லெக் பீஸ் இல்லாததால் விரல்கள் துண்டிப்பு | பிரியாணியில் லெக் பீஸ் இல்லாததால் ஆத்திரம்: ஓட்டல் அதிபர், மனைவியின் விரல்கள் துண்டிப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பிரியாணியில் லெக் பீஸ் இல்லாததால் ஆத்திரம்: ஓட்டல் அதிபர், மனைவியின் விரல்கள் துண்டிப்பு

Added : ஜூன் 13, 2018 | கருத்துகள் (29)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
பிரியாணி, லெக்பீஸ், விரல்கள், துண்டிப்பு, திருநெல்வேலி,

திருநெல்வேலி : பிரியாணியில் லெக் பீஸ் இல்லை என்ற ஆத்திரத்தில் ஓட்டல் அதிபரின் நான்கு விரல்களையும் காலையும் வெட்டியதோடு, அவரது மனைவியின் கை விரலையும் ரவுடிகள் வெட்டினர். ரவுடிகளை கண்டித்து கடையடைப்பு நடந்தது.

திருநெல்வேலியில் இருந்து முக்கூடல் செல்லும் சாலையில், பேட்டையை அடுத்துள்ள சுத்தமல்லி. அங்கு ஜாகிர் உசேன் என்பவர் நடத்தி வரும் ஒரு ஓட்டலில் நேற்று மாலையில் ஏழுபேர் கும்பல், பிரியாணி வாங்கிச் சென்றனர்.
கோபால சமுத்திரத்தில் தாமிரபரணியில் குளித்துவிட்டு, மது அருந்திவிட்டு பிரியாணி சாப்பிட்டுள்ளனர். அதில் சிக்கன் லெக் பீஸ் இல்லை என ஆத்திரமுற்றனர்.
அங்கிருந்த கிளம்பிய கும்பல், சுத்தமல்லி ஓட்டலுக்கு வந்தனர். அங்கு ஜாகீர் உசேனின் மனைவி பானு இருந்தார். அவரை சரமாரியாக தாக்கிய கும்பல் அவரது தலையிலும் கையிலும் அரிவாளால் வெட்டினர். இதில் அவரது இடது கை விரல் துண்டிக்கப்பட்டது. கடைக்குள் இருந்த ஜாகீர் உசேன் மீதும் சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இதில் அவரது வலது கையின் நான்கு விரல்களை துண்டித்தனர். ‛லெக் பீஸ் வைக்கமாட்டாயா' என கேட்டு அவரது காலிலும் வெட்டிவிட்டு தப்பிவிட்டனர்.
காயமுற்ற இருவரும் ஆபத்தான நிலையில் நெல்லை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தாக்குதல் நடத்திய ரவுடிக்கும்பல் இருப்பிடம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தும், குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை. 7 பேர் கும்பல் மீதும் பல்வேறு வழிப்பறி, கொள்ளை, அம்பையில் போலீஸ் இன்ஸ்பெக்டரை அரிவாளால் வெட்டிய வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. இருப்பினும் யாரையும் கைது செய்ய சுத்தமல்லி போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.
கடையடைப்பு : குற்றவாளிகள், ரவுடிகளின் அட்டகாசம் சுத்தமல்லியில் தினம் தினம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக வியாபாரிகள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதால் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி சுத்தமல்லியில் வியாபாரிகள் நுாற்றுக்கணக்கான கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டன. இதனிடையே மாலையில் சுத்தமல்லி சபரி 27, பேட்டை சுடலைமுத்து ஆகியோரை கைது செய்து விசாரித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajesh - Chennai,இந்தியா
16-ஜூன்-201804:28:37 IST Report Abuse
Rajesh கண்டதும் சுடனும் அவ்வளவுதான்
Rate this:
Share this comment
Cancel
தேச நேசன் - Chennai,இந்தியா
14-ஜூன்-201808:00:10 IST Report Abuse
தேச நேசன் பானு அம்மா ஆண்டவர் ஒரு கோழிக்கு இரண்டே கால்களைப் படைத்ததால் எல்லோருக்கும் லெக் பீஸ் கொடுக்கமுடியவில்லை .இனியாவது அதிக கால்களையோடு படைக்க துஆ செய்வோம்
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-ஜூன்-201807:51:43 IST Report Abuse
Srinivasan Kannaiya லெக் பிசுக்கு பதிலாக பிங்கர் பிசுக்கு ஆசைப்பட்டு விட்டார்கள்.. இதற்க்கு தண்டிக்க வேண்டும் என்றால் மதுவை ஆறாக ஓடவிடும் தமிழக அரசைதான்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X