ் போன்றவர்கள் பாராட்டுகின்றனர் என்று எடுத்துக்கொள்ளுங்கள் சர்காரியாவே அந்த பாராட்டை கொடுத்திருக்கிறார் - உயர் திரு. கருணாநிதி அவர்கள் ஒரு விஞ்ஞான ஊழல்வாதி - என்று. ஆனால் அவர் வாரிசுகள் - குறிப்பாக கனிமொழி - மாட்டுவார்கள் என்றே தோன்றுகிறது....
Rate this:
Share this comment
Cancel
Idithangi - SIngapore,சிங்கப்பூர்
14-ஜூன்-201807:46:53 IST Report Abuse
Idithangi உன்னை பிடிக்கலை அதனால் மக்கள் தேர்ந்தெடுக்கவில்லை . அந்த வாட்ச் மேட்டரே பல பேரை கடுப்பேத்தி இருக்கும். போயி குமாரசாமி காலில் விழுந்து அமைச்சர் பதவியாவது கேட்டு வாங்கு.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-ஜூன்-201807:43:14 IST Report Abuse
Srinivasan Kannaiya எவ்வளவு நாள் மக்களை நீங்கள் ஏமாற்றி வந்தீர்கள்... இன்றுதான் உங்களை மக்கள் புரிந்து கொண்டு தகுந்த பரிசு கொடுத்திருக்கிறார்கள்..
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-ஜூன்-201807:42:17 IST Report Abuse
Srinivasan Kannaiya பல நாள் திருடன் ஒரு நாள் மாட்டுவான் என்பது மாதிரி இப்பொழுதான் மாட்டி இருக்கிறீர்கள்..
Rate this:
Share this comment
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
14-ஜூன்-201807:37:12 IST Report Abuse
Cheran Perumal பதிலுக்கு பத்தி, வெச்சு செய்யிறாங்க, எதிரும் புதிருமா போட்டியிட்டு தேர்தலுக்கு பின் கூட்டு வைத்து மக்களை முட்டாளாக்கினமே, அதைவிடவா மக்கள் உங்களை முட்டாளாக்கினர்?
Rate this:
Share this comment
Cancel
B.s. Pillai - MUMBAI,இந்தியா
14-ஜூன்-201804:03:47 IST Report Abuse
B.s. Pillai Sitaramaiah , during his C.M. period, was the height of arrogance and spreading hatred among the people against the people of Tamilnadu. River water is common to all. No one has any right to block it for their own selfish use. Riparian Act is Universal & obeyed and follwed by all countries through out the world. Even China is following it strictly. India is following it by sharing water with Pakistan . It is just because of Karnataka and its narrow minded politicians that the Government has to install a regulatory body for fair distrbution of water. What is the meaning of " One India " ? if this type of mentality prevails. Tamil Culture is to give, even when there is nothing left for themselves. Sitaramaiah's Karnataka culture is just opposite.
Rate this:
Share this comment
Krish Sami - Trivandrum,இந்தியா
14-ஜூன்-201815:26:19 IST Report Abuse
Krish SamiBrilliant....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை