18 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்க வழக்கில் நாளை(ஜூன் 14) தீர்ப்பு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

18 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்க வழக்கில் நாளை(ஜூன் 14) தீர்ப்பு

Updated : ஜூன் 13, 2018 | Added : ஜூன் 13, 2018 | கருத்துகள் (14)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
18 எம்.எல்.ஏ.க்கள்,MLA,எம்.எல்.ஏ.,தகுதி நீக்க வழக்கு,நாளை,ஜூன் 14,தீர்ப்பு

சென்னை : தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் நாளை(ஜூன் 14) தீர்ப்பு வழங்குகிறது.

முதல்வர் பதவியில் இருந்து பழனிசாமியை நீக்கக்கோரி, கவர்னரிடம் மனு அளித்த, சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள், 18 பேரை தகுதி நீக்கம் செய்து, கடந்த 2017 செப்.,18ல் சபாநாயகர் உத்தர விட்டார். இதை எதிர்த்து, 18 பேரும், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், நாளை மதியம் 1 மணிக்கு உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் அடங்கிய அமர்வு தீர்ப்பினை வழங்குகிறது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
13-ஜூன்-201821:38:36 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் மூணு நாளைக்கி முன்னாடி "அதிமுக ஹமாரா ஹை:" ன்னு சொல்லி முன்னோட்டம் வந்திச்சே. அதுக்கு வால்பிடிக்கும் இந்த தீர்ப்பு. எல்லாரும் மன்னிப்பு கடிதம் கொடுத்தா சேர்த்துக்கலாமுன்னு முடிவு செய்யும் உரிமையை சப்பைவிநாயகரிடம் ஐ மீன் சபாநாயகரிடம் கொடுத்துவிடுவார்கள். பதினாறு பேரை வளைத்து போட்டாகிவிட்டது என்று ஈப்பீஸே சொன்னாரே.
Rate this:
Share this comment
Cancel
Palanisamy Sekar - Jurong-West,சிங்கப்பூர்
13-ஜூன்-201821:33:18 IST Report Abuse
Palanisamy Sekar மேதகு சபாநாயரின் வானளாவிய அதிகாரத்தில் கோர்ட்டார் தலையிட விரும்பவில்லை. வேண்டுமானால் சபாநாயகரிடம் மன்னிப்பு கடிதம் கொடுத்து பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர யோசனை தெரிவிக்கும் நீதிமன்றம். அதே சமயம் அந்த மன்னிப்பு கடிதத்துக்கு சபாநாயகர் அங்கீகாரம் கொடுப்பது என்பது அவரது முடிவை பொறுத்தது. அதில் கோர்ட்டார் தலையிட முடியாது. நாளை அரசியல் மன்றம்..சாரி நீதிமன்றம் தனது உரிமையை தெளிவு படுத்தும்.
Rate this:
Share this comment
Cancel
C.Elumalai - Chennai,இந்தியா
13-ஜூன்-201820:54:09 IST Report Abuse
C.Elumalai உண்மை தான் எதற்கெடுத்தாலும், மோடி பிஜேபி காரணம் என்று, சங்கிமங்கி எல்லாம் கூச்சலிடுவார்கள்.
Rate this:
Share this comment
Cancel
a.s.jayachandran - chidambaram,இந்தியா
13-ஜூன்-201820:47:17 IST Report Abuse
a.s.jayachandran என்ன புதுசா தீர்ப்பு சொல்லப் போறாங்க எல்லாம் பழைய மொந்தையில் புதிய கள்.
Rate this:
Share this comment
Cancel
13-ஜூன்-201820:21:02 IST Report Abuse
ஸ்ரீனிவாசன்,COIMBATORE இதுக்கெல்லாம் காரணம் பாஜகவின் மிகப்பெரிய தலைவர்தான்..!! என்றாலும் மனசாட்சி உள்ள நீதிபதி சொல்லும் தீர்ப்பு தமிழ்நாட்டுக்கு நல்லது என்று நினைக்கிறேன். ஆட்சி மாற்றம் அல்லது புதுத் தேர்தல் நடந்தால் அதுதான் கரெக்ட். இ.பானர்ஜி மனசாட்சி..???
Rate this:
Share this comment
Cancel
Narasimhan - Manama,பஹ்ரைன்
13-ஜூன்-201820:14:36 IST Report Abuse
Narasimhan இது என்ன IAS பரீட்சை முடிவா? எப்போதோ தீர்ப்பு கூறியிருக்க வேண்டும். அஞ்சு பைசா பெறாத கேஸெல்லாம் வேண்டுமென்றே இழுத்தடிக்கும் நீதி மன்றங்கள் இந்தியாவில் இருக்கும் வரை முன்னேற்றம் இன்னும் ஐம்பது ஆண்டானாலும் வரப்போவதில்லை
Rate this:
Share this comment
Cancel
Muthukumaran - Kinshasa,டெம் ரெப் ஆப் காங்கோ
13-ஜூன்-201820:05:59 IST Report Abuse
Muthukumaran சபாநாயகரின் உத்தரவில் தலையிட முடியாது என்று உத்தரவு வரும். இந்த தீர்ப்பை நானே உடனடியாக எழுதுவேன். எதுக்காக வழக்கை 6 மாதம் இழுத்தடித்து பிறகு தீர்ப்பு. நீதி மன்றங்கள் தான் வழக்கை இழுத்தடிக்கிறது.
Rate this:
Share this comment
Cancel
John Shiva U.K - London,யுனைடெட் கிங்டம்
13-ஜூன்-201820:04:09 IST Report Abuse
John Shiva   U.K ஆளுநர் இந்த தீர்ப்பை முன்கூட்டியே அறிந்தபின்புதான் மோடியை சந்தித்தார்.. மோடியின் ஆலோசனையின் பேரில் இந்த தீர்ப்பு வழங்கப்படும் .இந்த நீதிபதிகளால்தான் ஊழல் நடைபெறுகிறது. நீதிபதிகள் ஒருவழக்கை விசாரித்தால் இரண்டுவாரங்களில் தீர்ப்பு வழங்க வேண்டும் .ஆனால் அரசியல் தலையீடு காரணமாக இவர்கள் வழக்கை இழுத்துக் கொண்டே போவார்கள் . தீர்ப்பு எப்படி வந்தாலும் நீதி நிலைநாட்டப் படவேண்டும் .
Rate this:
Share this comment
Cancel
kavikaavya - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
13-ஜூன்-201819:45:44 IST Report Abuse
kavikaavya Indira banerjee is going to get promotion for supreme court. Congrats madam
Rate this:
Share this comment
Cancel
ManiS -  ( Posted via: Dinamalar Android App )
13-ஜூன்-201819:24:13 IST Report Abuse
ManiS It should be Yes, so that it will be a lesson to MLAs
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை